ஆத்மஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம:


காமாக்ஷியின் கடாக்ஷம் கருப்பாக இருக்கிறது. அதில் அம்பாள் எப்போதும் மை இட்டுக் கொண்டு இருக்கிறாள். பார்வை அங்கே இங்கே சலித்துக்கொண்டே இருக்கிறது. இப்படி இருந்தாலும், இந்த கடாக்ஷம், வணங்கும் பக்தர்களுக்கு வெண்மையும், அதாவது தூய்மையும், ஈஷிக்காத தன்மையும், மன உறுதியையும் தருகிறதே! இதெப்படி! என்று ஒரு கடாக்ஷ சதக ஸ்லோகத்தில் வரும்.

कामाक्षि कार्ष्ण्यमपि सन्ततमञ्जनं च
बिभ्रन्निसर्गतरलो‌
sपि भवत्कटाक्षः ।
वैमल्यमन्वहमनञ्जनतां च भूयः
स्थैर्यं च भक्तहृदयाय कथं ददाति ॥


காமாக்ஷி
கார்ஷ்ண்யமபி ஸந்ததமஞ்ஜனம்

பி³ப்ரன்நிஸர்க³தரலோபி வத்கடாக்ஷ:

வைமல்யமன்வஹமனஞ்ஜனதாம் பூ:

ஸ்தை²ர்யம் ச ப⁴க்தஹ்ருʼத³யாய கத²ம் த³தா³தி ॥

கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் வாழ்க்கையிலிருந்து பல நிகழ்ச்சிகளைக் கூறி, ஸ்வாமிகளுடைய தூய்மையும், ஜனங்களிடம் ஈஷிக்காத தன்மையும், பகவானிடத்தில் உறுதியான பக்தியையும் இங்கே விளக்கியிருக்கிறேன். -> அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு

அப்பேர்பட்ட ஸ்வாமிகளின் பக்திக்கு கிடைத்த பலன் என்ன தெரியுமா? மஹாபெரியவா அழைத்து, தனக்கு பாகவதம் படிக்கச் சொன்னது தான். அந்த பாகவத ஸப்தாஹத்தை எவ்வளவு தீவிரமாக, ஒரு ஞான யக்ஞமாக, ஸ்வாமிகளும் மஹாபெரியவாளும் செய்திருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டால்தான் அதன் பெருமையை உணர முடியும். அதை இங்கே விவரித்து இருக்கிறேன்.-> மஹாபெரியவா சன்னிதியில் ஸ்வாமிகள் செய்த சப்தாஹம்

இவற்றையெல்லாம் அறிவதால் எனக்கென்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம். आत्मज्ञं ह्यर्चयेद् भूतिकाम: ‘ஆத்மஞம் ஹி அர்ச்சயேத் பூதிகாம:’ என்று உபநிஷத் வாக்யம். இவ்வுலகில் செல்வத்தை விரும்புபவன் ஞானிகளை பூஜிக்க வேண்டும் என்று பொருள். அப்படி இந்த மஹான்களின் மஹிமையை பேசினால், கேட்டால், நினைத்தால் நமக்கு வேண்டிய படிப்பு, பணம், அழகு, புகழ் மற்றும் விரும்பிய எல்லா ஆசைகளையும் மகான்களுடைய அனுக்ரஹம் பூர்த்தி செய்யும்.  ஆனால் அனுக்ரஹத்தால் பேறுகளை பெற்றால், அது கொஞ்சம் வித்யாசமாக இருக்கும். அதையும் ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியோடு இணைத்து இங்கே விளக்கியிருக்கிறேன். கேட்டுப் பாருங்கள். -> வேண்டிய போதடியர் வேண்டிய போகமது அளிக்கும் காமாக்ஷி கடாக்ஷம்Categories: Upanyasam

Tags: , , ,

4 replies

 1. Excellent

  Selvakrishnan

 2. மஹான்களைப்பற்றி பேசினால்,கேட்டால்,நினைத்தால், அந்த மஹான்கள் அனுக்ரஹத்தால் அனைத்தும் கிடைக்கும். அத்தகய மஹான் கோவிந்த தாமோதர ஸ்வாமிகளைப்பற்றி பேசுவதே மூச்சாக உள்ள கணபதி ப்ரவசனம் கேட்பதே நாம் பெற்ற பெரும் பாக்யம்

  குருமூர்த்தே த்வாம் நமாமி காமாஷி

  🙏🙏🙏🙏

 3. “புத்தி ராது, புத்திராது,, பெத்தல ஸுத்துலு வினக புத்திராது- பூரி வித்யல நேர்ச்சின”
  எத்தனை கற்றிருந்தாலும் பெரியோர்களின் உபதேச மொழியில்லாமல் விவேக புத்தி வராது என்பார் ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள்.
  மஹான்களுடன் பழகுவது பெரும் பாக்யம்!

 4. அற்றைக்கிரை தேடி அத்தத்திலுமாசை பற்றித் தவியாத பற்றைப்
  பெறுவேனோ என்று காஞ்சிபுரம் அதிகாரத்தில் ஓர் திருப்புகழ் !

  நாம் வாழ்வில் ஒவ்வொருவரும் மனதில் நிலை நிறுத்திக்
  கொள்ள வேண்டிய ஒன்று!!

  பணம் சம்பாதிப்பது இரை தேடுவது என்ற எண்ணத்தில் நம்
  வாழ்க்கை அனேகமாகக் கழிந்து விடுகிறது. பணத்தை பற்றித் தவியாத மனம் நம் போல் சாமானியர்களுக்கு
  வராது ! அதற்கு பக்குவப்பட்ட சதா இறை சிந்தனை
  கொண்ட மனம்,செயல் இரண்டும் வேண்டும்.

  ஸ்வாமிகள் மாதிரி பூர்ண ஞானிகளுக்குத் தான்
  அப்படிப்பட்ட மனம், செயல் இயற்கையாகவே
  இருக்கும் !! அது பூர்வ ஜன்மாத்ர சுகிர்தம்!

  நாம் யாவரும் பொருள் ஈட்டி சேமிக்கும் அனுபவிக்கும்
  சாதாரண ப்ரஜைகள்! ஞானிகளது வரலாறு அவர்தம்பெருமையைக் கேட்டால், அறிந்தாலே நமக்கு புண்யம் கிட்டும்.அந்த வகையில் கணபதி அவர்கள் ப்ரவசனத்தின் மூலம் ஸ்வாமிகளது எளிய வாழ்க்கை, பற்றற்ற தன்மை இவை யாவும் கண்முன் தோன்றுகிறாற்போல் அமைந்துள்ள பொக்கிஷம் இந்த ப்ரவசனம்!!
  என் போன்ற ஸ்வாமிகளை தரிசிக்கும் வாய்ப்பற்ற கடையருக்கு ஓர் அரிய வாய்ப்பு !!
  ஸதா ஸ்வாமிகள் குருவாயுரப்பன் பஜனத்திலும் அம்பாள்
  த்யானத்திலும் வாழ் நாட்களை நடத்தியது அசாத்யமான
  செயல்!
  பெரியவா ஒரு முறை இவர் தேவி உபாஸகர். ஆனால் பாகவத
  ப்ரவசனம் செய்பவர்! என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டதை
  ஏடுகளின் வாயிலாக அறிந்திருக்கிறேன்.
  இப்பேற்பட்ட மஹானுடன் 20 வருஷங்கள் அவர்தம் நிழலில்
  இருந்து அரிய விஷயங்களைக் கற்க எப்பேற்பட்ட பாக்யம்
  கணபதி செய்திருக்கிறார்!!
  காமாக்ஷியின் கண்கள் கருமை நிறம் கொண்டது. மேலும் மை
  இட்டதால் கரு நிறத்தோடு மேலும் மாசோடு, நிலையில்லாமல்
  சுற்றி வருகிறது. ஆயினும் பக்தர்கலுக்கு பாச பந்தம் இன்றி
  தூய்மையான நிலையும், அதற்கும் மேலாக திடத் தன்மையும்
  அளிக்க வல்லதாக உள்ளது!! என்ன அழகான பொருள் பொதிந்த ஸ்லோகம்!! விளக்கம் கணபதியின் வாயிலாக மிக அருமை!1
  ஜய ஜய ஜகதம்ப சிவே……

Leave a Reply

%d bloggers like this: