மஹாபெரியவா என்ற நல்லாசிரியர் – ஷட்பதீ ஸ்தோத்ரம் பொருளுரை


ஒரு மகான் தன்னுடைய தவத்தாலும், அனுக்ரஹ சக்தியினாலும், ஒழுக்கத்தாலும், கருணையினாலும் பாமர ஜனங்களின் மனதில் இடம் கொள்கிறார். ஆனால் ஆச்சார்ய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ஒரு மகான், சிறந்த பண்டிதராகவும், விஷயங்களை எடுத்து சொல்வதிலும், தெளிவு படுத்துவதிலும் திறமை வாய்ந்தவராக இருந்தால் மட்டுமே பண்டித லோகத்தில் அவர் ஏற்றுக் கொள்ளப் படுகிறார். நம் மஹாபெரியவா அப்படி பண்டிதர்களும் பாமரர்களும் போற்றிய ஒரு மகான். மஹாபெரியவா சௌந்தர்ய லஹரியில் பவானித்வம் என்ற ஸ்லோகத்துக்கு அர்த்தம் சொல்வதைக் கேட்டுப் பாருங்கள். ஒரு நல்ல ஆசிரியர் பாடம் எடுப்பது போல, ஆசையாகவும், மிகவும் பொறுமையாகவும் விஷயங்களை எடுத்துச் சொல்கிறார்கள். முதலில் பதங்களின் பொருளையும், பின்னர் அதிலுள்ள விசேஷங்களையும் விளக்கி, படிப்படியாக உயர்ந்த அத்வைத தத்துவத்தில் கொண்டுபோய் முடிக்கிறார்கள்.

அதேபோல் தெய்வத்தின் குரல் நான்காம் பகுதியில் ‘வண்டு ஸ்தோத்திரம்’ என்ற தலைப்பில் மஹாபெரியவா ஆதிசங்கரரின் ஷட்பதி ஸ்தோத்திரத்திற்கு அர்த்தம் சொல்லி இருக்கிறார்கள். அதில் சந்தங்களின் பல விதங்களை விளக்கியுள்ளார்கள். கவிதைகளை ரசிப்பதற்கு கற்றுத் தருகிறார்கள். என் குருநாதரும் புராணக் கதைகளை சொல்லும் விதத்திலேயே, அவற்றின் தத்துவங்களும் மனதில் பதியும்படி சொல்வார்கள். அந்த மகான்களை நினைத்துக் கொண்டு, பெரியவா சொன்ன வண்டு ஸ்தோத்திரத்தை எளிய விதத்தில் சொல்லி இருக்கிறேன். புரிகிறதா என்று கேட்டு சொல்லுகள்.



Categories: Upanyasam

Tags: ,

1 reply

  1. எதிரிலாத பக்தி தனை மேவி
    இனிய தாள் நினைப்பை இரு போதும் இதய வாரிதிக்குள் உறவாகி எனதுளே சிறக்க அருள்வாய்
    மதுரா வாணியுற்ற கழலோனே!!
    எதிலும் எங்கும் பாதத் தாமரைகள் பற்றிய குறிப்பு!!
    வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சரணாகதி அடைவது தான் அவர்கள் ultimate aim!! அதனை இங்கு ஷட் பதி ஸ்லோகம் வாயிலாக ஆசார் யாள் சந்தாத்துடன் விளக்குகிறார் !!
    தாங்கள் சொன்னது போல் எதுகை மோனையுடன், அழகான சந்தத்துடன் தாளம் போட வைக்கும் ஸ்தோத்ரம்!!
    கேக்க வே பரமானந்தம்!! மானுடனாய்ப் பிறப்பது அரிது, அதிலும் ஆண்டவன் பால் பக்தி பண்ணும் நினைவு வருவது அதனிலும் அரிது!அலைகள் சமுத்திரமாக முடியாது ஆனால் பல அலைகள் சமுத்திரத்திலிருந்து உண்டானவை தாம் என்ற கருத்து நாம் எல்லாரும் பகவானிடமிருந்து
    தோன்றிய அலைகள் என்ற கருத்து ரொம்ப அருமை!
    எப்போதும் ஏதோ ஒன்றை நாடி நிலையாத மனத்துடன் இராமல் அவர் இணையடி நிழலை அடைய ஸதா நினைத்தால் மற்ற லோகாயதமான நினைவுகள் அகலும் இது படிப் படியாக உயர்வு தரும் சாதனம்!! நிலையாத சமுத்திரமான என்ற திருப்புகழ் தவியாமல் பிறப்பையு நாடி யது வேரை யருத்துனை யோதி தலமீதில் பிழைத்திடவே நின் அருள் தாராய் என்று நமக்கு அறிவுரை கூறவே சொல்கிறார் அருணகிரி நாதர் !
    மேலும் சேமக்கோமள பாதத் தாமரை என்று அவரை அடைய ஓத வேண்டும் என்பதையும் அழகுபடச் சொல்கிறார்!!
    எத்தனை அந்தாதி, சௌந்தர்ய லஹரி படித்தாலும் திருப்புகழ் பாடியனாலும் மனம் ஒன்றி இறைவனை வழிபட்டு பாத தாமரைப் பற்ற மன முதிர்ச்சி வேண்டும்! அது பழக்கத்தில், அனுபவத்தில் ஏதும் எதிர்பாராத சிந்தனையில்தான் வரும்,!
    அருமையான உபன்யாசம் ! எளிதில் பாமரனும் புரிந்து கொள்ளுமாறு இயல்பான நடையுடன்!!
    ஜய ஜய சங்கரா……

Leave a Reply

%d