சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா


ஒரு தரப்பு இருக்கு. அதாவது ஆதி சங்கரர்  ஞான மார்கத்தை விளக்க வந்தவர், இந்த பாஷ்யங்கள் மட்டும் தான் அவர் பண்ணினது, இந்த பக்தி க்ரந்தங்கள் எல்லாம் அப்பறம் யாரோ பண்ணினா,  அதை ஆதி சங்கரர்  மேல ஏத்தி சொல்றா. அவர் ஆதி சங்கரர், கர்மாவை எல்லாம் நிரஸனம் பண்ணி, பக்தி மார்கத்துனால எல்லாம், பகவான் கிடைக்க மாட்டார், ஞானத்துனால தான் கிடைப்பார் அப்படிங்கிறதைத் தான் அவர் establish பண்ணினார் (நிறுவினார்), அப்படிங்கிற ஒரு thought (எண்ணம்) இருக்கு.

இதுக்கு என்ன சமாதானம் சொல்ல முடியும் னு யோசிச்சேன், நாம ஆதி சங்கரரை தர்சனம் பண்ணல. நாம தர்சனம் பண்ணினது மஹா பெரியவாளைத் தான். மஹா பெரியவா என்ன பண்ணினா அப்படின்னு பார்த்தா,

இந்த ஆதி சங்கரர் சரித்திரம் சொல்லும்போது, பெரியவாளைப் பத்தி நிறைய பேசணும்னும் நினைச்சிண்டு இருந்தேன், கொஞ்சமா தான் பேசியிருக்கேன்னு ஒரு குறை. அதனால இன்னிக்கு  மஹாபெரியவளை பற்றியே பேசுவோம்ன்னு  தீர்மானம் பண்ணி இருக்கேன். அப்பறம் திரும்ப மண்டனமிஸ்ரர் கதைக்கெல்லாம் வரலாம்.

மஹா பெரியவா என்ன பண்ணினான்னு பார்த்தா, நூறு வருஷங்களுக்கு கர்மா, பக்தி, ஞானம் மூணும் பண்ணினா, பேசினா. ஞானத்துக்கு, சந்யாசிகள், மடத்துல இருந்த சன்யாசிகளுக்கு பாஷ்யம் பாடம் எடுத்து இருப்பா. பண்டிதர்களுக்கு வாக்யார்த்த சதஸ் எல்லாம் எடுத்து இருப்பா. ஆனா நமக்கு தெரிஞ்ச மஹா பெரியவா, காஞ்சி பீடாதீஸ்வரளா இருந்து சந்திரமௌலீஸ்வரர் பூஜை மணிக்கணக்கா பண்ணுவா. இது பெரியவாளை பற்றி தெரிஞ்சவா எல்லாருக்கும், பார்த்தவா எல்லாருக்கும் சந்திரமௌலீஸ்வரர் பூஜை தான் ஞாபகம் வரும். அந்த பூஜையை அவருடைய புனித கடமையாக நிறைவேற்றினார். மஹா பிரதோஷத்து போது எல்லாம், அவ்வளவு elaborate ஆக பூஜை பண்ணுவா, பௌர்ணமியின் போது நவாவரண பூஜை பண்ணுவா. வ்யாஸ பூஜை கேட்கவே வேண்டாம், சாயங்காலம் மூணு மணிஆயிடும் பூர்த்தி ஆகறத்துக்கு. காஞ்சி காமாக்ஷி கோவில்ல ஆதி சங்கரர் சன்னதியில போய் ஆதி சங்கரருக்கு பூஜை, காமாக்ஷிக்கு பூஜை, காஞ்சிபுரத்துல பெரியவா இருந்த காலத்துல எல்லாம் ஒவ்வொரு நாளும் காமாக்ஷி தர்சனம் பண்ணியிருக்கா. அவாளோட திக்விஜயம் தவிர காஞ்சிபுரத்துல வந்து  இருந்த காலத்துல எல்லாம் நித்யம் காமாக்ஷி தரிசனம் பண்ணி இருக்கா.

சமூக சேவைன்னு பார்த்தா, கர்மா, பக்தி, ஞானம் எல்லாம் பண்ணினானு சொல்ல வரேன் . சமூகத்துக்கு முதலில் வேத சம்ரக்ஷணம். ‘வேதோ அகில தரம மூலம்’ அப்படீன்னு சொல்லி, வேத சம்ரக்ஷணம் பண்ணனும். இதுக்கு உடனே பணக்காரா கிட்ட போய் நிக்கல, நீங்க பிராமணாள் எல்லாம் வேதம் படிக்க வேண்டியவா , விட்டுட்டேள், ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுங்கோன்னு சொல்லி, ஒரு வேத சம்ரக்ஷண நிதி trust ஒண்ணு ஆரம்பிச்சு, குழந்தைகளை கொடுங்கோ, நாலு பிள்ளைகள் இருந்தா ஒரு பிள்ளையை வேதத்துக்கு கொடுங்கோ, அப்படீன்னு கேட்டு, இன்னிக்கு வேத சப்தம் பூமில இருக்குன்னா பெரியவாதான் காரணம், அப்படி வேதத்தை காப்பாத்தி கொடுத்தா.

ஆகமங்கள் எல்லாம் திரும்பவும் சரி பண்ணி, எல்லா கோவில்கள்லேயும் கும்பாபிஷேகம் பண்ணினா. புதுசா சில கோவில்கள் தான் கட்டினா, ஆதி சங்கரருக்காக சில கோவில்கள் கட்டினா, சதாராவுல நடராஜா கோவில் ஒண்ணு கட்டினா. டெல்லியிலே மலை மந்திர். இங்க ராமேஸ்வரத்துல ஆதி சங்கரருக்காக ஒரு மண்டபம் கட்டினா. புதுப்பெரியவாளை கொண்டு காலடியில ஒரு ஸ்தூபி கட்டினா. இப்படி புது கோவில்கள் கொஞ்சம் தான். இருக்கற கோவில்கள்ல எல்லாம் ஒரு விளக்காவது ஏத்தணும் அப்படீன்னு சொன்னா. அந்த குருக்களா இருக்கறவாளுக்கு எல்லாம், திரும்பவும் அந்த ஆகம படிப்பெல்லாம் சொல்லி கொடுத்து, அதுக்கெல்லாம் college வெச்சு, பரீக்ஷை வெச்சு அப்படி சமூகத்துக்கு திரும்பவும் வேத விளக்கை ஏத்திக் குடுத்து, பக்தியை திரும்பவும் தூண்டி, ஜனங்கள் எல்லாம் ஆஸ்திக வழில இருக்கறதுக்கு பண்ணினா.

அது தவிர பரோபகாரம். பேசின போதெல்லாம், “நம்மால முடிஞ்ச  பரோபகாரம் பண்ணனும். பரோபகாரம் பண்ணும் போது ஏச்சு பேச்சு வரத்தான் செய்யும், நாம அதை கவனிக்க படாது, முதல்ல donation வாங்கறதுக்கு நாம பணக்காராள் கிட்ட போய் நிக்கப்படாது, ஏழைகள் கிட்ட முதல்ல வாங்கிக்கோங்கோ, அவா முடிஞ்சா கொடுப்பா, சந்தோஷமா கொடுப்பா, அப்பறம் பாக்கி வேணும்ங்கிறதுக்கு பணக்காராள் கிட்ட போகலாம். ஹனுமார் மாதிரி humbleஅ இருந்துக்கோங்கோ, பரோபகாரம் பண்றவா” இப்படியெல்லாம் சொல்லி encourage பண்ணி, நிறைய பரோபகாரம் பண்ண வெச்சுருக்கா.

அதுவும் ஜீவாத்மா கைங்கர்யம் என்கிற அனாதை பிரேத சம்ஸ்காரம்ம்பா. அஸ்வமேத யாகம் பண்ணின பலன் அதுக்குன்னு பெரியவா சொல்லி, ஜீவாத்மா கைங்கர்யம்பா பண்ணி இருக்கா. பெரியவா இருந்த 100 yearsல ஒரு காலத்துல பஞ்சம் எல்லாம் வந்து இருக்கு, அனாதை பிரேதம்  எல்லாம் சம்ஸ்காரம் இல்லாம போன காலங்கள் இருந்து இருக்கு, யுத்த காலங்கள் எல்லாம் இருந்து இருக்கு. அதெல்லாம் தாண்டி வந்து பெரியவா அந்தந்த காலத்துல வழி காண்பிச்சு இருக்கா.

மீதியை படிக்க / கேட்க – ஸ்ரீ சங்கர சரிதம் – எட்டாம் பகுதி – சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவாCategories: Upanyasam

Tags:

5 replies

 1. How to do guru pooja periyava swamy?
  Anyone knows please inform
  please contact 7397736556

 2. JAGADGURU SHRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM

 3. அழகான எளிய விளக்கம்! பெரியவா பத்தி பேசரபோது, அப்படியே கோவில் கும்பாபிஷேகம், வேத சம்ரக்ஷனம் , கோ சம்ரக்ஷனம் இவற்றுக்கு எப்படி முக்யத்வாம் கொடுத்தார் என்பது இப்போ நடை முறையிலே பாத்தாலே தெரியும். இப்போ எல்லாரும் இந்த பணிலே ஈடுப்பட்டு ச்ரததையா செய்யறா ! But for Him it would not have been implemented !
  எண்ணையில்லா கோவில், . கவனிப்பாரற்று இருந்த கோவில்களும் இவ்வாறே தனி கவனிப்பும் பல வேறு மக்களால் நடைபெற்று வருகின்றன.
  தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவெம்பாவை திருப்புகழ் இவை மறு மலர்ச்சி அடைந்தது இவர் காலத்தில்தான்! சிலர் தவறாக சம்ஸ்க்ருதம் மட்டுமே மடத்தில் ஊக்கப் படுத்தப்படுவதாக நினைப்பது முற்றிலும் தவறாகும்.
  நலிந்த மக்களுக்கு உதவி செய்வதிலும் பெரியவாளுக்கு நிகர் அவரே!
  ஏழை பங்காளன் !
  இன்னும்.சொல்லிக் கொண்டே போகலாம். கணபதி செவ்வையாக கோர்வையாக பெரியவா பற்றி சொல்லியிருக்கார்.
  அதைப் படித்து நாம் இன்புறலாம்!!
  ஜய ஜய சங்கரா…..

 4. பெரியவா ஶரணம்

  இன்னிக்கும் சிதிலமான கோவில்களை பார்க்கும்போது, பெரியவா தான் நியாபகம் வரா. பெரியவா கையால புணருத்தாரணம் செய்யப்பட்ட ஆலயங்கள் அநேகம், அநேகம்.

  இன்னொரு 100 வருஷம் அவர் இருந்திருக்கலாமோன்னு ஏக்கமா இருக்கு. மஹா பெரியவா உடைய எண்ணங்களை ஈடேத்துறதுதான் நாம அவாளுக்கு செய்யும் மிகப் பெரிய சேவை.

  ஜெய ஜெய ஶங்கர…… ஹர ஹர ஶங்கர….

 5. Jaya Jaya Sabkara Hara Hara Sankara, saranam saranam Janakiraman Nagapattinam

Leave a Reply

%d bloggers like this: