காமாக்ஷி மந்தஸ்மிதம் என்னும் கங்கை நதி

சென்ற வருடம் இந்த மே மாதம் இரண்டாம் வாரத்தில், குடும்பத்தோடு ஹரித்வார் ரிஷிகேஷ் போயிருந்தோம். பனி உருகி, வெகு வேகமாக கரைபுரண்டு ஓடி வரும் கங்கையைப் பார்ப்பதே ஆனந்தம். கங்கையின் குளிர்ந்த நீரில் குளிப்பது பேரானந்தம். ஹரித்வாரில் மானசா தேவி கோவில் தரிசனம், மாலையில் கங்கா மாதாவிற்கு ஆரத்தி. ரிஷிகேசத்தில் கீதா பவன், ராம் ஜூலா லக்ஷ்மண ஜூலா, சுழித்தோடும் கங்கையில் தெப்பத்தில் நாமே செலுத்திக்கொண்டு போவது (river rafting) என்று பல இனிமையான நினைவுகள்.

பாரத தேசத்தில் எத்தனையோ புண்ணிய நதிகள் இருந்தாலும், பரமேஸ்வரனின் அங்கத்தில் பட்டு கீழே விழுந்ததும், விஷ்ணுவின் பாதங்களை அலம்பிக் கொண்டு வருவதுமான கங்கைக்கு என்றும் தனிச்சிறப்பு உண்டல்லவா? ராமாயணத்தில் விஸ்வாமித்திரர், ராம லக்ஷ்மணர்களுக்கு, பகீரதன் பெருந்தவம் செய்து, ஆகாச கங்கையை, பூமிக்கும், பாதாள லோகத்திற்கும் கொண்டு சென்றதைச் விரிவாகச் சொல்கிறார். அப்போது ‘பவாங்க பதிதம் தோயம் பவித்ரம் இதி பஸ்ப்ருஷு:’ ‘கங்கை பரமேஸ்வரனின் உடம்பில் பட்டு வருவதால் மேலும் புனிதம் அடைந்து விட்டது’ என்று சொல்லிக்கொண்டு தேவர்களும் ரிஷிகளும் அதில் நீராடினார்கள் என்று கூறுகிறார்.

மூக பஞ்ச சதியில், மூக கவி நிறைய கங்கையை ஸ்மரிக்கிறார். அதில் இரண்டு ஸ்லோகங்களின் அர்த்தத்தை பார்ப்போம்.

அம்பாளின் பாதாரவிந்தத்தை, கங்கைக் கரையில் உள்ள ஒரு ரத்ன மாளிகையாக வர்ணிக்கும் ஸ்லோகத்தை, இந்த சிவானந்த லஹரி பொருளுரையில் மேற்கோள் காட்டி விவரித்து இருக்கிறேன். இரண்டு ஸ்லோகங்களும் ‘நிம்மதியை எங்கும் தேடிப் போக வேண்டாம். இருந்த இடத்தில் அது உனக்கு கிடைக்கும்’ என்று புரிய வைக்கும் ஸ்லோகங்கள். இன்றைய நிலைமையில் மிகவும் தேவையான ஒரு கருத்தல்லவா? ->  சிவானந்தலஹரி 11, 12 ஸ்லோகங்கள் பொருளுரை

“இனிமையும், குளிர்ச்சியும், தூய்மையும் கங்கையிலும் உள்ளது. காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற கங்கையிலும் உள்ளது. அது என்னை தூய்மைப் படுத்தட்டும்” என்ற அழகான பிரார்த்தனை கொண்ட ஸ்லோகத்தை, இந்த மீனாக்ஷி பஞ்சரத்னம் பொருளுரையில் மேற்கோள் காட்டி விவரித்து இருக்கிறேன் ->  மீனாக்ஷி பஞ்சரத்னம் 4, 5 ஸ்லோகங்கள் பொருளுரைCategories: Upanyasam

Tags: , ,

2 replies

 1. Namaskaram, Great chance to read this.. Shri Mahaperiyava blessings..

  • பக்தி என்றால் சிவானந்த லஹரிதான்!! எப்படிப்பட்ட பிறவி எடுத்தாலும் மனிதனோ தேவனோ, வன விலங்குகளின், பூச்சி புழுவோ உன் பாதாரவிந்தா பாஜனம் மட்டும் கொடு என்று சொல்றார் பகவத் பாதர்.
   அது போல் பிரம்மச்சாரியாக வோ கிருஹஸ்தன், சன்யாசி எந்த ஆச்ரமத்திலும் ஈசன் அடி நீழல் ஒன்றையே தியானிக்கும் நிலை வேண்டும் என்று ஸ்துதிக்கிரார் !
   வீட்டிலோ, குகையிலோ, காட்டிலோ இங்கு வசித்தாலும் பரமேஸ்வரா பஜனத்தில் ஸதா என் மனம் நிலைக்கட்டும் என்று ஒர் ஸ்துதி!!
   ஆனந்த சாகரஸ்த்வம் என்ற ஸ்தோத்திர மாலையில் திரு நீலகண்ட தீக்ஷிதர் அவர்கள் அம்பாளின் பாத பத்மங்களைப் பற்றி சொல்கிறார் எப்படி ? உன் மலரனைய பாதம் வெண்ணெய் போன்ற மிருதுத் தன்மை உடையது ! சிவந்திருப்பது ஏனென்றால் உபநிஷத் ஆகிய உத்யாவனத்தில் நீ நடை பழகியதால் இருக்குமோ என்ற வினா எழுப்புகிறார்!
   காலத்தில் மூழ்குபவன் கையில் பட்டதைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வான் . சம்சார சாகரத்தில் மூழ்கும் எனக்கு நீதான் கதி .. உன் பாத பதுமாத்தை இறுக p பிடித்துக் கொண்டேன். நோகச் செய்த குற்றத்தைப் பொருத்தருள் அம்மா என்று மணமுருகப் பிரார்த்தனை செய்கிறார் தீக்ஷிதர் ! மேலும் மனதை உன் பாதாரவிந்தத்தில் சமர்ப்பிக்கிறேன், அது மிருது வானால் பாதுகையாக வைத்துக் கொள் இல்லாவிடில் விவாக சமயத்தில் உபயோகிக்கும் அம்மியாக வைத்துக் கொள் என்று மனம் உருகச் சொல்கிரார்.எவ்விதத்திலும் உன் சரண ஸ்பரிசம் கொடு அம்மா என்று வேண்டுகிறார்!
   அருணகிரியார் சாரணங்களை அளிக்கத் தருணம் இதையா என்று நேக்குருகிறார்! பாத ஸ்பரிசம் என்னதான் செய்யாது?

   அன்னப்பறவை சப்தம் ஒலிக்கும் நூபுரங்கள் கொண்டதும், கங்கை போன்று ஆர்ப்பரிக்கும் தன்மை உடையதுமான பாதத் தாமரைகள் உதய காலத்தில் அருணச் சாயை போல் சிவந்துள்ளது ! அது என் நெஞ்சில் எப்போதும் குடி கொள்ளட்டும் என்று மூல கவி பாதத் தாமரைகள் ளை வர்ணிக்கிறார்!
   மலர்ப் பாதங்களைப் பற்றினால் வேறென்ன வேண்டும் உய்ய ?
   அழகுபட எல்லா மேற்கோள்களுடன் வர்நித்திருக்கிறார் கணபதி !
   ஜய ஜய ஜாகதம்பா சிவே….

Leave a Reply

%d bloggers like this: