பெளமாஶ்வினி புண்யகாலம்

சில நட்சத்திரங்களும் கிழமைகளும் சேரும் போது, அந்த நாட்கள் அமிர்த சித்தி யோக தினங்கள் என்று சொல்லப்படுகின்றன. அப்படிப்பட்ட விசேஷமான புண்ணிய தினங்களில் தெய்வங்களை பூஜித்தால் மிகுந்த பலன் கிடைக்கும்.

மேலே உள்ள காணொளியில் நம் ஆச்சார்யாள், வரும் ஜூன் 16ம் தேதி அஸ்வினி நட்சத்திரமும், செவ்வாய் கிழமையும் சேரும் பெளமாஶ்வினி என்ற புண்ணிய காலத்தை பற்றி குறிப்பிட்டு, அந்த நாளில் பராசக்தியை பூஜை, மஞ்சள் குங்குமம் தானம் செய்வது, லலிதா சஹஸ்ரநாமம், துர்கா சந்திரகலா ஸ்துதி, சௌந்தர்யலஹரி போன்ற ஸ்தோத்திரங்களின் பாராயணம், நைவேத்யம் முதலியவற்றால் திருப்தி செய்து, இடர்களை போக்கிக் கொண்டு, சுகாதாரமும், பொருளாதாரமும் மேம்பட்டு, சந்தோஷ வாழ்க்கையை அடையலாம் என்று அருளி இருக்கிறார்கள்.

துர்கா சந்திரகலா ஸ்துதி ஒலிப்பதிவு; durga chandrakala stuthi audio mp3 -> http://valmikiramayanam.in/?p=4331

இந்த சார்வரி வருடத்தின் மற்ற அமிர்த சித்தி யோக நாட்களும், பூஜா சங்கல்பமும், துர்க்கா சந்திர கலா ஸ்துதியும், கீழே உள்ள அறிவிப்பில் தரப்பட்டுள்ளது.

இந்த சார்வரி வருடத்தின் மற்ற அமிர்த சித்தி யோக நாட்கள்

ஆச்சார்யாள் இதே செய்தியை தெலுங்கிலும் ஹிந்தியிலும் அளித்துள்ளார்கள்.Categories: Announcements

Tags: , ,

8 replies

 1. காலத்துக்குத் தகுந்த சரியான நேரத்தில் பகிரப்பட்ட செய்தி இது! இன்றூலகம் இருக்கும் ஸ்திதியில் யாவருமிந்த புண்ய தினத்தில் ஆற்ற வேண்டிய பாராயணம் பூஜை! thanks a ton to Ganapathy!

  வரும் செவ்வாய்க்கிழமை ஓர் புனித தினம் என்று கருதப்படுகிறது!
  செவ்வாய்க் கிழமை, அஸ்வினி நக்ஷத்ரம் கூடிய தினம்! பௌம
  வாஸரம் என்பது செவ்வாய்க்கிழமை. இது துர்கைக்கு உகந்த நாள்.
  துர்கை ஆபத்துக்களை,, கஷ்டங்களை போக்குபவள்! அதனால்தான்
  எந்தவித இடையூறாகியினும் துர்கா ஸ்தோத்ரம் பாராயணம்
  செய்யும் வழக்கம் நம்மிடையே உள்ளது!

  என்சிறு வயதில் என் அப்பா பெரியவாளிடம் என் அம்மா உடல் நலம்
  குறித்துக் கவலை தெரிவித்தபோது, துர்கா சப்த ச்லோகி ஸ்தோத்ரத்தை
  பாராயணம் செய்யுமாறு பணித்தார். என் அப்பா வியாபார நிமித்தம் அடிக்கடி
  வெளியூர் செல்லும்படி இருந்ததால் தான் எப்படிச் செய்வது என்று கவலை
  தெர்வித்தபோது பெரியவா கலயாணத்துக்கு இருக்கும் உன் பெண்ணைச்
  செய்யச் சொல் என்று அருளினார்! அது என் பாக்யம்!

  ஈசான்ய மூலையில் பலகையில் கோலமிட்டு, அதன்மேல்தீபம் ஏற்றி,
  ஒன்பது முறை துர்கா சப்த ச்லோகி பாராயணம்,ஒவ்வொரு
  பாராயணம் முடியும்போது, ஒரு ப்ரதக்ஷிண நமஸ்காரம் இப்படியாக
  ஒன்பதுமுறை செய்ய வேண்டும்.
  நானும்பெரியவா சொன்னதை அப்படியே கடைபிடித்துச் செய்தேன்
  அம்மா பூர்ண குணம் அடைந்தாள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா
  இதை நான் பலரூக்குச் சொல்லியவர்களும்பலன் அடைந்தனர்?
  இதனை ஒரு மண்டலம் செய்யச் சொன்னா பெரியவா.
  பல வித அம்பாள் ச்லோகங்கள் உள்ளன எது நன்றாகத்
  தெரியுமோ அதனைப் பாராயணம் செய்யவும். அத்துடன் ஏகாதசி
  சேர்வதால் நாரயணீயம், அல்லதுக்ருஷ்ண ஸ்லோகங்களும்
  பாராயணம்செய்யலாமே

  செவ்வாய், அஸ்வினி கூடிய இந்த தினத்தில் பெரியவா
  அறிவுரையின் படி அனைவரும் இதனைக்கடைபிடித்து,
  தற்போது நிலவி வரும் ஆபத்தான சூழ் நிலையிலிருந்து
  தப்பலாமே!

  ஜய ஜய சங்கரா….

 2. Also one small doubt please. I heard that women are not supposed to do sankalpam. Is that true. Pls clarify. Thanks in advance

  • If that’s what you heard from elders, then follow it. Make a firm resolve in mind (sankalpam) to finish the pujai or parayanam and pray for the well being of dear and near and the whole world and finish the pujai or parayanam. Hear the video again and follow it in the spirit of what Periyava says.

 3. மமோபாத்த​ + ப்ரீத்யர்த்தம், பகவத்யா: ஜகதம்பாயா: ப்ரஸாதேன
  ௧) இதாநீம் லோகே ஸர்வத்ர​ ப்ரஸ்ருதஸ்ய​ ஸாங்க்ராமிக​-ரோக​ விஶேஷஸ்ய​ நிஶ்ஶேஷம் உந்மூலநார்த்தம்
  ௨) அஸ்மத்- தேஶீயாநாம் விதேஶீயாநாம் சாபி ஸர்வேஷாம் வ்யாதி-பய​-நிவ்ருத்யர்த்தம்
  ௩) ஸஞ்சார​-ப்ரதிஷேதாத் ஸஞ்சாதஸ்ய​ ஶுபகார்ய​-ப்ரதிபந்தஸ்ய​ உத்யோகாதி-ப்ரதிபந்தஸ்ய​ தஜ்ஜந்யாயா: ஆர்த்திக​-து:ஸ்த்திதேஶ்ச​ பரிஹாரார்த்தம்
  ௪) ஸர்வேஷாம் தார்மிக​-அநுஷ்டாநாநாம், மந்திராதிஷு பகவத​: பூஜா-உத்ஸவாநாம் ச​ யதாபூர்வம் ஶீக்ரமேவ​ ப்ரவ்ருத்யர்த்தம்
  ௫) ஜநாநாம் துர்விசார​-நிவ்ருத்தி-பூர்வக​-ஸத்விசார​-அபிவ்ருத்யர்த்தம்
  ௬) ஸாதூநாம் தார்மிகாணாம் ச,​ தைர்ய​-விஶ்வாஸ​-புஷ்தி-ஸித் த்யர்த் தம், அதார்மிக​-ஶக்தீநாம் விநாஶார்த்தம்
  ௭) தத்-த்வாரா ஸர்வ​ லோக​- க்ஷேமார்த்தம்

  -(mention your stotram here)——–ஸ்தோத்ர​ பாராயணம் கரிஷ்யே

 4. Namaskaram🙏🙏🙏
  In the above link the sankalpam and dates are in Sanskrit. But few of my friends want the sankalpam and dates in tamil. Request you to post in tamil too. So that i can share with them

Leave a Reply

%d bloggers like this: