இன்னிக்கு சித்ரா பௌர்ணமி. காமாக்ஷியின் மந்தஸ்மிதத்தை நிலவாக வர்ணிக்கும் ஒரு மூக பஞ்ச சதீ ஸ்லோகம் பார்ப்போம்.
द्रुह्यन्ती तमसे मुहुः कुमुदिनीसाहाय्यमाबिभ्रती
यान्ती चन्द्रकिशोरशेखरवपुः सौधाङ्गणे प्रेङ्खणम् ।
ज्ञानाम्भोनिधिवीचिकां सुमनसां कूलङ्कषां कुर्वती
कामाक्ष्याः स्मितकौमुदी हरतु मे संसारतापोदयम् ॥
த்³ருஹ்யந்தீ தமஸே முஹு: குமுதி³னீஸாஹாய்யமாபி³ப்⁴ரதீ
யாந்தீ சந்த்³ரகிஶோரஶேக²ரவபு:ஸௌதா⁴ங்க³ணே ப்ரேங்க²ணம் ।
ஜ்ஞாநாம்போ⁴நிதி⁴வீசிகாம் ஸுமனஸாம் கூலங்கஷாம் குர்வதீ
காமாக்ஷ்யா: ஸ்மிதகௌமுதீ³ ஹரது மே ஸம்ஸாரதாபோத³யம் ॥ 13 ॥
இதற்கு நேர் அர்த்தம் – அறியாமையிருளை எதிர்ப்பதும், ஆம்பல்குளத்திற்கு உதவி புரிவதும், (ஆம்பல் சந்திரன் வந்தால் மலரும்), இளஞ்சந்திரனைச் சூடியவரின் மேனியாகிற உப்பரிகையில் உலாவருவதும், நல்லவர்களுக்கு ஞானக்கடலின் அலையை கரைபுரண்டு ஓடச் செய்வதும் ஆன, காமாக்ஷியின் மந்தஸ்மிதம் என்ற நிலவு என் ஸம்ஸாரதாபத்தை நீக்கட்டும்.
மஹாபெரியவா மந்தஸ்மிதமும், இந்த எல்லாவற்றையும் பண்ணுகிறது. எப்படி என்று இந்த இணைப்பில் கேட்கலாம் -> ஞானக்கடலை பொங்கச் செய்யும் காமாக்ஷி மந்தஸ்மிதம் என்ற நிலவு
Categories: Upanyasam
Leave a Reply