101.2 Sri Sankara Charitham by Maha Periyava – Brahmins of the early Tamilnadu; Tamil in Kerala

 

 

Jaya Jaya Sankara Hara Hara Sankara –  How did Kerala come into existence, and how did civilization evolve? The master director’s riveting screenplay continues….

Many Jaya Jaya Sankara to Shri ST Ravi kumar for the translation. Smt. Sowmya Murali had attempted to draw like the great artists Shri Ma.se Shri Padmavasan and it has come out brillaintly.

Periyava Quiz –  Do you know the place this picture represents? If so, please post your answers in the comments section?

ஆதித் தமிழகத்தின் அந்தணர்கள்; கேரளத்தில் தமிழ்

சரித்ரகாலம் என்று சொல்லப்படுவதற்கு முற்பட்டே இதெல்லாம் நடந்திருக்க வேண்டும். அப்போதே பொருளாதார காரணத்திற்காக மற்ற ஜாதியினர் அங்கே போனார்களென்றால் ப்ராம்மணர்களும் தெய்வ ஸம்பந்தமான காரணங்களுக்காகக் கொஞ்சம் கொஞ்சம் போயிருக்கலாம். அதென்ன தெய்வ ஸம்பந்தம் என்றால், அந்த தேசத்திலும் அநேக திவ்ய லீலைகள் நடந்து, அப்படி நடந்த இடங்கள் பெரிய க்ஷேத்ரங்களாக ஆயின. பரசுராமரே இப்படிப் பல க்ஷேத்ரங்களைத் தோற்றுவித்தார். பழைய பூப்பிரதேசம் வேண்டாமென்று தமக்காகப் பரசுராமர் ஸ்ருஷ்டித்துக் கொண்ட இந்தப் புதிய பூப்பிரதேசத்தில் தாமே குடியேற்றியவர்களைத் தவிர வேறு யாரும் பழைய தேசத்திலிருந்து வரவேண்டாமென்று அவர் தடை செய்திருந்தார். ஆனாலும் கால க்ரமத்தில் அந்தத் தடை எடுபட்டுப்போய், அதாவது, பிற்பாடு பரசுராமர் எல்லோர் கண்ணுக்கும் தென்படாமல் ஏகாந்தமாகப் போய்விட்ட பின், க்ஷேத்ராடனத்துக்காகவும் Mainland-லிருந்து சில ப்ராம்மணர்கள் அங்கே போய் அப்படியே ‘ஸெட்டில்’ ஆகவும் செய்திருக்கலாம்.

சரித்ர காலத்தின் ஆரம்ப கட்டமாக வெள்ளைக்காரர்கள் சொல்வது அசோகருடைய காலத்தை. அந்த அசோகரின் சாஸனங்களிலேயே அவர் யுத்த திக்விஜயமாக இல்லாமல் தர்ம திக்விஜயமாகத் தம்முடைய கொள்கைகளைப் பரப்பிய ப்ரதேசங்களில் கேரளமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாகரிக ஸமுதாய வாழ்க்கை அப்போதே அங்கே நிச்சயமாக இருந்ததற்கு இது அத்தாட்சி.

அது தமிழ்ச் சேர ராஜ்யமாகவும், அதன் பாஷை தமிழாகவுமே இருந்தது. சிலப்பதிகாரம் பாடினவரே அந்த தேசத்தவர்தான்! தெய்வத் தமிழ் என்றே சொல்லும்படியான நல்ல தமிழில் திருமுறையும், ப்ரபந்தமும் பாடிய சேரமான் பெருமாள் நாயனாரும், குலசேகரப் பெருமாளும்  மலையாள ராஜாக்கள்தான்.

ஆகவே நம்முடைய ஆசார்யாளும் தமிழ்தான் பேசியிருப்பார். அப்போது ப்ராம்மணர்களில் படிப்பாளிகள் (எல்லா ப்ராம்மண புருஷர்களுமே அப்படித்தானிருந்திருப்பார்கள். படிக்காத, அத்யயனம் செய்யாத ப்ராம்மணன் இருந்திருக்கவே மாட்டான். அவர்கள்) தங்களுக்குள் ஸம்ஸ்க்ருதத்தில் பேசிக் கொள்வதாகவும் மற்றவர்களிடம் தமிழில் பேசுவதாகவும் இருந்திருக்கும்.

ஆசார்யாள் அவதாரம் செய்து ஸநாதன தர்மப் புனருத்தாரணம் பண்ணினாலும், அப்புறம் போகப் போக மறுபடி சீரழிவு ஏற்படத்தான் செய்தது. அந்தப் போக்கில் பரசுராமர் மாற்றிக் கொடுத்த ஆசாரங்களில் சிலதை ஸாதகமாக்கிக் கொண்டு நம்பூதிரிகளில் தலைப் பிள்ளைகளாக இருப்பவர்களைத் தவிர மற்றவர்கள் இதர ஜாதியினரோடு கலந்து வாழுவதற்கு வழி உண்டாக்கிக் கொண்டார்கள். அப்படி உறவு ஏற்பட்டபோது நம்பூதிரிகள் ஸ்பெஷலைஸ் செய்திருந்த ஸம்ஸ்க்ருதத்துக்கும் மற்றவர்களின் தமிழுக்கும் உறவு கெட்டிப்பட்டது. அந்த உறவிலேயே மலையாளம் என்பது தனி பாஷையாகப் பிறந்திருக்கலாம்.

ப்ராம்மணர் இதரரோடு உறவு ஏற்படுத்திக் கொண்டதில் அசாஸ்த்ரீயமாகப் பல நேர்ந்தாலும், எப்போதும் நல்லதும் கெட்டதும் கலந்தே வருவதில் இதிலும் சில நல்லது ஏற்பட்டது. ப்ராம்மண ஸம்பந்தத்தால் அங்கே ஸகல ஜாதியாருமே நல்ல படிப்பறிவும், குறிப்பாக ஸம்ஸ்க்ருத அபிமானமும் பெற்றவர்களானார்கள். எல்லாருமே சுசி ருசியாக ஸ்நானம் செய்து சுத்த வஸ்திரம் உடுத்திக் கொள்வது, ஆசாரத்தோடு  ஆலய தர்சனம்  செய்வது  ஆகிய  நல்ல  வழக்கங்களும்  ஏற்பட்டன.

(ப்ராம்மணரல்லாதார் படிப்பறிவில்லாதவர், சுத்தமில்லாதவர் என்று மட்டம் தட்டுவதாக அர்த்தமில்லை. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள தொழில்களை முன்னிட்டு — குறிப்பாக, பாட்டாளி மக்களாக இருப்பவர்கள் — ரொம்பவும் சுத்தம் பார்க்க முடியாமலாகி, அதுவே பழகிப் போய் விடுகிறது. அவர்கள் பல வருஷங்கள் படிக்கவும் முடிவதில்லை. ஸமூஹ வாழ்க்கைக்கு அவர்கள் தங்கள் பணிகளால் நிரம்ப உபகாரம் பண்ணுவதால் அவர்களுக்கு சாஸ்திரங்களிலும் சௌச விதிகளை (சுத்த ஆசார விதிகளை) இளக்கியே கொடுத்திருக்கிறது. கட்டாய வித்யாப்யாஸமும் விதிக்கவில்லை. இப்படியிருந்தும் மலையாளத்தில் இந்த அம்சங்களில் அவர்கள் நன்றாக முன்னேறியிருக்கிறார்களென்றால் அதற்கு ப்ராம்மண இன்ஃப்ளுயென்ஸ் காரணமாயிருந்திருக்கலாம் என்றுதான் சொன்னது)

என்னதான் Mainland –ஓடு தொடர்பு கொண்டிருந்தாலும் இன்று போல் போக்குவரவு ஸாதனங்களில்லாத அந்தக் காலத்தில் பெரிய மலைத் தொடருக்கு மறுபக்கம் இருந்த மலையாள தேசம் ஓரளவு தனித்தேதான் இருந்தது. ஆசார்யாள் காலத்தில் இப்படித் தனித்திருந்ததால்தான் அங்கே Mainland -ல் ஏற்பட்டிருந்த குழறுபடிகளின் பாதிப்பு அதிகமில்லாமல் அது கூடியவரை வைதிகமாக இருந்து, அவதாரமும் அந்த இடத்தைத் தேர்தெடுத்தது. பிறகு மலையாள பாஷை ஏற்பட்ட அப்புறமும் — ஸமீப நூற்றாண்டுகள் வரைகூட — அப்படித்தான் (மலையாள நாடு ஒதுங்கித் தான்) இருந்தது. அதனால் தங்களுக்கென்று ஒரு பாஷை ஏற்பட ஆரம்பித்ததும் அதில் ஒரு pride -உடன் (பெருமிதத்துடன்) ஸகல ஜனங்களும் அதையே தாய்மொழியாக ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்.

மலையாளக் கதை இத்தனை சொன்னதால் இன்னம் கொஞ்சமும் சொல்லி விடுகிறேன்.

மலையாள பாஷை பிறந்த பிற்பாடு தமிழ்நாட்டு ப்ராம்மணர்கள் சில காரணங்களுக்காக அங்கே குடியேறினார்கள். ரொம்ப உள்ளே ச்ரமப்பட்டுக் கொண்டு போகாமல், அந்த எல்லைக்குள் போய்க் கொஞ்சம் தூரத்திலேயே ‘ஸெட்டில்’ ஆனார்கள். இரண்டு வழிகள் அங்கே போவதற்கு, இரண்டு வழியாகவும் போனார்கள். ஒன்றில் கோயம்புத்தூர் வழியாகப் போய்ப் பாலக்காட்டில் குடியேறினார்கள். இன்னொன்றில் தென்காசி, செங்கோட்டை தாண்டித் திருவனந்தபுரப் பக்கங்களுக்குப் போய்த் தங்கினார்கள். இவர்கள் நம்பூதிரிகள் இல்லை. ஆதியில் குடியேற்றப்பட்ட நம்பூதிரி வம்சத்தினர் நடுவில் தமிழ் பேசியிருந்தாலும் பிறகு மலையாள பாஷைக்காரராகி விட்டார்கள். இப்போது நான் சொன்னவர்கள் மலையாளம் உண்டான பிறகே அங்கே குடியேறி, இன்றைக்கும் தமிழையே தாய் பாஷையாகக் கொண்டிருப்பவர்கள். சூழ்நிலையின் இன்ஃப்ளுயென்ஸால் அவர்களுடைய தமிழ் கொஞ்சம் வித்யாஸமாயிருக்கும். உச்சரிப்பில் மலையாள ப்ராஸம் கலந்திருக்கும்.

Mainland -க்குப் போக்குவரவுத் தொடர்பில்லாமல் அந்த தேசம் தனி மரபோடு உருவாயிற்று என்னும் போது ஒன்றை மறந்துவிடக் கூடாது. ‘தனி மரபு’ என்றதால் பாரத ஸமய கலாசாரத்துக்கு வித்யாஸமானது என்று நினைத்து விடக்கூடாது. ‘வேத நெறி’ என்ற ஒரே நதியின் ஓட்டத்தில் சைவம், வைஷ்ணவம், சாக்தம் என்று பல துறைகள் இருப்பதுபோல1, பாரத கலாசாரம் என்ற பொதுவான கங்கையில் ஒரு கட்டமாக இருப்பதுதான் மலையாள மரபு, இன்னும் தமிழ் மரபு, வங்காள மரபு, காஷ்மீரி மரபு எல்லாமே. பாரத கலாசாரத்தை வேராகக் கொண்டுதான் வேறு வேறு கிளைகளாக இவை — மலையாள மரபும்தான் — உருவாகியுள்ளன. Mainland -ல் இருந்த ப்ராம்மணர்களைத் தானே ஆதிக் குடிகளாக அங்கே பரசுராமர் அமர்த்தினார்? பாரத தேசத்தின் வேதம், புராணம், கோவில், குளம் ஆகியவற்றைத்தானே அங்கேயும் நாட்டினார்? அப்புறம் போனவர்களும் இங்கேயுள்ள தமிழ் ஜனங்கள் தானே? அதனால் பாரத கலாசாரத்தில் தான் அது ஒட்டிக் கொண்டிருந்தது. இன்னும் சொல்லப் போனால், பாக்கி பாரத தேசம் பூராவும் ஸநாதன ஸமயக் கலாசாரத்தைப் பறி கொடுத்துக் கொண்டு, புதிய வழிகளில் இழுபட்டபோதுங்கூட மலையாள தேசம்தான் மலைக்கு மறுபக்கம் அந்தக் கலாசாரத்தைக் காபந்தாகக் காப்பாற்றிக் கொண்டிருந்தது. அதனாலேயே ஆசார்யாள் அவதாரமும் அங்கேயே நிகழ்ந்தது.

பிற்காலத்தில் இதற்கு நேரெதிராக நடந்ததையும் சொல்லணும். மலையாளத்துக்குக் கிழக்கே மலைத் தொடரானதால் உள்நாட்டு மாறுதல்களும் புரட்சிகளும் அதை அவ்வளவாக பாதிக்கவில்லையென்றால், அதற்கு மேற்கே என்ன இருக்கிறது? ஸமுத்ரம், அதனால் என்னவாயிற்றென்றால் மேற்கு நாடுகளிலிருந்து இதர மதஸ்தர்கள் ஸமுத்ர மார்க்கமாக வர ஆரம்பித்த காலத்திலிருந்து அவர்கள் நம் தேசத்தில் அடியெடுத்து வைத்தது மலையாளக் கரையில்தான். ஏற்றுமதி வியாபாரத்தில் கொழிக்கும்படியாக அங்கே ஏலக்காய், மிளகு, தேக்கு, சந்தனக் கட்டை எல்லாம் அபரிமிதமாகக் கிடைத்ததால் அவர்கள் அங்கேயே தங்கிவிடுவதும் வழக்கமாயிற்று. யூதர்களிலிருந்து கிறிஸ்துவர்கள், முஸ்ஸீம்கள் எல்லோருக்கும் மலையாளம் தாய் வீடாயிற்று. அவர்களுடைய மதங்களும் அதோடுகூட அங்கேயே அதிகமாக ப்ரசாரமாயிற்று. உள்நாட்டு அவைதிக மதங்களின் பாதிப்புக்கு அதிகம் ஆளாகாத ப்ரதேசமே இப்படி வெளிநாட்டு மதங்களுக்கு நிறைய இடம் கொடுப்பதாக ஆயிற்று!

வேடிக்கையாக இன்னொரு விஷயமும் சொல்கிறேன். வெளிநாட்டு மதங்களை மலையாள நாட்டினர் ஏற்றுக் கொண்டாலும், ஹிந்து மதம் என்று வரும்போது அங்கே நம்முடைய ஆசார்யாளுக்குப் பிறகு அவருடைய ஸம்ப்ரதாயம் தவிர எதையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களில் வைஷ்ணவ மதத்தையோ மத்வ மதத்தையோ பின்பற்றுபவர்கள் கிடையாது. பத்மநாப ஸ்வாமி கோவிலானாலும் ஸரி, குருவாயூரப்பன் கோவிலானாலும் ஸரி அங்கேயெல்லாமும் ஸ்ரீவைஷ்ணவ பட்டர்கள் பூஜை பண்ணுவதில்லை என்று பார்க்கிறோமல்லவா? ஆசார்யாள் தங்கள் தேசத்தைத் தேடி வந்து அவதாரம் பண்ணினாரென்ற பக்தியபிமானம்!…

ஸமீப காலத்தில் போக்குவரத்து ஸாதனங்கள், இங்கிலீஷ் படிப்பு, ஸயன்ஸ் எல்லாம் வ்ருத்தியாக ஆரம்பித்தபின் ஒதுங்கியிருந்த மலையாள ஜனங்கள் ஒரேயடியாக வெளியே வந்து தேசம் பூராவும் பரவ ஆரம்பித்து விட்டார்கள். அங்கே ஜன ஸங்கியையும் பெருகிக் கொண்டே போனது ஒரு முக்ய காரணம். இப்போது வர வர, நம்முடைய தேசம் பூராவில் மட்டுமில்லாமல் அந்நிய தேசங்களுக்கும் அவர்களே ஏராளமாகப் போகிறார்கள். கௌரவம் பார்க்காத உழைப்பு மனப்பான்மையும் தொழில் ஸாமர்த்யமும் இருப்பதால் எடுபிடி வேலை, டீக் கடை இவற்றுக்கும் வருகிறார்கள். படிப்பும் அறிவும் இருப்பதால் பெரிய பெரிய பதவிகளுக்கும் வருகிறார்கள். ஸர்வஜ்ஞரான ஆசார்யாள் அவதரித்த ப்ரதேசத்தைச் சேர்ந்த அவர்களே அப்போதிலிருந்து இப்போதும் ‘லிடரஸி’யில் (படிப்பறிவில்) முதல் ஸ்தானம் வஹித்து வருகிறார்கள்.

புது யுகத்தில், ஒரு பக்கம் பழமையான அத்யயனாதிகளை இன்னமும் காப்பாற்றுபவர்கள் அங்கேயே இருந்தாலும், அங்கேதான் இன்னொரு பக்கம் ரொம்பப் புரட்சிகரமான மாறுதல்களும் ஏற்பட்டிருக்கின்றன. ஆலய ப்ரவேசத்திலிருந்து கம்யூனிஸ்ட் ராஜ்யம் வரை அநேகம் அங்கேதான் அங்குரார்ப்பணமாயிருக்கிறது.

1 “வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத் துறை விளங்க” என்ற சேக்கிழார் வாக்கை நினைவு கூர்ந்து பேசுகிறார்களென்பது தெளிவு.

__________________________________________________________________________________________________________________________________

Brahmins of the early Tamilnadu; Tamil in Kerala

These things must have happened even before the time we call ‘the period of history’.  If people from other castes went there for economic reasons, some Brahmins also might have gone there for matters relating to the Divine.  If you were to ask what that divine connection is, in that state also a lot of divine acts have taken place and those places became great pilgrim centres.  Parasurama himself had established many such pilgrim centres. After having relinquished the old land and having created the new land, Parasurama had put a restriction that no one – other than those he had brought over for settling down – should come from the relinquished places.  Still, over a period of time, after Parasurama was no longer visible and went into solitude [Ekantam – एकान्तम्], the restriction got diluted and it is possible that some Brahmins from the mainland went there on pilgrimage and thereafter settled down there itself.

The beginning of history referred to by the foreigners is only from the time of Asoka.  But even in Ashoka’s inscriptions Kerala is mentioned as one of the regions he has visited; not in the context of invasion but as part of the regions he visited for the purpose of spreading his righteous principles.  This is evidence enough to show that a civilised society already existed there.

It [Malayalam state] was part of the kingdom of Tamil Cheras and its language was Tamil.  The person who wrote Silappathikaram was also from that region.  Cheraman Perumal Nayanar and Kulasekara Perumal, who had sung Thirumurai and Prabhandham respectively in pure Tamil – described as Divine Tamil – were Malayala kings.

Therefore, our Acharya must have also spoken only Tamil.  In those days, all Brahmins were educated (all Brahmin males must have been like that. There would not have been a Brahmin who was not educated or who did not study the Vedas).  They would have conversed among themselves in Sanskrit and with others in Tamil.

Although Acharya incarnated and re-established the Sanatana Dharma, degradation did take place again over a period of time. In due course, taking advantage of the modifications made by Parasurama in the code of conduct, the Namboodris – except for the eldest son of the families – started mingling with other castes and living with them.  When such a relationship got established, the bond between the Sanskrit in which the Nambhoodris had specialised and the Tamil of the others got strengthened.  Malayalam could have evolved as a separate language due to this relationship.

In the process of Brahmins establishing relations with others, although many objectionable [अशास्त्रीय] things happened, since good and bad always go together, some good things also happened.  Owing to the Brahmin connection, people of all castes became endowed with good education and became especially interested in Sanskrit.  Good practices like having a bath regularly, wearing clean clothes, going to temples for darshan, etc. got established.

(This is not meant to ridicule people who are not Brahmins as illiterate, unclean, etc.  Because of their occupation, they – especially the labour folk – are not able to observe much cleanliness and they get used to that.  They are also not able to study for an extended period of time.  Since they are rendering great help to the community through their occupation, the Sastras have also relaxed the rules of hygiene (the strict practice of prescribed regulations) for them.  Compulsory education is also not prescribed. It was said to show that despite these limitations if they have progressed in these aspects in Malayalam, it could be due to the influence of Brahmins).

Though it was connected to the mainland, considering the fact that there were no transport facilities of the modern times in those days, the Malayalam region on the other side of the mountain range remained somewhat secluded. In the time of Acharya too, because it was secluded, it escaped the influence of the confusions experienced in the mainland, and to a large extent continued with the Vedic ways. That is why it was selected for the purpose of incarnation.  Even after the language of Malayalam had evolved, up to the past few centuries also, it (the state of Malayalam) continued to remain secluded. Therefore, when a language evolved exclusively for them, all the people accepted it as their mother tongue with a sense of pride.

Since I have narrated the story of Malayalam so much, I will say a little more.

After the language of Malayalam evolved, Brahmins of Tamil Nadu went over and settled there for certain reasons.  Without taking the trouble to go deeper into the region, they crossed the border and settled down within a short distance.  There are two ways to reach there and they went by both routes.  In one, they went through Coimbatore and settled in Palakkad.  In the other, they went beyond Tenkasi and Sengottai [in Tamil Nadu], and settled down around Tiruvananthapuram.  They were not Namboodris.  The Nambhoodri families who had settled there in the beginning, took over to speaking of Malayalam language later, though they spoke Tamil in the beginning.  The ones I mentioned now settled there after Malayalam had evolved; But Tamil is their mother tongue even today.  Owing to the influence of the surroundings, their Tamil is slightly different.  Influence of Malayalam will be evident in their pronunciation [of Tamil].

When we say that the state remained secluded from the mainland and evolved with a distinct tradition, we should not forget one thing. The word ‘distinct tradition’, should not be construed to mean that they were different from the religious culture of Bharat.  Just as there are many ghats like Saivam, Vaishnavam, Saktam, etc., in the course of the same river of ‘Vedic Tradition’1, Malayala tradition is one of the ghats on the common Ganga of Bharat culture; so are the Tamil tradition, Bengali tradition, Kashmiri tradition etc. All these – including Malayala tradition – have evolved as different branches from the same roots of Bharat culture. Did not Parasurama make the Brahmins from the mainland go over and settle there as the original citizens?  Did he not establish the Vedas, Puranas, temples, ponds, etc., of Bharata desa there also?  Weren’t those who went later also, Tamil people from here? Therefore, it was always attached to the culture of Bharat.  In fact, if we elaborate further, even while the rest of the country was giving up the Sanatana religious culture and was getting dragged into new ways, it was Malayala state – located on the other side of the mountain ranges – which was protecting that culture.  That is why Acharya’s incarnation also took place there.

The contrasting thing that happened later should also be mentioned. Since it had the mountain ranges in the east, the internal changes and revolutions within the country did not affect it much; but what is there in the west? The sea.  Because of this, people of other religions who came from other countries through the sea route set their foot in our country only from the shores of Malayalam. Since cardamom, pepper, teak, sandalwood etc., which enabled a flourishing export business, were available in abundance there, they settled down there itself. Starting with the Jews, for the Christians, Muslims, and others, Malayalam became the mother land. Thus, their religions also spread widely there. Sadly, a state which was not affected by the non-Vedic religions within the country, had to give in to foreign religions!

In a lighter vein, I will also tell you another matter.  Although the people of Malayalam accepted foreign religions, when it came to Hindu religion, subsequent to our Acharya, they did not accept anything other than his tradition. None of them follow the Vaishanva religion or Madhva religion. We see that whether it is the temple of Padmanabhaswamy or the temple of Guruvayurappan, Sri Vaishnava Bhattars do not perform puja there.  They have great devotion and regard as Acharya had come searching to their state to take his incarnation!

In recent times, after transport facilities, English education, Science, etc. improved, Malayalis who remained secluded started to rapidly move out and spread across the entire country.  One of the important reasons was the increase in population there. As of now, they are the ones who migrate in large numbers, not only across our country, but also to foreign nations.  As they respect dignity of labour and have the smartness for doing business, they readily come to take up even miscellaneous jobs, establish tea shops, etc.  With good education and intellect, they also attain high positions.  They belong to the place where the all-knowing [सर्वज्ञः – omniscient] Acharya had incarnated and from then to now occupy the first position in ‘literacy’ (education).

In modern times also, there are people in that region who continue to protect the ancient religious observances; in contrast, revolutionary changes have also taken place only there. Right from the right to entry into temples to the Communist rule, many things have sprouted shoots [अङ्कुरार्पणम्] only there.

1 It is clear that he is recalling the statement of Sekhizhar “veda neri thazhaithonga, migu saiva thurai vilanga”,.

________________________________________________________________________________________________________________________
Audio



Categories: Deivathin Kural

Tags: ,

7 replies

  1. Super drawing by Sowmya a blessed soul! Periyava Anugraham paripoornam !!
    Apt on Adi Shankara jayanthi both drawing as well article from Deivathin kural!!
    Jaya Jaya Shankaraa…

  2. Without doubt it is Kalady Adi Shankaracharya’s birth place and it is Adi Shankara Keerthi Stambham.

  3. Superbly outstanding drawing by Sowmya. One can sense Periyava’s paripoorna anugraham in this picture. Pokkisham Pokkisham on Acharyal’s Jayanthi. Jaya Jaya Sankara Hara Hara Sankara!

  4. Beautiful…periyava blessings always with you sowmya…🙏🙏🙏💐💐💐

  5. The artwork is a masterpiece 🙏🙏🙏

  6. Looks like Kaladi keerthi sthambham
    Pandit Ravichandran

  7. Kaladi Kanchi mantapam / Stupam

Leave a Reply to Saraswathi ThyagarajanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading