திருஞானசம்பந்தர் இசை நாடகம்

குழந்தைகளே பாடி நடித்த திருஞானசம்பந்தர் என்ற இந்த இசை நாடகத்தை கண்டு மிக ரசித்தேன். உங்களோடு பகிர்கிறேன். ஞானசம்பந்தரின் வாழ்க்கையிலிருந்து எல்லா காட்சிகளையும் மிக நேர்த்தியான நடிப்பினால் நம் கண்முன்னால் கொண்டுவந்து விடுவதோடு அந்தந்த நிகழ்ச்சியின்போது ஆளுடைப் பிள்ளை பாடிய பதிகங்களையும் மிக இனிமையாக பாடி குழந்தைகள் நம்மை அசத்துகிறார்கள் இதில் 5 வயதிலிருந்து 16 வயது வரை ஞானசம்பந்தரின் வயதிற்கேற்ப, ஏழு குழந்தைகள் ஞானசம்பந்தர் ஆக நடித்துள்ளார்கள். மேலும் அப்பர், பாண்டிய மன்னன், பூம்பாவை, சிவஞானஹ்ருதயர் என எல்லா பாத்திரங்களையும் குழந்தைகளே ஏற்று மிகத் திறமையாக நடித்திருக்கிறார்கள். நாடக வடிவாக்கம் – வலயப்பேட்டை திரு கிருஷ்ணன். குழந்தைகளுக்கு பாடி நடிக்க கற்றுத் தந்தவர் – திருமதி பவ்யா ஹரிCategories: Announcements

2 replies

  1. ஶிவாயா குரவே நம:

    தமிழை ரசிக்கும் முன் அத்தமிழ் பாடல்களை பகர்ந்த அச்சிறார்களின் ஈடுபாட்டை கண்டு, கேட்டு, ரசித்து மகிழ்தேன். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த ஆசிகள். அவர்களனைவருக்கும் கல்வியும், சீரிய உடல்நலமும், செல்வமும், தமிழ் மற்றும் சமுதாயத்திற்கு தொண்டு செய்யும் எண்ணமும் எத்தருணமும் பெற்றிட வாழ்த்துகிறேன்.

    எம்பெருமான் ஶிவனின் பாடல்களை கேட்டு எத்துணை முறை கண்ணீர் செறிந்தேனோ நான் அறியலேன். என்னை இத்துணை ஆனந்த கடலில் ஆழ்த்திய கணபதி சுப்ரமணியன் அவர்களுக்கு எத்துணை முறை நன்றி கூறினும், அவை குறைவே எனத் தோன்றுகிறது.

    வாழ்க உங்கள் தொண்டு…… ஜய ஜய ஶங்கர….. ஹர ஹர ஶங்கர……

Leave a Reply

%d bloggers like this: