ராமோ ராமோ ராம இதி

ராம ராஜ்யம் எப்படியிருந்தது? அங்க திருடர்களே கிடையாது, எல்லாரும் க்ஷேமமாக இருந்தா, சத்யசந்தர்களாக இருந்தா, தர்மபரர்களா இருந்தா, எல்லாரும் பேராசைப் படமால் தன்னுடைய தொழிலையே பண்ணிண்டு இருந்தா, எல்லாரும் சந்தோஷமா இருந்தா, பிறர் பொருளுக்கு ஆசைப்படலை. புஷ்பங்களும், பழங்களும் நன்னா கிடைச்சுது. ஸஸ்யங்களும் தானியங்களும் ஸமிருத்தியாக கிடைச்சுது, ஒவ்வொவொருத்தரும் மாடுகளும், குதிரைகளும், தேர்களும் யானைகளும் வெச்சிண்டு சௌக்யமாயிருந்தா அப்படினு வரும். ஆரம்பத்துல தசரதர் ராஜ்யத்தை வர்ணிக்கும்போதே, அந்தமாதிரி செழிப்பான அமராவதிக்கு நிகரான அயோத்யா பட்டணம், கோசல தேசம்னு வரும். அப்போ ராம ராஜ்யத்துக்கும் தசரத ராஜ்யத்துக்கும் என்ன வித்யாசம்னா

ராம ராஜ்யத்துல ஜனங்களெல்லாம்

ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவன் கதா: |

ராமபூதம் ஜகத் அபூத் ராமே ராஜ்யம் பிரஷாஸதி ||

“ஜனங்களெல்லாம் ராமா ராமான்னு ராமருடைய கதைகளையே பேசிண்டு உலகம் ராம மயமாக ஆனந்த மயமாக ஆகிவிட்டது” அப்படின்னு ஒரு ஸ்லோகம் இருக்கு. இதுதான் ராம ராஜ்யத்துக்கும் தசரத ராஜ்யத்துக்கும் உள்ள வித்யாசம், தசரத ராஜ்யத்துல ராம கதையை பேச முடியாது. ஏன்னா ராமர் அப்போ பிறக்கவே இல்லயே. அப்படி ராம ராஜ்யத்துல இந்த ராமருடைய கதைய எல்லாரும் பேசிண்டு இருந்தா, அதனால ரொம்ப சந்தோஷமா இருந்தா, ராம மயமா ஆனந்த மயமா இருந்தா. ஸ்வாமிகள் இந்த இடத்துல சொல்வார் “நாமளும் ராமருடைய கதையை பேசிண்டு இருந்தா, இன்னிக்கும் என்னைக்கும் சந்தோஷமா இருக்கலாம். நமக்கு ராமர் தான் ராஜா”

மீதியை இங்கே கேட்கலாம் -> ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாம் அபவன் கதா:Categories: Upanyasam

Tags:

2 replies

  1. மாமி சொல்லியதைப் போல பொருத்தமான நேரத்தில் பொருத்தமான பதிவு. ராமர் பட்டாபிஷேகம் நடந்தது ஆண்ட சமயம் நாம் இருக்கவில்லை. இப்போது உள்ளோம். நம் பாக்யம். நீங்கள் சொல்லியதைப் போல தசரதர் ராஜ்யத்தில் ராமகதை பேச முடியாது அருமை. ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் 🙏🙏🙏🙏

  2. இன்றைய தினத்துக்குப் பொருத்தமான பதிவு இது !
    அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோவில் அடிக் கல் நாட்டு விழா நடக்கும் தினத்தில் அவர் ஸ்மரணையில் ஸ்ரீ ராம் ஜய ராம் ஜய ராம் என்று நம் பெரியவா சொல்படி 108 முறை ஜபிக்க மறுபடி ராமராஜ்யம் தளத்து ஓங்க அனைவரும் ராம நாமம் ஜெபிப்போம்!!
    ஸ்ரீ ராம் ஜய ராம் ஜெய் ஜெய் ராம்!!

Leave a Reply to Latha Srinivasan Cancel reply

%d bloggers like this: