முதியர்வகளுக்கு மரியாதை

Thank you Karthikeyan for the share
பெரியவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது பல. இன்றைய இளைஞர்கள் , பெரியவர், வயதில் முதிர்ந்தவர்களுடன் பேசும் விதம், அவரது பாவனை நம்மை சிந்திக்க வைக்கும். அந்த பாவனை எல்லோரிடமும் இருந்தால், முதியோர் இல்லத்திற்கு தேவையே இருந்து இருக்காது.
ஒரு சமயம், சுமார் என்பது வயதுக்கு மேல் இருக்கும் ஒரு அரசாங்க அதிகாரி , பெரியவா அவர்களை பார்க்க வந்திருந்தார்கள். அந்த அரசாங்க அதிகாரி திரு.நரசிம்ஹ ராவ் அவர்கள் கீழ் பணி புரிந்து நாட்டிற்கு நல்ல சேவை செய்தவர். அவர் உடல் நலக் குறைவின் காரணமாக, (wheel chair)சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு பெரியவா அவர்களை தரிசனம் செய்ய வந்தார்கள். பெரியவா பூஜை முடிக்கும் வரை காத்துக் கொண்டு இருந்தார்கள்.
பெரியவா அவர்களைப் பார்த்தவுடன், அரசாங்க அதிகாரி இருக்கும் wheel chair (சக்கர நாற்காலி)யை நோக்கி நடந்து சென்றார்.அவரின் வெகு அருகாமையில் சென்று நின்று கொண்டார். அதிகாரி எழுந்து மரியாதை செய்ய முயன்றார். பெரியவா அவர்களை அமர்ந்து கொள்ளும் படி கூறினார். அந்த அதிகாரி நாட்டிற்காக நீண்ட காலம் ஆற்றிய தொண்டையும், கல்வித்துறையில் அவரின் சேவையை பட்டியல் செய்து பாராட்டினார். சுமார் முப்பது நிமிடங்கள் அவர் அருகில் பெரியவா நின்று கொண்டே பேசிக் கொண்டு இருந்தார்.
பெரியவா, வயதில் முதிர்ந்த மூத்தவருக்கு கொடுத்த மரியாதை அங்கிருந்த அனைவருக்கும் ஒரு பாடமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறன். பெரியவா அவர்களின் நிதானமான பேச்சு, சிரித்த முகம், அனைவருடன் பேசிப் பழகும் குணம், யாரையும் குறை சொல்லாத ஸ்வபாவம், மற்றவர்களுக்காக தன் நேரத்தை ஒதுக்கி வைத்து அவர்களுக்கு அனுக்ரகம் செய்தல் போன்றவை நாம் கற்றுக் கொள்ளவேண்டியது.


Categories: Devotee Experiences

1 reply

  1. jAYA JAYA SANKARA HARA HARA SANKARA. SARANAM SARANAM

    JANAKIRAMAN, NAGAPATTINAM

Leave a Reply

%d bloggers like this: