ஸ்ரீ சங்கர சரிதம் எளிய தமிழில்


மஹாபெரியவா, தெய்வத்தின் குரல் ஐந்தாம் பகுதியில், ஆதிசங்கரரின் சரித்ரத்தை, விஸ்தாரமாக 800 பக்கங்களில் ஆனந்தமாக பேசியிருக்கிறார்கள். இந்த இணையதளத்தில் சாய்ஸ்ரீநிவாசன், சௌம்யா மற்றும் நண்பர்கள், ஒவ்வொரு அத்தியாயத்தையும் எடுத்துக்கொண்டு, அதை ஒலிப்பதிவு செய்து, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, சிறந்த கற்பனை வளத்தோடு ஒரு சித்திரமும் வரைந்து, வாராவாரம் வெளியிட்டு வருகிறார்கள். அதை நீங்கள் அவசியம் பாருங்கள், கேளுங்கள்.

நான் மஹாபெரியவாளின் சங்கர சரிதத்தை என் குருநாதரிடம் பலமுறை படித்திருக்கிறேன். கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், ராமாயணத்தையும் பாகவதத்தையும் எத்தனை ஆசையாக கேட்பாரோ, அதே போல ஆசையோடு, இந்த சங்கர சரிதத்தை கேட்டு மகிழ்ந்து, இடையிடையில் மஹாபெரியவாளை பற்றி பல அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். அதனால் இந்த சங்கர சரிதத்தை எல்லாருக்கும் சொல்ல வேண்டும் என்று எனக்கு ஒரு ஆவல்.

என்னுடைய மழலை மொழியில், எளிய தமிழில், இருபது நிமிஷங்கள் கொண்ட பதினாறு பாகங்களாக, ஸ்ரீ சங்கர சரிதத்தை சொல்லி இருக்கிறேன். அதில் முக்கியமாக ஆதி சங்கரர் அவதாரத்தோடு, மஹாபெரியவாளின் அவதாரத்தையும், ஆதிசங்கரர் ஸன்யாசம் வரும் போது, மஹாபெரியவாளின் ஸன்யாசத்தையும், ஆதிசங்கரரின் பாதையில் மஹாபெரியவா நடந்து காட்டியதையும் விரிவாகப் பேசியிருக்கிறேன். ஆதிசங்கரரின் பக்தி கிரந்தங்களை அதிகமாக மேற்கோளாக கொடுத்து இருக்கிறேன். குழந்தைகளும் ரசிக்க கூடிய, ஆதிசங்கரரின் வாழ்வில் நடந்த சுவையான சம்பவங்களை, விடாமல் கூறியிருக்கிறேன். இந்த மாதம் 28ஆம் தேதி (28th April 2020) ஸ்ரீசங்கர ஜயந்தி மஹோத்ஸவம் வருகிறது. சங்கர சரிதத்தை கேட்டு அவருடைய மஹிமையை மனதில் கொண்டாடுவோம்.

ஸ்ரீ சங்கர சரிதம் – முதல் பகுதி – ஏன் சங்கர சரிதத்தை கேட்க வேண்டும்?

ஸ்ரீ சங்கர சரிதம் – இரண்டாம் பகுதி – சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து

ஸ்ரீ சங்கர சரிதம் – மூன்றாம் பகுதி – ஸ்ரீசங்கர ஜனனம்; மகாபெரியவா ஜனனம்

ஸ்ரீ சங்கர சரிதம் – நான்காம் பகுதி – சங்கரர் சன்யாசம்; மகாபெரியவா சன்யாசம்

ஸ்ரீ சங்கர சரிதம் – ஐந்தாம் பகுதி – காசியில் சங்கரர்

ஸ்ரீ சங்கர சரிதம் – ஆறாம் பகுதி – அத்வைத குரு பரம்பரை

ஸ்ரீ சங்கர சரிதம் – ஏழாம் பகுதி – பக்தியின் மூலமே ஞானம் அடையலாம்

ஸ்ரீ சங்கர சரிதம் – எட்டாம் பகுதி – சங்கரர் காட்டிய வழியில் மகாபெரியவா

ஸ்ரீ சங்கர சரிதம் – ஒன்பதாம் பகுதி – சங்கர பாஷ்யத்தில் பக்தியின் ஏற்றம்

ஸ்ரீ சங்கர சரிதம் – பத்தாம் பகுதி – குமாரில பட்டர் கதை


ஸ்ரீ சங்கர சரிதம் – பதினொன்றாம் பகுதி – மண்டனமிஸ்ரரை சங்கரர் வாதத்தில் வென்றது

ஸ்ரீ சங்கர சரிதம் – பன்னிரண்டாம் பகுதி – பத்மபாதர் கதை

ஸ்ரீ சங்கர சரிதம் – பதிமூன்றாம் பகுதி – ஞானப் பாதை யாருக்கு? தோடகாஷ்டகம் தான் நமக்கு

ஸ்ரீ சங்கர சரிதம் – பதினான்காம் பகுதி – ஸ்தோத்ரங்கள் மூலமாக சங்கர திக்விஜயம்

ஸ்ரீ சங்கர சரிதம் – பதினைந்தாம் பகுதி – காஞ்சியில் சங்கரர் விதேஹ முக்தி

ஸ்ரீ சங்கர சரிதம் – பதினாறாம் பகுதி – சங்கர ஜயந்தி ஸர்வ உத்கிருஷ்டமான புண்ய காலம்

 


Categories: Upanyasam

3 replies

 1. It is purely Divine Will that Has made it possible.Invaluable Treasure your articles.May the Almighty stand by You.

 2. ஜய ஜய சங்கரா…
  எளிமையான விளக்கம் அழகான பிரவசனம்!
  சங்கரர் சன்யாச காண்டம் விளக்கும்போது, இன்னொரு பிறவி ரோத முதலை ரூபமாக வந்து கந்தர்வன் காலைப் பிடித்ததால் சன்யாசசதர்மத்தில் கொண்டு, இன்னொரு பிறவி எடுத்ததாக வருகிறது. பிரத்யக்ஷ பரமேஸ்வரன் அவர்! இது போல் நிகழ்ச்சி பெரியவா வாழ்க்கையிலும் ஒர் முறை நடந்துள்ளது! காசியில் கங்கா ஸ்நானம் செய்யும் போது ஒர் முதலை பெரியவாளை சுற்றி வருகிறது ! உதய இருந்த பார்ஷதர்கள் ஓட்டி கரைக்கு வந்து ” பெரியவா , பெரியவா” என்று கத்துகிரார்கள். எடையனூர் கோகிலா பாட்டி பெரியவாளை மகன் ஸ்தானத்தில் வைத்து மிக வாஞ்சையுடன் இருப்பார்கள்! பெரியவா செல்லும்.இயமெல்லாம் இதன் செல்வார்கள்! அவர்களும் வரச சொல்லி அழைத்தும் பெரியவா ஸ்நானம் முடித்து சாதாரணமாக வந்து அனுஷ்டானம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அவரிடம் யாரும்.எதுவும்.கேட்கவில்லை.ராத்திரி வழக்கம் போல் கோகிலா பாட்டி எல்லாம் சரியாக இருக்கா என்று கற்கச் செல்லும்போது முதலை பற்றி விசாரிக்க நினைக்கிறார்.
  பெரியவா ” என்ன முதலை பற்றித் தானே கேட்கப் போகிறீர்கள்”?
  கந்தர்வன் முதலையாக வந்ததை நீங்கள் பார்க்கவில்லை அல்லவா அதான் ” என்று முடிக்காமல் பாதியில் நிறுத்திவிட்டார் ! (U(nderstood)! இதிலிருந்து பகவத் பாதரும் நானும் ஒன்றே என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார்கள் பெரியவா!
  ஜய ஜய சங்கரா…..

 3. நாம் ஆசாரியாளை தரிசித்தது இல்லை,நம் பெரியவாளைத்தான் தரிசித்து இருக்கிறோம் .இதை அனுபவபூர்வமாக உணர்ந்தாலும் அதை தங்கள் இனிமையான குரலில் மேலும் உணரவைத்துவிட்டீர்கள்🙏🙏🙏🙏ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர. பெரியவா சரணம் 🙏🙏🙏🙏

Leave a Reply

%d