உலகம் முழுவதும் ஒரு தொற்று நோயால் பீடிக்கபட்டு இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. ஆனாலும், சரிந்த பொருளாதாரம் மீண்டும் நிமிர பல மாதங்கள், ஏன், வருடங்கள் கூட ஆகலாம். இந்த நேரத்தில் காமாக்ஷி தேவி, ஒருமுறை காஞ்சீ தேசத்தில் தங்க மழையை பொழியச் செய்து, பஞ்சத்தை போக்கிய விவரத்தை அறிந்து கொள்வோம். மூக பஞ்சசதீ ஸ்துதி சதகம் 74வது ஸ்லோகத்தில் அந்த விவரம் வருகிறது.
மஹா பெரியவா வறுமை விலக இந்த ஸ்லோகத்தை சொல்லி பிரார்த்திக்கும்படி 1957 சென்னை உபன்யாசத்தில் அருளி இருக்கிறார்கள். ஆனால் அந்த ஸ்லோகத்தில் ‘என் வறுமை விலக வேண்டும்’ என்ற பிரார்த்தனை இல்லை. ‘என் புத்தியில் உள்ள கோணல்களை போக்க வேண்டும்’ என்ற பிரார்த்தனை தான் இருக்கிறது. அதாவது முதலில் நல்ல புத்தியை, விவேகத்தை கொடுத்து, பின்னர் செல்வத்தையும் கொடுக்க வேண்டும் என்று கேட்பது போல அமைந்துள்ளது.
இயற்கை நமக்கு இந்த தொற்று நோயின் மூலம் சில பாடங்களை கற்பித்துள்ளது. காமாக்ஷி தேவி மீண்டும் கருணை செய்யும் போது, அந்த பாடங்களை மறக்காமல் இருப்போம். போக வாழ்கையை விட, நிம்மதியான சுக வாழ்வை வேண்டிப் பெறுவோம்.
ஸ்லோகத்தின் பொருளை இந்த இணைப்பில் காணலாம் -> காஞ்சியில் பெய்த தங்கமழை
Categories: Upanyasam
நாம் காமாஷி பாதாரவிந்தத்தை பிடித்து , ஸ்துதி. செய்து ,அவள் கடாஷத்தை பெறுவோம். லோகா ஸமஸ்தா சுகினோ பவந்து 🙏🙏🙏