இஷ்ட தெய்வத்திடம் ஏக பக்தி பண்ணுவது என்றால் என்ன?

கற்றறியேன் கலைஞானம் கசிந்துருகேன் ஆயிடினும்
மற்றறியேன் பிறதெய்வம் வாக்கிய லால் வார்கழல்வந்
துற்றிறுமாந் திருந்தேன்எம் பெருமானே அடியேற்குப்
பொற்றவிசு நாய்க்கிடுமா றன்றேநின் பொன்னருளே

என்று மாணிக்க வாசகர் திருவாசகத்தில் பாடுகிறார். இதன் பொருள் – எம்பெருமானே – எம்பிரானே, கலை ஞானம் கற்றறியேன் – ஞான நூல்களைப் படித்து அறியேன்; கசிந்து உருகேன் – மனம் கசிந்து உருகவும் மாட்டேன்; ஆயிடினும் – ஆயினும், வாக்கு இயலால் – வாக்கின் தன்மையால், பிற தெய்வம் – வேறு தெய்வங்களை, அறியேன் – துதித்து அறியேன்; அதனால், வார்கழல் வந்து உற்று – உன்னுடைய நீண்ட திருவடிகளை வந்து அடைந்து, இறுமாந்து இருந்தேன் – இறுமாப்பு அடைந்து இருந்தேன், அடியேற்கு – அடியேனாகிய எனக்கு, நின் பொன் அருள் – உன் பொன் போன்ற திருவருளைப் புரிந்தது, நாய்க்கு – நாயினுக்கு, பொன் தவிசு – பொன்னாலாகிய ஆசனத்தை, இடுமாறு அன்றே – போலல்லவா?

இப்படி, ஒரு தெய்வத்தையோ  ஒரு குருவையோ முழுமையாக சரண் அடைந்து பக்தி செய்யும் அடியவருக்கு, தகுதிக்கு மேலான பெரிய அனுக்ரஹத்தை பகவான் பண்ணுவார் என்பது இந்த பாட்டிலிருந்து தெரிகிறது.  பிற தெய்வங்களுக்கு அவர்கள் இரண்டாம் இடத்தை அளித்தாலே போதும் என்றும் தெரிகிறது. ஆனால், பிற தெய்வங்களையோ மகான்களையோ அவர்கள் குறைத்து பேசவோ, அவமதிக்கவோ அனுமதி இல்லை. அது பெரிய அபசாரம் ஆகிவிடும். இஷ்ட தெய்வத்திடம் ஏக பக்தி பண்ணுவது என்றால் என்ன என்பதைப் பற்றி பெரியவா, சார், ஸ்வாமிகளிடம் இருந்து நான் அறிந்து கொண்டதை இங்கே பகிர்ந்துள்ளேன் -> கடாக்ஷ சதகம் 46வது ஸ்லோகம் பொருளுறை – மற்றறியேன் பிற தெய்வம்



Categories: Upanyasam

Tags:

1 reply

  1. Maha Periyava Charanam!!

    Excellent timely message for me!! And this pic is definitely one to be treasured!!

    Jaya Jaya Sankara!! Hara Hara Sankara!!

Leave a Reply

%d bloggers like this: