ஸ்ரீ சங்கராசார்ய அஷ்டோத்தரம் ஒலிப்பதிவு, லக்ஷ்மிந்ருஸிம்ம பஞ்சரத்னம் பொருளுரை


ஸ்ரீ சங்கராசார்ய அஷ்டோத்தர சத நாமாவளி ஒலிப்பதிவு; Sri Shankaracharya ashtothara naamaavali audio mp3

சங்கரர் தம்முடைய பக்தி கிரந்தங்களில், நம்மைப் போன்ற பாமரர்களும் பகவானிடம் பிரார்த்தனை செய்ய சொல்லிக் கொடுப்பது போல், தன்னை தாழ்த்திக்கொண்டு, கஷ்ட நிவர்த்திக்கவும் (ஸுப்ரமண்ய புஜங்கம்), இஷ்டங்கள் நிறைவேறவும் (கனகதாரா ஸ்தோத்ரம்) பல ஸ்தோத்திரங்களை அருளியுள்ளார்கள்.

ஷட்பதீ ஸ்தோத்ரம் என்ற துதி ஆச்சார்யாள் முமுக்ஷு (முக்தியை நாடுபவன்) என்று நிலையில் செய்த ஸ்தோத்திரம் என்று மஹாபெரியவா சொல்லியுள்ளார்கள்.


ஆனால் ஒரு ஸ்தோத்திரம் முழுக்க அத்வைத ஞானத்தை உபதேசம் செய்வது போல், அதற்கு பக்தியை துணை கொள்வதுபோல அமைந்துள்ளது. அது லக்ஷ்மி நரசிம்ம பஞ்சரத்னம் என்ற ஸ்தோத்திரம். ஆச்சார்யாள் தன்னுடைய வேதாந்த நூல்களில் சொல்லப்பட்ட கருத்துகளையும் உவமைகளையும் இந்த ஸ்தோத்திரத்தில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அந்த வேதாந்த முடிவான ஞானத்தை லட்சுமி நரசிம்மரின் பஜனத்தாலேயே அடையலாம் என்று சொல்வது தனிச்சிறப்பு. அந்த ஸ்தோத்திரத்தின் தமிழ் அர்த்தத்தை இந்த புண்ய தினத்தில் கேட்போமே – லக்ஷ்மிந்ருசிம்ம பஞ்சரத்னம் பொருளுரை; Lakshmi nrusimha stothram meaningCategories: Upanyasam

Tags: , , , ,

Leave a Reply

%d bloggers like this: