கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் எனக்கு மூக பஞ்ச சதீ சொல்லித் தர ஆரம்பித்து சில நாட்களில் கீழ்கண்ட உபதேசம் செய்தார்கள்.
जीवस्य तत्वजिज्ञासा (ஜீவஸ்ய தத்வஜிஞாஸா)
ஜன்மலாபம் – ஞானம் பெற்று மீண்டும் பிறவி இல்லாமல் செய்து கொள்வது.
அதற்கு அந்தரங்க ஸாதனம் பக்தி.
அதற்கு பகவத்கதா ச்ரவணம் அந்தரங்க ஸாதனம்.
மேற்படி பகவத்கதா ச்ரவணம் செய்யும்போது நல்ல முறையில் வாங்கிக் கொள்ள மனத்தூய்மை வேண்டும்.
அதற்கு கர்மானுஷ்டானம் தேவை. அதற்கு வேத தர்ம சாஸ்த்ர பரிசீலனம் தேவை.
மேற்படி கார்யம் எல்லாம் செய்ய தற்காலத்தில் மனம் இருந்தாலும், செய்ய ஸாத்யமில்லாததால், கருணைக்கடலான பகவான், தாமே மஹாபெரியவா திருவுருவத்தில் அவதரித்து, மேற்படி காரியத்தை எல்லாம் தானே அனுஷ்டித்தார். உபநிஷத்தில் ஞானியை எந்த கர்மாவும் ஒட்டாது என்றும் புண்யம் அவர் செய்தது அவரை நமஸ்கரிக்கிறவர்கள் அடைகிறார்கள் என்றும் உள்ளதால்
ஸ்ரீ மஹா பெரியவாளை गुरुमूर्ते त्वां नमामि कामाक्षि (குருமூர்த்தே த்வாம் நமாமி காமாக்ஷி) என்ற மஹா மந்த்ரம் மூலம் த்யான, நமஸ்கார, ஐபம் செய்து க்ஷேமத்தை அடைய வேண்டும்.
இதை எழுதி வைத்துக்கொண்டு கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் அருள்வாக்காக போற்றி வருகிறேன்.
அன்றைக்கு ஸ்துதி சதகம் பாராயணம் பண்ணும்போது இந்த ஸ்லோகம் வந்தது.
भुवनजननि भूषाभूतचन्द्रे नमस्ते
कलुषशमनि कम्पातीरगेहे नमस्ते ।
निखिलनिगमवेद्ये नित्यरूपे नमस्ते
परशिवमयि पाशच्छेदहस्ते नमस्ते ॥
பு⁴வனஜனநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே
கலுஷஶமனி கம்பாதீரகே³ஹே நமஸ்தே .
நிகி²லனிக³மவேத்³யே நித்யரூபே நமஸ்தே
பரஶிவமயி பாஶச்சே²த³ஹஸ்தே நமஸ்தே ..
ஸ்வாமிகள் சொன்னார் – “மஹாபெரியவா ஸந்யாசி. ஸந்யாசிகளுக்கு நாலு நமஸ்காரம் பண்ணவேண்டும். இந்த ஸ்லோகத்தில் நாலு நமஸ்காரம் வருகிறது. இதை சொல்லி பெரியவா ரூபமான காமாட்சியை நமஸ்காரம் பண்ணு. அவரைச் சேர்ந்தவராக ஏற்றுக் கொள்வார்” என்று சொன்னார்கள். இந்த ஸ்லோகத்தின் அர்த்தத்தை, அது எப்படி பெரியவாளுக்கும் பொருந்தும் என்பதை இங்கே பார்க்கலாம் – ஸ்துதி சதகம் 99 – புவனஜனனி பூஷாபூத சந்த்ரே நமஸ்தே – மஹாபெரியவாளை வணங்கித் துதிப்போம்
மஹாபெரியவாளை நமஸ்காரம் பண்ணி அவரை சேர்ந்தவராக ஆனபின், நம்மைச் சுற்றி உள்ள உலகிலோ, நம் வாழ்விலோ, எந்த ஆபத்தும், மாற்றமும், நம்மை பயமுறுத்தக் கூடாது. அப்படி பெரியவா மேல் நம்பிக்கை வைத்து தைரியத்தை வளர்த்துக் கொள்ள இந்த ஒரு ஸ்லோகம் கைகொடுக்கும்.
त्वयैव जगदम्बया भुवनमण्डलं सूयते
त्वयैव करुणार्द्रया तदपि रक्षणं नीयते ।
त्वयैव खरकोपया नयनपावके हूयते
त्वयैव किल नित्यया जगति सन्ततं स्थीयते ॥
த்வயைவ ஜக³த³ம்ப³யா பு⁴வனமண்ட³லம்ʼ ஸூயதே
த்வயைவ கருணார்த்³ரயா தத³பி ரக்ஷணம்ʼ நீயதே .
த்வயைவ க²ரகோபயா நயனபாவகே ஹூயதே
த்வயைவ கில நித்யயா ஜக³தி ஸந்ததம்ʼ ஸ்தீ²யதே ..
இந்த ஸ்லோகத்தின் பொருளையும் மஹாகவி பாரதியின்
பக்தியுடையார் காரியத்திற்
பதறார், மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்கும் தன்மை போல்
மெல்லச் செய்து பயனடைவார்
சக்தி தொழிலே அனைத்து மெனிற்
சார்ந்த நமக்கு சஞ்சலமேன்?
வித்தைக் கிறைவா, கணநாதா!
மேன்மைத் தொழிலில் பணியெனையே!
என்ற கவிதையையும் சேர்ந்து பொருள் புரிந்து கொள்ள இங்கே பார்க்கவும் – ஸ்துதி சதகம் 96வது ஸ்லோகம் பொருளுரை – சக்தி தொழிலே அனைத்துமெனில் சார்ந்த நமக்கு சஞ்சலமேன்!
Categories: Upanyasam
Jagatguru Sri Maha Peryava Thiruvadi Saranam
பெரியவா பாதமே சரணம்!
இறைவன் படைத்த மனிதனை குருவானவர் ஸ்திரப்படுத்தி மேலும் சத்தியவானாக்குகிறார். . இது விதியை கடந்த செயலாகவும் இருக்கும்!
சரணமடைந்தோரை காத்து ரக்ஷித்து அவர்களது ஆசைகளையும் தேவைகளையும் அளித்தோ அல்லது விடுவிக்க செய்தோ தன்மையாக்குகிறார்! இவ்வாறு இயற்கை சக்தியின் தொழிலை மேன்மையாக்கி மறுபடைப்பு செய்யும் நமது பெரியவாளுக்கு வெகு உகந்தது தாங்கள் மேலே கூறியது. அன்னைக்கும் அன்னையாய் காக்கும் பெரியவாளை லோக மாதாவான ஶ்ரீ காமாக்ஷியே என்று ஸ்மரணம் செய்வது சால பொருந்தும்!!!
பெரியவா பாதமே சரணம்!!!
‘जीवस्य तत्वजिज्ञासा (ஜீவஸ்ய தத்வஜிஞாஸா)’ – இது ‘தத்வஜிக்னாஸா’ என்று இருக்கவேண்டும். நான் தவறாய் இருந்தால் மன்னிக்கவும்.
Illai. Cha kku apparam vara gnaa thaan
Jaishrikrishna. Can someone kindly do an English translation?
அம்பாளை பஞ்ச கிருத்ய பராயணா என்று லலிதா சஹஸ்ர நாமாவிள் ஒர் நாமா!! படைத்தல் காத்தல், அழித்தல் திரோதானம் என்ற மாயை, அனுகிரகம் எல்லாமே அவள் செயல்!!
புவன ஜனனி அதாவது அத்தனை உயிருக்கும் தாயானாலும் கருவில் யாரையும் சுமக்காமல் ஸ்ருஷ்டி செய்தவள்!! தாயே பாபங்களையும் தோஷங்களையும் அழிப்பவலான உனக்கு நமஸ்காரம். எல்லா வேதங்களும் பிரதி பாதனம் செய்கிறது தேவியையே !!
தன்னை அறிவிக்கும் நூல்களாக அன்றோ வேதங்களை ஸ்ருஷ்டி செய்திருக்கிறாள் ! அவளே சிவன், நீயே யாவும்!! உன்னில் சிவமும் அவரில் நீயுமாக இருக்கிற அப்படிப்பட்ட தேவிக்கு நம்ஸ்காரம் . சத்தை விட்டுப் பிரியாத சித்தாக கம்பா நதி தீரத்தில் பா பஙகள் என்னும் அவித்யையை அறவே ஒழிக்கும் உனக்கு என் நமஸ்காரம்! பாச ஹஸ்தா, பாச ஹந்த்ரீ சஹஸ்ரநாம சொல்கிறது அம்பாளை!
எப்படிப்பட்ட பொருள் பொதிந்த ஸ்லோகம்!!
மிக்க நன்றி கணபதி. அழகான இந்த ஸ்லோகத்தை பகிர்ந்தமைக்கு!
ஜய ஜய ஜகதம்ப ஸிவே…
இந்த உங்கள் உபதேச மந்த்ர ஸ்லோகம், (குண்டலி குமாரி) 46வது ஸ்லோகம் ஆர்யா ஷதகம்
ஸ்ரீ கணேச சர்மா மாமா தெய்வத்தின் குரல் உபன்யாசம் போது முதலில் ப்ரார்த்தனை ஸ்லோக வரிசையில் சொல்வார்.
4/5 வருஷமாக இதை மட்டும் சொல்லி வருகிறேன். இது தான் முதன் முதலாக பிள்ளையார் சுழி நான் இப்போது சென்றுக்கொண்டிருக்கும் காமாக்ஷி பாதை.
பாரதியார் கவிதை reference மிக பொருத்தம். இந்த கவிதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த உலகைப் படைத்த கடவுள் நல்ல விதமாக நடத்தி செல்வார். நாம் பிறக்க காரணமாக இருந்த தாயார் நம்மை ரக்ஷிப்பாள் என்று குழந்தை நம்புவது போல, லோகமாதா இவை அனைத்தையும் காப்பாள் என்று பரிபூரண நம்பிக்கை வேண்டும்.