தண்ணளியால் காமாக்ஷித் தாயார் போல்


இன்றைக்கு பௌர்ணமி. பூர்ண சந்திரனை தரிசனம் பண்ண காத்திருக்கிறோம். ஆனால் மேகம் மூடி விட்டால் சந்திர தரிசனம் கிடைப்பது அரிது. அப்படி இல்லாமல் என்றும் ஒளிவிடும் சந்திரன் உண்டா? உண்டு என்கிறார் ஆசார்யாள். சிவானந்த லஹரியில் ஒரு ஸ்லோகத்தில், மிகுந்த புண்ணியம் செய்த பக்தர்களின் மனதில் உதிக்கும் பூர்ண சந்திரனாக பரமேஸ்வரனை வர்ணிக்கிறார். ஒவ்வொரு வரியும் சிவபெருமானுக்கும், அதே நேரத்தில் சந்திரனுக்கும் பொருந்தும்படியாக அமைந்திருக்கும் அற்புதமான ஒரு ஸ்லோகம். -> சிவானந்தலஹரி 38வது ஸ்லோகம் பொருளுரை
இதே இணைப்பில் ஒரு மூக பஞ்ச சதீ ஸ்லோகத்தையும் விளக்கி உள்ளேன். மூக கவி அம்பாளின் மந்தஸ்மிதத்தை சந்திரிகையாக வர்ணிக்கிறார். உதடு என்னும் சிவந்த பால சூரியனின் அருகில் ஒளிவிடும் சந்திரன் என்கிறார். சூரியன் அருகில் சந்திரன் ஒளி விடுமா!  மஹாபெரியவா ஞான சூரியனாக இருந்தாலும் பூரண சந்திரனைப் குளிர்ந்த கருணையால் காமாக்ஷித் தாயார் போல் நம்மிடம் பரிவு காட்டி அபயம் அளித்ததை பெரியசாமி தூரனும் பாடி இருக்கிறாரே.

காமகோடி பீடமதன் கதிரொளியே
கண்ணொளியால் அருள் வழங்கும் அற்புதமே
அருமறைத்தேன் பொழிமுகிலே
ஆனந்தப் பெருவெளியில் ஆடுகின்ற பூரணமே
தருணமதை நோக்காமல் காரணமும் கருதாமல்
தண்ணளியால் காமாக்ஷி தாயார் போல் முகமலர்ந்து
பரிவுடனே அபயகரம் காட்டும் ஒரு கற்பகமே
பதமலரே தஞ்சமென்று வந்தடைந்தேன், ஏற்றருளே !!

– பெரியசாமி தூரன்



Categories: Upanyasam

Tags:

Leave a Reply

%d bloggers like this: