அன்றாட காரியங்களோடு சொல்லக்கூடிய ஸ்லோகங்கள்; Associate slokams with daily activities


Saints recommend slokams to their devotees to come out of difficulties or to obtain boons. But they also want us to chant slokams daily as a duty. For this reason,they also associate slokams with our daily routine work and even happy occasions. This will cultivate the habit of doing bhakti as a duty. I will share some slokams from mooka pancha shathi to explain what I mean and later you can associate your own favourite slokams (using their meaning) to your favorite activities and occasions and extend this list.

மஹான்கள் தம் பக்தர்களுக்கு, ஏதேனும் கஷ்ட நிவர்த்திக்காகவோ அல்லது இஷ்ட பிராப்திக்காகவோ ஸ்லோகங்களைச் சொல்லித் தருவது வழக்கம். ஆனால் அவர்கள், நாம் இந்த ஸ்லோகங்களை நித்யம் கடமையாக படிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால் நம் அன்றாட காரியங்களின் இடையிலேயேயும், நாம் கொண்டாடும் விசேஷங்களிலும் கூட ஸ்லோகங்களை சொல்ல வழிகாட்டுகிறார்கள். இப்படி செய்துகொண்டே வந்தால் பகவானை வழிபடுவது ஒரு கடமையாகி விடும். பக்தி வளரும்.

எனக்கு பிடித்த மூக பஞ்ச சதியிலிருந்து அப்படி சில ஸ்லோகங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இது போல நீங்களும் உங்களுடைய பிடித்தமான ஸ்லோகங்களை (அர்த்தத்தை வைத்து), உங்களுக்கு பிடித்தமான காரியங்களோடு இணைத்துவிட்டால், நாள்பட பகவானை வழிபடுவது ஒரு கடமையாக மாறி விடும்.

முருக பக்தர்கள் காலையில் எழுந்தவுடன்

‘காலையில் எழுந்து உன் நாமமே மொழிந்து
காதல் உமை மைந்த என ஓதிக்
காலமும் உணர்ந்து ஞான வெளி கண்கள்
காண அருள் என்று பெறுவேனோ’

என்ற திருப்புகழை ஓதுவார்கள். காமாக்ஷியின் கடாக்ஷம் என்ற சூரியன் என் மனத்தாமரையை மலரச் செய்யட்டும் என்ற இந்த ஸ்லோகத்தையும் சொல்லலாம். –> ஹ்ருத்பங்கஜம் மம விகாஸயது – கடாக்ஷ சதகம் 58வது ஸ்லோகம் பொருளுரை

ஸுமங்கலிகள் வகிட்டுப்பொட்டில் குங்குமம் இட்டுக் கொள்ளும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லலாம் –> காமாக்ஷி குங்குமம் – ஸ்துதி சதகம் 3வது ஸ்லோகம் பொருளுரை

தினமும் சமைக்க அரிசி எடுக்கும் போது

‘அன்னபூர்ணே ஸதாபூர்ணே, சங்கர ப்ராண வல்லபே |
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி ||
மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேஸ்வர: |
பாந்தவா: சிவபக்தாஸ்ச ஸ்வதேசோ புவனத்ரயம் ||

என்று சொல்வார்கள். அதோடு மஹாபெரியவா சொன்ன பிடி அரிசி திட்டத்துக்கு ஒரு பிடி அரிசியை பானையில் போடும் போது இந்த ஸ்லோகத்தை சொல்லலாம் –> ஹே காமாக்ஷி! அன்னபூரணியும் நீயே! – ஆர்யா சதகம் 89வது ஸ்லோகம் பொருளுரை

ஸ்வாமிகள் தன்னுடைய பக்தர்கள் வீடு கட்டி க்ருஹப்ரவேசம் செய்தால், அந்த க்ருஹத்தில் இந்த ஸ்லோகத்தை சொல்வார்கள் –> மங்களங்களைத் தரும் காமாக்ஷி மந்தஸ்மிதம் – மந்தஸ்மித சதகம் 33வது ஸ்லோகம் பொருளுரை



Categories: Upanyasam

Tags: ,

8 replies

  1. நேற்று உறங்கி காலை எழுந்ததும் கைகளை விரித்து சொல்ல வேண்டிய ஸ்லோகம் பார்த்தோம்!

    நிலத்தில்.கால் ஊன்றி எழும் போது சமுதர் வசநே தேவி பர்வத ஸ்தன மண்டலே , விஷ்ணு பத்நி நமஸ்து யம் பாத ஸ்பரிசம் ஷமஸ்வமே. என பூமி தேவியைப்.பிரார்த்தித்து விஷ்ணு பத்நியான வளேபேரும் நிலப்.பரப்பை ஆடையாக உடுத்தினவளே நான் உன் மீது காலை வைத்து எழுவதை பொருத்தருள்வாயாக என்று வேண்டி மெதுவாகக் காலை ஊன்ற வேண்டும்.
    ஸ்நானம் செய்யும்போது சகல நதிகளின் தீர்த்தமும். மந்திர ரூபமாக
    அப்போ தீர்த்தத்தில் சகல நதிகளின் ஜலமும் மந்திர ரூபமாக ஆவாகனம் செய்து பண்ணலாம் எப்படி? கங்கே ச யமுனா தேவி, கோதாவரி, சரஸ்வதி நரமதே சிந்து காவேரி தீர்தேஸ்மின் சந்நிதிம் குரு என்ற ஸ்லோகம் சொல்லி மந்திர ரூபமாக ஆவாகனம் செய்யலாம் ! அங்கு சகல நதிகளும் வருவதாக நம். முன்னோர் நம்பிக்கை ! அது போல், பூஜை செய்யும்போது கலச பூஜை செய்வோம் i இல்லையா அப்போதும் சோம்பு தீர்த்தத்தில்
    இந்த s ஸ்லோகம் சொல்லித்தான்
    கட பூஜை செய்கிறோம்!
    கங்கா தீர்த்தம் ஸ்ரீதர் அய்யர் வாள் வீட்டுக் கிணற்றில் ஆவிர்பவிக்க வில்லையா ?
    எல்லாம்.பூர்ண நம்பிக்கை ஒன்றே ஆதாரம்.!!

    மூண்டும் பார்க்கலாம்..
    ஜய ஜய சங்கரா

  2. நாம் தினந்தோறும் விடியற் காலையில் எழுந்து தரிசனம் செய்ய வேண்டியது நம் உள்ளங்கைகளை , ஏனெனில் அவைதாம் நாம் செய்யும் காரியங்களுக்கு உறு துணையாய் இருப்பது ! ஆகையால் உள்ளங்கைகளை உரசி தரிசனம் செய்து ” கராக்ரே வசதே லட்சுமி கர மத்யே சரஸ்வதி கர மூலேது கோவிந்தா பிரபாதே கற தர்சனம் என்ற ஸ்லோகத்தை சொல்லி உள்ளங்கைகளில்தான் விழிக்க வேண்டும்.
    இதன் பொருள் உள்ளங்கையின் நுனியில் லட்சுமி வாசம், உள்ளங்கை நடு பாகத்தில் சரஸ்வதி கை தொடங்கும் .இ டத்தில். கோவிந்தன் வசிக்கிறார்கள்! அப்படிப்பட்ட புனிதமான கைகளை நான் காலையில் தரிசனம் செய்கிறேன்” என்ற பொருள் கொண்டது!
    நாமும்.பின் பற்றலாமே.
    மேலும் வரும்.
    ஜய ஜய சங்கரா…

  3. Thank you for sharing🙏

  4. Ganesh Sir –

    We are driven by so many desires and hatred. We reap for what we did do and didn’t do.

    Is there a sloka in Muka Pancha Sati which is our surrender at Her feet ; to give us the wisdom to not perform actions which would cause us more misery ; also if possible to alleviate our misery?

    Thanks

    • विशुष्यन्त्यां प्रज्ञासरिति दुरितग्रीष्मसमय-
      प्रभावेण क्षीणे सति मम मनःकेकिनि शुचा ।
      त्वदीयः कामाक्षि स्फुरितचरणाम्भोदमहिमा
      नभोमासाटोपं नगपतिसुते किं न कुरुते ॥

      விஶுஷ்யந்த்யாம் ப்ரஜ்ஞாஸரிதி து³ரிதக்³ரீஷ்மஸமய-
      ப்ரபா⁴வேண க்ஷீரண ஸதி மம மன:ரககினி ஶுசா ।
      த்வதீ³ய: காமாக்ஷி ஸ்பு²ரிதசரணாம்போ ⁴த³மஹிமா
      நபோ⁴மாஸாடோபம் நக³பதிஸுதே கிம் ந குருதே॥ 78 ॥

      காமாக்ஷியே! ‘நக³பதி சுதே’ – மலையரசனின் மகளே.. ‘ப்ரஜ்ஞா’ – அப்படின்னா ஞானம், நல்லறிவு… ‘ப்ரஜ்ஞாஸரிதி’ – ஞானம்ங்கிற ஒரு ஓடைன்னு சொல்லலாம் இல்லே நதின்னு சொல்லலாம்… அந்த நதியானது ‘து³ரிதக்³ரீஷ்மஸமய’ – என்னுடைய பாபங்கள் என்ற கோடைக் காலத்துனால ‘விஶுஷ்யந்த்யாம்’ – வத்திப் போயிடுத்து. இப்ப அங்க நதி இருந்த இடத்துல ஒண்ணுமே இல்லை. நதியே இல்லை. அதாவது என் ஞானமும்… குரு சொன்னபோது தெளிவா இருந்த மாதிரி இருந்தது. அதுவும் வத்தின மாதிரி இருக்கு. ‘க்³ரீஷ்மஸமய- ப்ரபா⁴வேண’ – என்னோட பாபங்கள் என்ற கோடை காலத்தின் பிரபாவத்தினால் என் மனசிலிருந்த ஞானம்கிற நதி வத்திப் போயிடுத்து. அப்ப என் மனமாகிய மயில்… அது ரொம்ப க்ஷீணமா இருக்கு. மனசு வாடியிருக்கு அப்படிங்கிறதை மூக கவி இவ்ளோ கவித்துவமா சொல்றார். ‘த்வதீ³ய: காமாக்ஷி ஸ்பு²ரித சரணாம்போ ⁴த³ மஹிமா’ – உன்னுடைய பாதமாகிய மேகம்… அதனோட மஹிமையினால… காமாக்ஷி! ‘நபோ⁴மாஸாடோபம்’ – ஆவணி மாதத்தோட காரியத்தை… அதாவது… அந்த அநுகிரஹம்ங்கிற மழையை… ‘கிம் ந குருதே’ – ஏம்மா பண்ணலை. நான் மனசு கெட்டு, பாபச் செயல்கள் பண்ணி… என் மனசு வருந்தியிருக்கு… அறிவிழந்து நான் நிக்கறேன். உன்னுடைய சரணம்… அந்த மேகம் பொழிஞ்சுதுன்னா, என் மனமாகிய மயில் திரும்பியும் சந்தோஷத்துல நர்த்தனமாடும்.

      • Ganesh Sir –

        Thank you so much for sharing this. As i have said before you have paripoorna kadaksham of your Guru Shri Govinda Damodara Swamigal and through Him Ambe Shive Kamakshi.

        Blessed are you.

        sincerely

  5. பெரியோர்கள், மஹான்கள் வழி நடத்திய தேசம் இது,! பாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்று பாரதியார் பாடினார் !! எத்தகைய உண்மை ! இந்த சனாதன தர்மத்தில் தோய்ந்து, அனுபவித்தால் புரியும் ! இந்தக் காலத்தில் சாஸ்திர, சம்பிரதாயம் அறியாமல், நம் போன்று அறிந்த மனிதர்களைக் கேலி செய்து மகிழும் உலகம் இது !
    ஒவ்வொரு செயலுக்கும்.ஒவ்வொரு பலன் உண்டு ! அது போல் மந்திர சப்தம், ஒலி இவை அளவற்ற நன்மை பயக்கக் கூடியது ! ஒவ்வொரு ஸ்லோகமும் ஆழ்ந்த கருத்துடையது ! நன்மை அளிக்க வல்லது ! ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பலன் ! அம்பாளை, சப்த ரூபமாக, ,சக்தி ரூபமாக, வண்ண ரூபமாக, நிதிறா ரூபமாக, புத்தி ரூபமாக, சாந்தி ரூபமாக ..இப்படி பல ரூபமாக பார்க்கிறோம் நாம் ! ஆகவே எந்த ஒரு கஷ்டத்துக்கும் நம்மிடம் பரிகாரம் உள்ளது! ஜகஜ்ஜனநி !!
    ஒவ்வொரு ஸ்லோகம் காலை கன் விழித்ததிலுந்து, இரவு உறங்கும் வரை எதெதுக்கு எந்த ஸ்லோகம் என்பதை நாளை தொடங்கி சொல்வேன்.
    ஜய ஜய சங்கர…

  6. JAGADGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM

Leave a Reply to Saraswathi ThyagarajanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading