மனஸி மம காமகோடி விஹரது

இன்று ஆடிப் பவுர்ணமி. ஆறு மாதங்களுக்கு முன்னால் தைப் பௌர்ணமி அன்று இந்த வலைதளத்தில் எழுத ஆரம்பித்தேன். இன்று ஆவணி அவிட்டம் கூட. புதுப் பூணல் போட்டுக் கொண்டு, ரிஷிகளை பூஜை, ஹோமம், தர்ப்பணம் முதலியவற்றால் திருப்தி செய்து, வேத அத்யாயனத்தை துவங்கி, இன்றிலிருந்து நல்ல பிராமணனாக இருப்பேன் என்று சங்கல்பம் செய்து கொள்ளும் நாள். நல்ல பிராமணன் என்றால் என்ன? ரிஷிகள் சொன்ன ஜப தபங்களைச் செய்து விவேக, வைராக்கியத்தை வளர்த்துக் கொள்வது, தூய்மையில் உயர்வது என்று அர்த்தம்.

அதோடு கூட, தூய்மையில் உயர்ந்து, ஞானத்தோடு விளங்கிய பெரியவா, கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் போன்ற மகான்களைப் பற்றி பேசுவதும், கேட்பதும், உண்மையை சொல்ல வேண்டுமானால், ஜப தபங்கள் செய்வதைவிட பிடித்தமானதாக தான் இருக்கிறது இல்லையா! இவற்றின் மூலமாகவும் தூய்மை ஏற்படும் என்ற ஒரு நம்பிக்கையும் நமக்கு இருக்கிறது. ஸ்வாமிகளின் வாழ்க்கையில் நடந்த ஒரு ரசமான நிகழ்ச்சியை இன்று உங்களோடு பகிர்கிறேன் -> புரமதன புண்ய கோடீ

இவற்றை மீண்டும் மீண்டும் அசை போடுவதின் மூலமாக, காமாக்ஷி தேவியும், பெரியவா, ஸ்வாமிகள் போன்ற மகான்களும் நம் மனதில் என்றும் வசிக்க வேண்டும். அது மூலமாகவும் விவேக வைராக்கியம் பெற்று, தூய்மையில் உயரவேண்டும்  என்று வேண்டிக்கொள்வோம்.



Categories: Upanyasam

Tags: ,

2 replies

  1. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
    HARA HARA SANKARA JAYA JAYA SANKARA
    OM SRI MATRE NAMAHA

  2. பட்டாபிஷேக சமயத்தில் ப்ரவசனம் செய்பவர்கள் இந்த கட்டத்தை ரஸமாக கூறுவார்கள். இந்த நன்னாளில் இந்த ஸ்லோகம் சொல்லும் போது, காமாக்ஷி, ராமனுடன், பூர்வாஷ்ரம கல்யாணராமனையும் சேர்த்து நினைப்பது,எங்கள் புண்யகோடி. 🙏🙏

Leave a Reply

%d