பிறகு நான் எதற்கு?

Beautiful incident from Mahabharatham shared by Sri Krishnan Srinivasan in Twitter!

பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு ஜோதிடத்தில் முக்காலமும் அறியும் ஆற்றல் கிடைக்க பெற்றது எப்படி தெரியுமா?

பாண்டு உயிர் பிரியும் தருண‌த்தில் மகன்கள் ஐவரையும் அனைவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்யவேண்டாம் என்றும் , மாறாக பிய்த்து தின்று விடும்படியும்,அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்ற‌ல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான். பாண்டவர்களும் அவர்களது தந்தை பாண்டு சொன்னபடி செய்ய திட்டமிடும் போது அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார். விஷயத்தை கேட்டவுடன் பாண்ட‌வர்களை திட்டுகிறார்.

“சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத்தான் புத்தி பிசகிவிட்டதென்றால் , உங்களுக்கு என்ன ஆனது? யாராவது பிணத்தை தின்பார்களா? வாருங்கள் விற‌கு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம்” என்று பாண்டவர்களை அழைத்துச்செல்கிறார்.

மிருகங்கள் பாண்டுவின் உடலை இழுத்துச் சென்றுவிடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள். அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் த‌ன் த‌ந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்றுவிடுகிறான். உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி கிடைத்து விடுகிறது.

விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள். கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார். ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது. அதுமற்ற‌வர்கள்கண்களுக்கு தெரியவில்லை. சகாதேவனுக்கு மட்டும் அது தெரிகிறது. கிருஷ்ணரும் மிக களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டுவிட்டு அமர்கிறார்.

அவரருகில் சென்ற சகாதேவன் , கண்ணா! எல்லோரும் விறகைசுமந்துவந்தார்கள். அவர்கள் க‌ளைப்பாவது நியாயம். உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்துதானே வந்தது. நீ ஏன் களைத்த‌து போல‌ நடிக்கிறாய்?என்று கேட்கிறான். உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கிவிடுகிறது. சகாதேவனை தனியே அழைத்துச் சென்று அவர் விபரம் கேட்க, சகாதேவன் தனநு தந்தை பாண்டுவின் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான்.

எதிர்காலம் தேவ ரகசியம் என்றும், இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார். சகாதேவனுக்கு தெரிந்த எதிர்காலம் தொடர்பான விஷயங்களை எப்ப்போதும் , எவரிடமும் சொல்லகூடாது என்று சகாதேவனிடம் சத்தியத்தை கிருஷ்ணர்  வாங்கிக் கொள்கிறார்.

தனக்கு முக்காலமும் முக்காலமும் உணரும் ஜோதிடக்கலை ஆற்றல் தெரியும் என்ற ஆணவத்தால் சகாதேவனுக்கு சற்று கர்வம் அதிகமாகிவிட்டது. துரியோதனன், பாண்டவர்களை அழிப்பதற்கு, போருக்கான சிறந்த நாளை கணித்துக் கொடுக்கும்படி சகாதேவனிடம் கேட்க , சகாதேவனும் நாளைக் குறித்துக்கொடுக்கிறான். அந்தளவிற்கு அவன்  ஜோதிடக்கலையில் உண்மையாக இருந்தான்.

போரில் கர்ணன் இறக்கும் தருவாயில்தான், கர்ணன் தன் உடன்பிறந்தவன் என்ற உண்மை அவனுக்கு தெரியவருகிறது. இதனால் தனக்கு தெரிந்த முக்காலமும் உணரும் ஜோதிடக்கலையில் இந்த உண்மையை தெரிந்து கொள்ளமுடியவில்லையே என்று ஜோதிடத்தில் நம்பிக்கை இழக்கிறான்.

18 நாள் நிகழ்ந்த குருஷேத்திரப் போர் முடிவடைந்த பின் சகாதேவன் கிருஷ்ணனைப் பார்த்து, “கிருஷ்ணா!ஜோதிடம் என்பது பொய்தானே?” என்று கேட்கிறான். அதற்கு கிருஷ்ணன் “ஜோதிடத்தில் அனைத்தும் அறிந்த நீயே இப்படி கூறலாமா?” என்று சொல்கிறார்..

“ஜோதிடத்தில் அனைவருடைய பிறப்பு ரகசியமும் என் கணிதத்தில் தெரிந்து கொண்டேன். ஆனால் கர்ணன் என் உடன்பிறந்தவன் என்ற ரகசியம் என் ஜோதிட கணிதத்தில் வரவில்லை. அப்படியென்றால் ஜோதிடம் பொய்தானே கிருஷ்ணா?” என்று மீண்டும் கேள்வி எழுப்பினான் சகாதேவன்.

இதை பொறுமையாக கேட்ட கிருஷ்ணன் சொன்னார் “அனைத்தையும் நீ ஜோதிடத்தில் தெரிந்துகொண்டால் பிறகு நான் எதற்கு???” இந்த பதிலைகேட்டவுடன் சகாதேவனுக்கு தூக்கிவாரிப்போட்டது. அடங்கியது அவன் கர்வம்.

தங்கள் கணிதத்திறமையை எடுக்கமுடியும். மீதி 1% கடவுளின் பிடியில் மட்டுமே!

இந்த ரகசியமானது காஞ்சிமகா பெரியவரிடம் இருந்து உதிர்ந்தது

 

 



Categories: Devotee Experiences

7 replies

  1. Mahaperiyava would not have said this

  2. Why don’t you ask the person himself who has shared it in twitter? This is the problem with any information shared in FB or Whatsapp or twitter. Most of the people will post without confirming the source.
    To me this story looks unbelievable. In Ramayana also, there is a book called Apoorva Ramayanam which tells a lot of stories not found in either Valmiki Ramayanam or KambaRamayanam.
    It is better if such stories could be verified through great Upanyasakas such as Brahmasree Sundar Kumar.

  3. Mahesh ji,

    Not sure if this is a story from Mahabharatha. Could someone please confirm?

    Also, no proof that it has been told by Periyava.

    Request you to verify the contents

    • I read Periyava had said that sthala Puranams may contain stories not mentioned in ithihasas but still true. Going by that logic this story doesn’t seem out of place. Just my opinion

    • To me, deivathin kural is the only source to verify if Periyava had said this or not – for most part. The person who shared this in twitter does not seem like one who writes something that isn’t true. I dont know him – so can’t be sure.

  4. This is not found in Mahabharatha and Maha Petiyava would not have said this story.

  5. It’s so beautiful. This illustrates how He employs His Mayai inscrutable to shape us.

Leave a Reply

%d bloggers like this: