ஸ்ரீ ஆலங்குடி பெரியவா


ஸ்ரீமத்பாகவதத்தை தன் உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த ஒரு மகான், ஸ்ரீ ஆலங்குடி பெரியவா என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ ஸ்வயம் பிரகாசானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகள்.

இன்று நரசிம்ம ஜெயந்தி. 1935 ஆம் வருடம் முடிகொண்டான் கிராமத்தில் ஸ்ரீ ஆலங்குடி பெரியவா, பாகவத சப்தாஹம் பண்ணும்போது பிரகலாத சரிதம் சொல்லிக் கொண்டே நரசிம்ம ஸ்வாமியின் திருவடிகளை அடைந்தார். ஒவ்வொரு வருடமும் முடிகொண்டான் கிராமத்தில் சுவாமிகளின் ஆராதனை பாகவத சப்தாஹத்தோடு கொண்டாடப்படுகிறது. இந்த வருட ஆராதனை, அடுத்த மாதம் வைகாசி சுக்ல சதுர்தசி அன்று வருகிறது.

ஆலங்குடி பெரியவா அவதூத ஸ்வாமிகளா இருந்திருக்கார். அவருக்கு பாகவதம் படிக்கணும், பிரவசனம் பண்ணனும், அப்படின்னு மனசுல ஒரு பகவத் ப்ரேரணை. காமாக்ஷிபுரம் என்கிற ஒரு ஊருக்கு வந்து கேட்டபோது அங்க இருக்குற பெரியவா எல்லாம் நமஸ்காரம் பண்ணி “நீங்க அவதூதரா இருந்தா ஜனங்கள் கொஞ்சம் ஸ்ரமப் படுவா. நீங்க ஒரு கௌபீனமாவது கட்டிண்டு சொன்னேள்னா நாங்க சங்கோஜம் இல்லாம கேட்போம். ஜனங்களுக்கு ஒரு பயம் இல்லாம இருக்கும்” னு சொன்ன உடனே “அதுக்கு என்ன பண்ணலாமே” ன்னு சொல்லிட்டார். “கிம்போக்த்வயம் கிமபோக்த்வயம்” அப்படீன்னு, தாம் இப்படிதான் இருக்கணும்ணூ ஒண்ணும் இல்லயே. அப்படீன்னு அந்த படிகள்ல இரண்டு படி இறங்கி வந்து ஜனங்களுக்கு பிரவசனம் பண்ணி இருக்கார். அவ்வளவு பெரிய மஹான். அவ்வளவு கருணை.

கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் முடிகொண்டான் போய் ஆலங்குடி பெரியவா அதிஷ்டானத்தில் நாலு வருஷங்கள் சப்தாஹம் பண்ணி இருக்கார். அப்பறம் ஸ்வாமிகள் அங்கிருந்து மிருத்திகை எடுத்துண்டு வந்து தினம் தன்னோட பூஜைல சாளக்கிராமத்துக்கும், குருவாயுரப்பனுக்கும் அபிஷேக ஆராதனைகள் பண்ற மாதிரி, அந்த ஆலங்குடி பெரியவாளோட அதிஷ்டான ம்ருத்திகைக்கும் பண்ணுவார். ஆலங்குடி பெரியவாளை பத்தி நம்ம ஸ்வாமிகளுக்கு மஹாபெரியவா நிறைய சொல்லியிருக்கா. முடிக்கொண்டான்ல போய் ஸ்வாமிகள் பிரவசனம் பண்ணும்போது அங்க இருக்கும் வயசான பெரியவா எல்லாம் “எங்க ஆலங்குடி பெரியவா கிட்ட கேட்கற மாதிரியே இருக்கு உங்களோட பிரவசனம்” என்று சொல்லி இருக்கா. அப்பதான் ஸ்வாமிகளுக்கு நம்மளோட ஜன்மா இந்த சாதாரண உலக வாழ்க்கை இல்லை. இந்த கஷ்டங்களுக்கு எல்லாம் வேற meaning இருக்கு அப்படீன்னு அவர் மனசுல தோணி, கொஞ்சம் கொஞ்சமா வைராக்கிய நாட்டத்தை எல்லாம் ஜாஸ்தி பண்ணியிருக்கு.Categories: Upanyasam

Tags:

4 replies

  1. i visited this place once. Alangudi Periyava adhishtanam

  2. Alangudi periyava charanam. He resembles Mahaperiyava. I had the opportunity to visit Mudikondan couple of times and visited the Adhistanam. Very divine place.

  3. I never knew about Alangudi Periva. I feel blessed after reading this, thanks for the info Ganapathy Subramanian Garu.

  4. Alangudi periyava! paahimaam

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: