காமாக்ஷி சங்கர காமகோடி சங்கர

இந்த வருஷம் மஹாபெரியவா ஜயந்தி வைகாசி அனுஷம், பௌர்ணமி அன்று வருகிறது. மூகபஞ்சசதீ யில் சில ஸ்லோகங்கள் முழுக்க முழுக்க பெரியவாளையே வர்ணிப்பது போல அமைந்திருக்கும். அப்படிப்பட்ட சில ஸ்லோகங்களை பார்ப்போம்.

ஆர்யா சதகம் 29வது ஸ்லோகம் பொருளுரை – ஆனந்த அமுதக்கடல்

ஆர்யா சதகம் 28வது ஸ்லோகம் பொருளுரை – எகாம்ரநாத ஜீவிதம் ஏவம் பததூரம் ஏகம் அவலம்பே

மந்தஸ்மித சதகம் 48வது ஸ்லோகம் பொருளுரை – கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்Categories: Upanyasam

Tags:

3 replies

 1. புன்னகை மாறாத முகத்துடன் காஞ்சியில் குடிகொண்டவளும்,
  கருணையே உருக்கொண்ட வடிவினளும் ஆகிய காமாக்ஷியை
  நாம்பல முறை தரிசித்தால் நம்மனம் ஆனந்தம் எனும்
  அம்ருதக் கடலில் மூழ்கி மேலும்மேலும் தரிசிப்பதை நம்ம்
  மனம் விழைகிரது !
  ஈது எல்லாம் நம்மஹா பெரியவாளுக்கும் அப்படியே
  பொருந்துகிறாற்போல் அமைந்த சொற்கட்டுகள் அல்லவா?

  மானின் ம்ருட்சியைப் போல் விளங்கும்கண்களை உடையவள் ,
  தன்னையே த்யானிக்கும் பக்தர்களின் வினைகளைப் போக்குபவள்,
  ஏகாம்ரனாதனின் ப்ரியத்துக்குப் பாத்திரமானவள், கல்யாண
  குணங்களை எடுத்துரைக்க முடியாதவளாகிய அந்த மங்கள
  ஸ்வ்ரூபமான காமாக்ஷியைப் பற்றுக்கோலாக கொண்டுள்ளேன்
  என்ற பொருளில் வருவது ஆர்ய சதகத்தின் 28வது ஸ்லோகம்.

  காமாக்ஷியின்முகமண்டலத்திலிருந்து வெளிப்படும் புன்சிரிப்பு,
  நிலவை ஒத்ததாக உள்ளது! அறிஞ்க்னரைக் காணும்போது,
  ஒளிமிகுதியாகவும்(தாமரை, சூர்யனைக்கண்டதும் மலர்கிரது)
  அதுபோல் இங்கு உபமானம் அம்பாள் வதனமெனும்தாமரை
  சூர்யன் என்று இங்கு குறிப்பிடும் அறிஞரை !

  தன்னை த்யானித்து வணங்கும் அன்பர்களை அறியாமையை
  நீக்குவதும்,ஆகிய செயல்களை அவள் புன்சிரிப்பு விலக்குகிறதாம்!!

  இவை எல்லாமே பெரியவாளுக்கும் உகந்த வர்ணனை அல்லவா?

  ஆனந்த ஸாஹஸ்த்வத்தில் தீக்ஷிதர் உன் கடாக்ஷம்
  லோகத்தை ஸ்ருஷ்டிக்கிறது, காக்கிறது, அழிக்கிறது
  ,ஆனால் நான் உன் கருணையை மட்டுமே நம்பி
  சரணடைகிறேன் எங்கிறார்!
  பட்டர் அன்னையே என் நெஞ்சில் மண்டியிருக்கும்
  மலமெனுமழுக்குகளை உன் அருட்பார்வையால்
  போக்குகிறாய் உன்னைத் தவிர , உன் திருமேனியை
  அன்றி பிற எதையும் நினைக்க மாட்டேன் என்று
  சொல்கிறார்! இது அன்னையிடம்மட்டும் வைக்கும் அன்பு!!
  ஈதுவே பெரியவாளுக்கும் எல்லாவிதத்திலும்
  பொருந்தும்!
  கனிவான பார்வை, நோகச் செய்யாத பேச்சு, குளிர்ந்த
  சந்த்ரன் போன்ற திருமுகம் !1
  வேறென்ன வேண்டும் பக்த கோடிகளுக்க் ?

  அதனால்தான் சகல ஜனங்களும் அன்னை காமாக்ஷியை
  தரிசிக்கும் அதே பெரியவா தரிசனத்திலும் பேரின்பத்தை
  அடைந்தனர் என்பதை அழகாகஎடுத்துரைக்கிறார் கணபதி!

  ராமாயணம் படித்து,கேட்டு அனுபவிக்கறவாளோட புத்தி
  அவ்வளவு சுத்தம் ஆயிடறது சொல்வது முற்றிலும்
  பொருந்தும் இங்கு!

  காமாக்ஷி த்யானம்பெரியவா த்யானமிருந்தால் நமக்கு
  வேறு எதுவும்தேவையே இல்லையென்பது சத்ய வாக்கு!

  அதற்குத் தக்க குரு வழிகாட்டுதல் வேண்டும்!

  ஜய ஜய சங்கரா…

  ஜய ஜய ஜகதம்ப சிவே…

 2. Anega Koti koti namaskarams to sri Kanchi Mahaswami..

Leave a Reply

%d bloggers like this: