Important – Key 13 Point Upadesams on Sri Adi Sankara Jayanthi & Beyond….


Jaya Jaya Shankara Hara Hara Shankara – Apart from doing Puja and Celebrations on our Adi Aacharayal Jayanthi day let us consider doing the following. Hope this is helpful for Sage of Kanchi blog family.

a. Parayanam of Sri Adi Sankara Charitham (short and simple) by Sri HH Pudhu Periyava – 20 minutes. Click HERE

b. Listen to Sri Maha Periyava’s upanyasam on Sri Adi Sankara with English and Tamizh transliteration done by our
translation kainkaryam team. – 10 minutes each. Click HERE

c. Beautiful Sri Sankara Vijayam upanyasam by Nochur Venkataraman Swami – 80 minutes. Click HERE

Below are VERY IMPORTANT  13 POINT UPADESAMS of Sri Maha Periyava from Deivathin Kural (Vol 1, 3, and 5) on what we need to do for Sri Adi Sankara Jayanthi and beyond. Let’s consider following these important upadesams in our lives as much as we can. Thanks to our Sathsang seva member for the translation. Ram Ram

  1. ‘சரித்ர பலன்’ என்பது சரித்ரம் நமக்கு அளித்த பலன் மட்டுமில்லை; அதைக் கேட்டதற்குப் பலனாக நாம் என்ன பண்ணப் போகிறோம் என்பதுதான்! ஆசார்யாளுக்கு நாம் பண்ணக்கூடிய ப்ரதிபலன் எதுவுமேயில்லை. அவருக்கு எதுவும் வேண்டவும் வேண்டாம். அவர் எதைப் பெரிய ப்ரதிபலனாக நினைப்பாரென்றால், சரித்ரம் கேட்கிற வரையில் நாம் நிர்மலமாக, சாந்தமாக, ப்ரேமையாக இருந்ததை எக்காலமும் அப்படியே இருக்கும் விதமாக ஸ்திரப்படுத்திக் கொள்வதைத்தான். அப்படி ஆவதற்கு, சாஸ்த்ரோக்தமான கார்யம் எல்லாம் பண்ணவேண்டும். ஈச்வர பக்தி பண்ணவேண்டும். இதனால் மனஸ் நன்றாக சுத்தியாகி ஒன்றிலேயே நிற்க ஆரம்பித்தபின் ஞான விசாரத்திற்குப் போகலாம்.
  2. இப்போது கர்மா, பக்திகளை விடக்கூடாது. ஆனாலும் அத்வைதத்திற்குத்தானே அவர் முக்யமாக வந்தார்? அதைப் பற்றி பாவனையாகவாவது ஒரு நினைப்பு தினமும் ஐந்து நிமிஷமாவது, இல்லை — இரண்டு நிமிஷமாவது — இருக்கவேண்டும். “நான் அழுக்கே இல்லை; அழுகையும் பயமும், கோபமும், ஆசையும் போட்டு அழுக்குப் பண்ணுகிற வஸ்து இல்லை. பரம நிர்மலமாக, ப்ரசாந்தமாக இருக்கிற — எதுவும் படாத, அழுக்குக் கறையே இல்லாத–ஆகாசம் மாதிரி நான். என்னவோ இப்படி ஓயாமல் உழப்பறிந்து கொண்டிருந்தாலும் சும்மாயிருக்கிற பரம ஸுகமே நான்” என்று இரண்டு நிமிஷம் நினைத்துக் கொண்டால் ஆசார்யாள் ரொம்ப ப்ரீதியாகி விடுவார். இந்த பாவனை முற்றி அநுபவமாவதற்கு அநுக்ரஹிப்பார்.
  3. ஆசார்யாள் இன்று இல்லாவிட்டாலும், தமக்குப் பதிலாக என்றைக்கும் இருக்கும்படியாக பக்தியாகவும் ஞானமாகவும் ஏராளமாக எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறார். அவற்றில் கொஞ்சமாவது தினமும் அவச்யம் பாராயணம் பண்ணணும். பண்ணினால் அவரையே நேரில் பார்க்கிற மாதிரி! பக்தியும் வரும், ஞானமும் வரும்.
  4. பாபிகளுக்கு நித்ய நரகம் என்று அவர் சொல்லாதது மட்டுமில்லை. அவர்களுக்கும் உய்வு உண்டு என்று சொல்வதோடும் நிறுத்திக் கொள்ளவில்லை. இதற்கெல்லாம் மேலே பாபி, பாபி என்கிறவனும் பரமாத்மாவேதான் என்பதாக, பதிதோத்தாரணத்தின் உச்சிக்குப் போனவர் நம் ஆசார்யாள். தம்முடைய அத்வைதத்தால் பதிதனையும் பரப்ரம்மமாக்கிய ஆசார்யாளைப் போலப் பதித பாவனர் யாருமில்லை. அப்படிப்பட்ட ஆசார்யாளுக்கு, லோக மங்களகாரகரான சம்-கரருக்கு நாமெல்லாரும் மங்களம், ஜய மங்களம் சொல்லுவோம். “ஜய ஜய சங்கர” என்று மங்கள கோஷம் போடுவோம். அவருடய சுப நாமத்திற்கே ஜய சப்தம் விசேஷமாக உரித்தானது.
  5. ஸ்ரீ ஆச்சார்யாளுடைய திக்விஜய மகிமையைக் கேட்டதற்குப் பிரயோஜனமாக நாம் அனைவரும் நம் மனத்தில் உள்ள அசட்டுத்தனங்களைப் போக்கி, நமக்குள் நாமே திக்விஜயம் செய்யவேண்டும். ‘பஜகோவிந்த’த்தில் ஆரம்பித்துத் பரமாத்ம தத்துவத்தில் முடிவது ஸ்ரீ ஆச்யார்யாளின் உபதேசம். “ஒன்றும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை; கோவிந்த கோவிந்த என்று சொல்” என்று ‘பஜகோவிந்த’த்தில் சொல்கிறார் ஆச்சார்யாள். “யமன் ஒரு க்ஷணம்கூட வீண் கழிப்பதில்லை. பிரதி க்ஷணமும் நெருங்கி வருகிறான். எப்போது பிடித்துக் கொள்வானோ தெரியாது. கோவிந்தன் காலைக் கட்டிக்கொண்டால்தான் யமனால் நமக்கு பயம் இல்லை’ என்கிறார். எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிப் பழக வேண்டும். எப்படியும் போஜனம் செய்கிறோம். அதோடு, சாப்பிடுகையில் ‘கோவிந்த கோவிந்த’ என்று சொல்லிக் கொண்டே உண்டால், அந்த மனோபாவத்துடன் உள்ளே போகும் அன்னம், ஆத்ம தியானத்துக்கு அநுகூலம் செய்யும். அந்த அன்னஸாரம் உடம்பில் சேரச் சேர ஈஸ்வர ஸ்மரணம் அதிகமாகும். நாம் என்றைக்கும் போஜனத்தை நிறுத்தப் போவதில்லை. ஆகையினால் இந்தச் சின்ன அப்பியாசத்தால் கோவிந்த உச்சாரணம் என்றைக்கும் நடந்துவரும். கோவிந்த உச்சாரணத்துடன் சாப்பிடுகையில் மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவதை நாமே நிறுத்துவோம். கண்ட வஸ்துக்களை கோவிந்த நாமத்துடன் சாப்பிடக்கூடாது என்ற கட்டுப்பாடும் வரும். சித்தம் சுத்தமாவதற்கு ஆகாரம் சுத்தமாயிருப்பது மிகவும் அவசியம். பல இடங்களில் பலவிதமான வஸ்துக்களைத் தின்னுவதே இன்றைய மனக்கோளாறுகளுக்கும் ஒழுக்கக் குறைவுக்கும் ஒரு முக்கியமான காரணம்.
  6. எல்லோரும் காலையில் சிறிது விஷ்ணு ஸ்மரணம், மாலையில் சிறிது சிவஸ்மரணம் செய்ய வேண்டும். இரவில் தூங்கும் முன்பு அம்பாளைப் பிரார்த்திக்க வேண்டும்.
  7. அன்றைய தினம் ஆத்ம க்ஷேமமாகவோ, பரோபகாரமாக ஜீவகாருண்ய சேவையோ ஏதேனும் செய்தோமா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
  8. இன்று நம்மிடையே இப்படிப்பட்ட சிறிய, பெரிய அநுஷ்டானங்கள் பலவும் ஞாபகம் காட்டுகிற அளவுக்காவது வந்திருப்பதற்குக் காரணமான ஸ்ரீ ஆதி ஆசார்யாளை என்றைக்கும் மறக்கக்கூடாது.
  9. நவராத்திரி, கோகுலாஷ்டமி போல் ஸ்ரீ ஆசாரிய ஜயந்தியைக் கோலாஹலமாகக் கொண்டாட வேண்டும்.
  10. ஆசாரிய பாதுகையை தினமும் பூஜிக்க வேண்டும்.
  11. எல்லா ஜனங்களும் இந்த விசேஷத்தைப் புரிந்து கொண்டு ஆசார்ய ஜயந்தியை மஹோத்ஸவமாகக் கொண்டாடவேண்டுமென்று எனக்கு ஆசை. அவர் பெயரைச் சொல்லிக்கொண்டு பிழைப்பதனாலோ என்னவோ, அத்தனை ஜயந்திகளைவிடவும் விசேஷமாக, அவை எல்லாவற்றையும் தக்கி நிற்கச் செய்த இந்த ஜயந்தியைக் கொண்டாட வேண்டுமென்று எனக்கு இருக்கிறது! ஆசார்ய ஜயந்தி இல்லாவிட்டால் க்ருஷ்ண ஜயந்தி ஏது? ந்ருஸிம்ஹ ஜயந்தி, ராமநவமி எல்லாம் ஏது? ராமாயணம் இருந்திருக்குமா? கீதை இருந்திருக்குமா? எனக்குப் பேராசை — அது நிறைவேறுமோ, இல்லையோ? சொல்லிவைக்கிறேன்: சங்கர ஜயந்தி என்று எங்கே நடந்தாலும் அங்கே ஜனங்கள் படையெடுத்துப் போய்ப் பிரஸாத விநியோகத்தை அஸாத்யமாக்கிவிடவேண்டுமென்று பேராசை! இதை நான் சொல்லிக்கொண்டே போனால் என்றைக்காவது நிறைவேறாதா?
  12. ஆசார்யாளுக்கு எப்போதும் “ஜய ஜய, ஹர ஹர!” போட்டுக்கொண்டேயிருப்போம்! ஜய சப்தம் நமக்கு ஆத்ம ஜயத்தைக் கொண்டுவந்து கொடுக்கும். ஹர சப்தம் தப்பை தீமையை எல்லாம் போக்கிவிடும். ‘சம்கர’சப்தமே ‘சம்’மாகிய நித்ய மங்களத்தைச் செய்துவிடும்! ஸ்ரீ சங்கர மூர்த்தி ஸ்மரணமும்தான்! நாம் எல்லோரும் நன்றாக, ஒற்றுமையாக இருக்க அவருடைய ஸ்மரணையே போதும்!
  13. ஆசார்யாள் உத்ஸவமும் இந்த மடத்துக் கைங்கர்யமும் நீங்களெல்லாம் திரவியத்தாலும் தேஹத்தாலும் செய்யணுமென்று அடிக்கடி சொல்லி வந்திருக்கிறேன். ‘வருஷத்தில் ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு வந்தாவது மட கைங்கர்யம் பண்ணுங்கள்; வாரத்தில் week-end ஒருநாள் மடத்துக்குக் கொடுங்கள்’ என்றெல்லாம் சொல்லியிருக்கிறேன். அதெல்லாவற்றையும்விட இன்றைக்கு இப்போது அஞ்சு நிமிஷம் “ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர” என்று மனஸை நிறுத்தி மனஸுக்குள் சொல்லிவிட்டீர்களானால் அதுதான் மஹா உத்ஸவம்மஹா பெரிய மடத்துக் கைங்கர்யம். நீங்கள் நன்றாயிருக்க, உங்களை மடம் நன்றாக வைக்க — எல்லாவற்றுக்கும் இந்த ஜபத்தைவிட எதுவும் வேண்டாம்! பதார்த்தத்தால், கைங்கர்யத்தால் செய்வதைவிட மனஸால் செய்வது பெரிசு.

     நமபார்வதீ பதயேஹர ஹர மஹாதேவ!

 ***********************************************************************************************************

  1. Charitra Palan (Result of history) is not just what we gain out of it. More important is what we are going to do after listening to it. There is no way in which we can ever repay Acharya (Sri Adi Sankara). He does not require anything too. Our mind has been filled with love and peace while listening to His Charitram. We need to work towards maintaining this state of mind forever and that would be the way to repay Him. To keep the mind that way, one has to do everything as ordained in the Sastras (perform the ordained karmas). One should also divert the mind towards God (develop bhakti). By doing this, the mind gets purified and is able to stabilize itself. Thereafter one can move towards self-enlightenment.
  2.  For now, Karma and Bhakti should not be discontinued. But, Acharya (Sri Adi Sankara) came only to establish the (concept of) Adwaitha. So we should think of it (Adwaitha) – even if just for a pretense- for five minutes or at least two minutes a day. “I am not impure. I am not a thing to be stained by tears (sadness), fear, anger or desire. I am absolutely pure, peaceful and clear like the vast sky. Even though I am constantly doing something, I am the joy of being still” is what we should think during those two minutes. If we do this, Acharya (Sri Adi SAnkara) will be pleased and will bless us so that this pretense itself matures and manifests itself into experiences.
  3. Even though Acharya (Sri Adi Sankara) is not amongst us today in physical form, to make up for his presence, he has written a lot about Bhakti and Gnana that will always remain (with us). Each day we should recite at least a small portion (of his work). Doing this will make us feel that he is present in front of us. We will also acquire Bhakti and Gnana .
  4.  He (Acharya) never said that sinners will suffer in hell forever. He said that they too would be redeemed. Not just that. He further said that the sinner is also Paramatma, thereby providing the greatest atonement to sinners. Through His Adwaitha, He made even the sinner a Paramatma. There is no one who has rescued sinners (in a better manner). To that Acharya, the ‘Sam-kara’, who does (only) good, we shall say ‘Jaya Jaya Sankara’, thereby singing his praise. The word Jaya (Victory) belongs to his auspicious name itself.
  5.  We need to gain something by listening to the Digvijayam of Acharya.** We should make a Digvijayam into our own mind and clear up all the foolish notions. Acharya’s teachings begin with ‘Bhaja Govindam’ and end with the principle of ‘Paramatma’. In the ‘Bhaja Govindam’ He says ‘It does not matter if you do not know anything. Just chant Govinda, Govinda’. ‘Yama does not waste a single moment. Each moment he is getting closer to us. We do not know when he will grab us. If we surrender at the feet of Govinda and hold on to them, we need not fear Yama’. We should always chant Govinda Govinda. We have food regularly. If we chant Govinda Govinda while eating, the food that is taken in this frame of mind will help in inculcating devotion. As the essence of the food accumulates in the body, devotion to God will increase. We are never going to stop taking food. With this simple practice of chanting the Govinda Nama, we will stop talking about other (unnecessary) things. We will also develop the discipline of avoiding prohibited foods. Consumption of pure food is essential for purity of mind. The habit of consuming various things at various places is the main reason for the psychological problems and lack of discipline these days.
  6.  Everyday, we should pray by chanting the nama of Lord Vishnu in the morning and that of Lord Siva in the evening. Before sleeping, we should pray to Ambal (Devi).
  7. At the end of the day, each of us should analyze if we have done something towards self improvement or towards helping others.
  8. We should never forget Sri Adi Acharya, who has been instrumental in inculcating the big and small practices of our religion in us, at least to the extent that we remember them.
  9. Like Navaratri or Gokulashtami, Sri Acharya’s Jayanthi should also be celebrated in a grand manner.
  10. Puja to Acharya’s padhukas should be performed every day.
  11. My wish is that all the people should understand the importance and celebrate the Jayanthi of Acharya in grand way. May be because I survive by his name, I wish to celebrate His Jayanthi in a bigger way than the other Jayanthis, since His Jayanthi (birth) alone ensured that all others were also celebrated. If Acharya Jayanthi were not there, would there have Krishna Jayanthi or Narasimha Jayanthi or Rama Navami? Would Ramayana or Gita been there? I have a strong desire – I will mention it even though I do not know if it will be fulfilled. Wherever Sankara Jayanthi is celebrated, people should attend in such large numbers that the distribution of prasadam becomes a very difficult task! If I constantly keep saying this, won’t it be fulfilled at some point of time?
  12. Let us keep chanting ‘Jaya Jaya, Hara Hara’ for Acharya. The sound ‘Jaya’ will bring victory over the self and the sound ‘Hara’ will destroy evil. The sound of ‘Sam-kara’ will accomplish ‘Sam’ – permanent good. This will also be achieved by thinking of Sri Sankara Murthy (Sri Adi Sakara). Just thinking of Him is enough for us to live well and be united.
  13. I have often said that you all should provide material and physical service for Acharya’s Jayanthi and to the Sri Matam. I have also said that you should do service in the Sri Matam at least for a week every year, or devote one day every weekend for this service. More than all these, if today, you can spend five minutes chanting ‘Hara Hara Sankara, Jaya Jaya Sankara’ with an unwavering mind, that alone would be the great Utsavam and the great service to the Sri Matam. For your well being and for the Sri Matam to ensure your well being, nothing more than this Japam is required. Doing service with one’s mind is more significant than doing service materially or physically.

Namah Parvati Pataye! Hara Hara Mahadeva!

**( Victorious Conquests over other religions and  in terms of his Adwaitha Principle-  the doctrine that declares that the individual Self and the Paramatma are one).



Categories: Deivathin Kural

7 replies

  1. Jaya Jaya Sankara Hara Hara sankara

    Thank you very much

  2. Namaskaram. Thank you very much.

  3. On the Eve of Sankars Jayanthi celebrations I congratulate world press as well Sreemuttam. May Mahaperyavas generate their special blessings on all devotees of Lord Sankaracharya
    Yours…
    M. K. Prasad, Devotee, Nellore.

  4. Dear Sai ,
    Thank you very much ! This is very useful and will benefit all devotees.

  5. Nice compilation and translation. 🙏

Leave a Reply to Vigneshwaran SrinivasanCancel reply

%d bloggers like this: