சைவ சமய குரவர்களான (குரு என்ற சம்ஸ்கிருத பதத்தின் பன்மை குரவ: அதைத்தான் தமிழில் குரவர்கள் (guravargal) என்று சொல்கிறோம். குறவர்கள் (kuravargal) என்று சொல்லிவிடக் கூடாது.) திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சைவ சமயம் தழைக்க வந்த அவதார மகான்கள் ஆவர்.
மஹாபெரியவா தன்னுடைய உபன்யாசங்களில் நால்வர் அருளிய தேவார, திருவாசகத்தில் இருந்து நிறைய பதிகங்களை மேற்கோள் காட்டி பேசி இருக்கிறார்கள். ஓதுவாமூர்த்திகளைக் கொண்டு அவற்றைப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்வார்கள்.
இன்று மஹாபிரதோஷம். சிவனடியார்கள் ஆன இந்த நால்வரின் சரித்திரத்தை கேட்டு மகிழ்வோம் –>
சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம்
Categories: Upanyasam
நன்றி ஸ்ரீ கணபதிசுப்ரமணியன்.
சமய குரவர்கள் என்பது சரி.
சமயக் குரவர்கள் என்பது சரியல்ல.
சரியானமுறையில் கையாண்டதற்கு நன்றி.
இதைப்பற்றி எனது தமிழாசிரியர் பாடம் சொல்லியது நினைவு வருகிறது.
அருமையான சொற்பொழிவு !! சமயக் குரவர்கள் பற்றிய விவரமான பதிவு அதுவும் உகந்த நாளான பிரதோஷ வேளையில்!
பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து என்ற மாணிக்கவாசகர் வாக்கின்படி ச்ருங்காரத்தினால் மன ஒற்றுமையுடன் வாழச் செய்யும் காம சாஸ்திரத்தின் உட்பொருளை விளங்கும் தேவி பரம சிவனைப் பரவசப் படுத்தும் ச்ருங்கார அத்வைத சாஸ்திர சித்தாந்த ரூபி! அந்த தேவியை நாம் வணங்கி ஞான சம்பந்தர் தேவி ஸ்தன்ய பானத்தினால் அடைந்த பேறை அடைவோம் என்ற கருத்துடைய மூல பஞ்ச சதி ஸ்லோகம் தக்க எடுத்துக் காட்டு இங்கே!
ரொம்ப மனம் நெகிழ்ந்து பிரதோஷ வேளையில் அனுபவிக்க செய்த கணபதிக்கு என் நன்றி பல கோடி!!