ஆச்சார்யாள் சிவானந்த லஹரியில் “சம்போ லோககுரோ! மதீய மனஸ: சௌக்யோபதேசம் குரு” “பரமேஸ்வரா! என் மனத்துக்கு இன்பத்தை அளிக்கும் ஒரு உபதேசத்தை தந்தருளுங்கள்” என்கிறார்.
மஹாபெரியவா தெய்வத்தின் குரலில், ஏகாதசி விரதம், சஹஸ்ர காயத்ரி, சிகை, பஞ்சகச்சம், பெண்களுக்கு காலத்தில் விவாகம் முடித்தல், பரோபகாரம், என்று பல உபதேசங்களை செய்திருக்கிறார், அவற்றில் நம்மால் எவ்வளவு கடைப்பிடிக்க முடியும் என்று பிரமிப்பாக இருக்கும் போது, இந்த ஐந்து நிமிட பெரியவாளின் வாக்கு பரம சௌக்கியமான உபதேசமாக இருக்கிறது. எது முடியவில்லை என்றாலும் நம்மால் இதை செய்ய முடியும் என்று தோன்றுகிறது. கேட்டுப் பாருங்கள் –> பகவத்கீதை 8வது அத்யாயம் 6வது ஸ்லோகம் மஹாபெரியவாளின் வியத்தகு விளக்கம்
மேற்கண்ட உபன்யாசத்தின் எழுத்து வடிவம்
இப்படி ஆரம்பித்து, முடிந்த முடிவாக, பக்தியின் மூலமாகவே ஜீவன் முக்தியை அடைய முடியும் என்று ஆச்சார்யாள் சொல்வதையும், அதை பெரியவா அதை நடத்தி காட்டியதையும் இந்த சிவானந்தலஹரி விளக்க உரையில் கேட்கலாம். –> சிவானந்தலஹரி 81வது ஸ்லோகம் பொருளுரை
Categories: Upanyasam
Leave a Reply