கணபதியே வருவாய்


நாளை விநாயக சதுர்த்தி. பிள்ளையாரை பூஜித்து விக்னங்களில் இருந்து விடுபடுவோம். வேண்டிய வரங்களை பெறுவோம்.

கணேஷ அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு -> கணேஷ அஷ்டோத்தர சத நாமாவளி Ganesha Ashtothara shatha namavali

ஔவையார் அருளிய விநாயகர் அகவல் பற்றி பெரியவா வாக்கு -> தெய்வத்தின் குரலில் இருந்து விநாயகர் அகவல் பற்றிய பகுதி

விநாயகர் அகவல் ஒலிப்பதிவு -> விநாயகர் அகவல் ஒலிப்பதிவு; vinayagar agaval audio mp3

ஸ்வாமிகள் கீழ்கண்ட ஸ்லோகத்தை 63 தடவைகள் ஜபித்தால் கணபதியின் 1008 நாமங்கள் வந்து விடும். பிள்ளையாருக்கு ஒரு ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்த புண்யம் கிடைக்கும் என்று சொல்வார்கள்.

सुमुखश्चैकदन्तश्च कपिलो गजकर्णकः ।
लम्बोदरश्च विकट: विघ्नराजो विनायकः ।।
धूम्रकेतुर्गणाध्यक्ष: फालचन्द्रो गजाननः ।
वक्रतुण्ड: शूर्पकर्ण: हेरंब: स्कन्दपूर्वज: ।।

ஸுமுக²ஶ்சைகத³ந்தஶ்ச கபிலோ க³ஜகர்ணக: ।
லம்போ³த³ரஶ்ச விகட: விக்⁴நராஜோ விநாயக: ॥
தூ⁴ம்ரகேதுர்க³ணாத்⁴யக்ஷ: பா²லசந்த்³ரோ க³ஜானன: ।
வக்ரதுண்ட³: ஶூர்பகர்ண: ஹேரம்ப³: ஸ்கந்த³பூர்வஜ: ॥

பெரியவா ‘ஸ்யமந்தகமணி உபாக்யானம்’ என்ற கதையை சொல்லும் போது அதில் பிள்ளையாரின் மஹிமை வருவதால், விநாயக சதுர்த்தி அன்று அந்த கதையை கேட்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். இசைக்கலைஞரொருவர் ஸ்ரீ பெரியவாளின் திருமுன் ‘ஸித்தி விநாயகம்’ என்ற தீக்ஷிதர் க்ருதியைப் பாடியபின், அவர்கள் அவரிடம் ஸாஹித்யத்தைப் பதம் பதமாகக் கேட்டு, நடு நடுவே அர்த்தமும் கூறினார்கள். சரணத்தில் வரும் ‘ரௌஹிணேய அநுஜார்ச்சிதம்’ என்பதற்கு, “ரோஹிணியின் புத்ரன் ரௌஹிணேயன். இங்கே ரோஹிணி என்பது சந்த்ர பத்னி இல்லை; வஸுதேவ பத்னி. அவளுடைய பிள்ளையான பலராமரே ரௌஹிணேயன். அவருக்குத் தம்பி, அதாவது க்ருஷ்ணர்தான், ரௌஹிணேய அநுஜன்; அநுஜன் என்றால் தம்பி. பலராமரின் தம்பியான க்ருஷ்ணனால் அர்ச்சிக்கப்பட்டவர் பிள்ளையார் என்பதால் ‘ரௌஹிணேயாநுஜார்ச்சிதம்’ என்று சொல்லியிருக்கிறது. க்ருஷ்ணருக்கு எத்தனையோ பெயரிருக்க, சுற்றிவளைத்து இப்படி ‘ரோஹிணியின் பிள்ளைக்குத் தம்பி என்பானேன்?’ என்றால் – இந்த “ரோஹிணி” சப்தத்தைக் கேட்டால் உடனே சந்த்ரன் நினைவு வரும், அதனால் சந்த்ரனைப் பார்த்த தோஷத்துக்காகத்தான் கிருஷ்ணர் பிள்ளையாரை அர்ச்சனை பண்ணினாரென்பதும் நினைவுக்கு வரட்டும் என்றே இப்படிப் பாடியிருக்கிறார் போலிருக்கிறது” என்று விளக்கம் அருளினார்.
ஸ்யமந்தகமணி உபாக்யானத்தை இங்கே கேட்கலாம் – -> ஸ்யமந்தகமணி உபாக்யானம்Categories: Upanyasam

Tags: , , ,

3 replies

  1. For us (the regular visitors of this blog), Ganapati (Ganapathy Subramanian) has already come.

  2. I think 11th naama should be Phaalachandra. please verify. Regards.

Leave a Reply

%d bloggers like this: