தோடகாஷ்டகம் ஸ்லோகத்தின் மஹிமை, தமிழில் பொருளுரை


மஹாபெரியவா சங்கராசார்யாளை குறித்து பேசும் போதெல்லாம் தோடகாஷ்டகத்தில் இருந்து ஸ்லோகங்களை மேற்கோள் காட்டி பேசியிருக்கா.

1968 சங்கர ஜயந்தி அன்று சம்ஸ்க்ருதத்தில் செய்த ஒரு அனுக்ரஹ பாஷணத்தில் ‘பவ ஶங்கர தேஶிக மே ஶரணம் இதி, அஸ்மாகம் தோடகாசார்யாணாம் அயம் ஸ்லோகமேவ ஶரணம்’ அப்படீன்னு சொல்றார் . ‘பவ ஶங்கர தேஶிக மே ஶரணம்’ என்று இந்த தோடகாஷ்டகம் ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவில் வரும் . “ஆசார்யாளுடைய சரணம் எனக்கு புகலிடம்!”னு தோடகாசார்யாள் சொல்றார். “அவருடைய இந்த ஸ்லோகமே நமக்கெல்லாம் புகலிடம்!”னு பெரியவா சொல்றா. இந்த ஸ்லோகத்தை சொல்லிண்டிருந்தா ஆசார்யாளோட அநுகிரஹம் கிடைக்கும்னு பெரியவாளுக்கு அதுல அவ்வளவு நம்பிக்கை.

யாராவது சின்ன குழந்தையா இருந்தாலும் சரி, எவ்வளவு பெரியவாளா இருந்தாலும் சரி, மஹாபெரியவாளை தோடகாஷ்டகம் சொல்லி நமஸ்காரம் பண்ணா, தண்டத்தை வெச்சுண்டு சிலைப் போல, அதை சொல்லி முடிக்கற வரைக்கும் பெரியவா அந்த நமஸ்காரத்தை ஏத்துப்பா. ஆசார்யாளை நினைச்சு பண்றாளேன்னு ஆசார்யாளுக்கு மானசீகமா அந்த நமஸ்காரத்தை கொடுப்பா! அப்படி அந்த ஸ்லோகத்தின் பேரில் பெரியவாளுக்கு பக்தி.

மகாபெரியவா 1968 சம்ஸ்க்ருதத்தில் சங்கர ஜயந்தி அன்று செய்த அனுக்ரஹ பாஷணம் Mahaperiyava anugraha bhaashanam during 1968 Shankara Jayanthi in Samskritham and Telugu

மேலே உள்ள சம்ஸ்க்ருத உரையின் தமிழாக்கமும், தோடகாஷ்டகம் ஸ்லோகத்துக்கு தமிழில் அர்த்தமும் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை பார்க்கவும் – தோடகாஷ்டகம் தமிழில் பொருள்; Meaning of thotakashtakam in tamilCategories: Upanyasam

Tags: , , , ,

4 replies

  1. Slowly but surely Ganapathy Subramanian is taking a prime slot in this group. Mahesh wara will be happier than all of us. He has the blessings of two gurus. One, Mahaperiava and the other Govinda Damodara swamigal. Hara hara sankara jaya jaya sankara. We are blessed in net through Internet.

  2. Thodakashtakam, the great Salutations to the Adhi Sankaracharyal, through whom the Parampara legacy chain runs as on date, has the imbibed Regard with the Mantra of divine letters in the verse, makes the Saints to listen and impose the Athma Nsmaskarams when the followers prostrate with Whole body at the Padam of Mother earth to touch the Gurus Padam with inner self acts, the Kaanikkai after having had the face darshan.

  3. Maha Periyava Thiruvadi charanam. Miha arumai.

  4. எளிமையான விளக்கம் ஞானம் இல்லாதவனுக்கு. புரிகிற படி! தோடகாஷ்டம் அர்த்தம் தெரிந்து சொன்னால் அதனோட depth மனசில் உறைவது போல் ! சரண கமலாலயத்தை மனதில் தியானித்தால் நமக்கு அவருடைய பூர்ண அனுகிரகம் கிடைக்கும் அல்லவா?
    பெரியவா நம்முடன் வாழ்ந்து எப்படி குரு பக்தி செய்வது என்பதற்கு அவரே ஒர் எடுத்துக் காட்டாக இருந்திருக்கிறார் என்றால் மிகை இல்லை!
    அழகாக தொகுத்து அளிக்கப்பட்ட பொக்கிஷம்!
    ஜய ஜய சங்கரா…

Leave a Reply

%d bloggers like this: