காஞ்சி மஹானின் நினைவைப் போற்றும் இந்த இணையதளத்தை விடாமல் படித்து வரும் பெரியவா பக்தர்கள் அனைவருக்கும் ‘சார்வரி’ வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ஸ்ரீமத் பாகவதத்தில், உத்தவ கீதையில், யது மகாராஜன், தத்தாத்ரேய மஹா யோகியைப் பார்த்து நமஸ்காரம் பண்ணிக் கேட்கிறார். “நீங்க எங்களை மாதிரி இந்த ஸம்சார தாபத்துல தவிக்காம பேரானந்தத்துல இருக்கேள். ஒரு காட்டுத்தீயில எல்லா மிருகங்களும் அவஸ்தை படும்போது, ஒரு யானை மட்டும் தப்பிச்சுப் போய் கங்கையோட ஒரு மடுவுல, ஜலத்துகுள்ள இருந்தா எவ்வளவு ஆனந்தமா இருக்குமோ, அந்த மாதிரி நீங்க இருக்கேள். அது எப்படீன்னு எங்களுக்குச் சொல்லிக் கொடுங்கோ”, அப்டீன்னு கேட்கறார். அந்த தத்தாத்ரேய மஹா யோகி “எனக்கு 24 குருமார்கள். அவாகிட்டயிருந்து நான் படிப்பினைகள் தெரிஞ்சுண்டேன்”, அப்டீன்னு சொல்றார்.
கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் இந்த இடத்தில் “நாம மஹாபெரியவாளை ஆச்ரயித்து, பகவத் பஜனம், ராம நாம ஜபம் பண்ணிண்டு இருந்தால், உலகில் எந்த ஆபத்து வந்தாலும், கங்கை மடுவில் யானையை போல, பயமில்லாமல் இருக்கலாம்” என்று சொல்வார். அப்படி இந்த புது வருடத்தை மஹாபெரியவா பேரைச் சொல்லிக் கொண்டு ஆனந்தமாக வரவேற்போம். தைரியமாக எதிர்கொள்வோம்.
இந்த சார்வரி வருடம் இங்கே மாலை வேளையில் பிறக்கிறது. அதனால் நாளை விடியற்காலை எழுந்து விஷுக்கணி கொண்டாடுவோம். அதில் எங்கள் க்ருஹத்தில் கூடுதலாக, ஒரு மணி நேரம், ஒவ்வொரு ஸ்வாமியின் மூர்த்தியை கையில் வைத்துகொண்டு, அந்த ஸ்வாமி பரமான ஸ்லோகங்கள் சொல்லி வழிபடுவோம். இந்த சிவானந்த லஹரி பொருளுரையில், அந்த வழக்கத்தைப் பற்றி விஸ்தாரமாக பேசி இருக்கிறேன். எத்தனையோ தலைமுறைகளாக நம் குடும்பங்களில் இருந்து வரும் இந்த வழக்கத்தை, நீங்களும் கூட இந்த வருடத்தில் இருந்து பண்ணலாமே என்றெண்ணி, உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். சிவானந்தலஹரி 49வது 50வது ஸ்லோகம் பொருளுரை
Categories: Devotee Experiences
Namasthe,
English translation please
Thank you
இந்த சர்வாரி வருட புத்தாண்டில் இந்த கொரோனா வைரஸ் ஒழிந்து, மழை அதிகம் பொழிந்து தொழில் அபிவிருத்தி ஆகி விவசாயம் பெருகி நாமெல்லாம் பரம க்ஷேமமாக இருக்க நம் மஹாபெரியவா அருள் புரியவேண்டி அவாளுக்கு நம் புத்தாண்டு நமஸ்கரங்களை சமர்ப்பித்து அவாளின் கருணையை பெறுவோம்
குரு,பெரியவா,தாய்,தந்தை நடைமுறை பழக்கங்கள் அதனால் உருவான பக்தி,அதற்கு உவமான சிவானந்தலஹரி ஸ்லோகப் பொருள் ,இவற்றை கோர்வயாக சொன்னவிதம் அருமை.அனைவருக்கும் சார்வரி வருட வந்தனங்கள்🙏🙏
அழகான இன்றைய தினத்திற்கு ஏற்புடையதாக உள்ள பதிவு !
சொற்சுவையும் பொருள் சுவையும் கூடியதான அழகான விவரிப்பு!
இயற்கைஅன்னையின் வர பிரசாதங்களான, பழங்கள், காய்கறிகள், புஷ்பங்கள் ஆகியவற்றை அவருக்கே அளித்து வழிபடுவது என்பது நம் முன்னோர்களின் thoughtfulness என்ற அழகான வந்தனா முறையைக் காண்பிக்கிறது இது கேரள தேசத்திலும், திருநெல்வேலி ஜனங்களுக்கும் உரித்தான இயற்கை வழிபாடாகும். நான் யோசிப்பது வழக்கம் ஏன் தமிழ் நாட்டிலும் ஏனைய பகுதிகளிலும் இது பின்.பற்றப்படவில்லை என்பதாக!
பக்தியாகிற கொடி அளவர்ற்கரிய அழிவற்ற பலன்களை அளிப்பதற்கு ஈஸ்வரனது பாதாராவிந்த சரணங்களை இறுக்கப் பிடித்துக் கொள்ளவேண்டும்! பக்தியான ஜலம், தைரியமே கொடியின் தாங்கு கோலப் போல அசைவற்ற ஸ்திரமான எண்ணங்களே பந்தல், நம் முன் ஜன்ம சத் கர்மாக்கள் எரு இப்படியாக ஆசார்யாள் இங்கு ஈஸ்வர பக்தி எப்படி நம்மை உய்விக்கும் என்று அழகுபட, சுவை பட சொல்கிறார்! அழகான ஸ்லோகம்!
Soundaryalahari அம்பாளின் அழகை வர்ணிக்கிறார் போல் சிவானந்தலஹரி பக்தியின் சிறப்பு மேமையை அழகுபட வர்ணிககும் சிறந்த ஸ்லோகக்கோர்வை!
பூர்வ ஜன்ம சுகிர்தத்தால் நாம் இந்துக்க லாஸ்கப் பிறந்து, சத் குருவை அடைந்து, இது போன்ற நல்ல ஸ்லோகங்கள், உபதேசங்களைக் கேட்க கொடுத்து வைத்திருக்கிறோம்!
JAGATGURU SRI MAHAPERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
JAGATGURU SRI MAHA PERIYAVAA THIRUVADI SARANAM SARANAM
Om Sri Gurubhyo Namaha
This saaRvari Year May Mahaperiava’s blessings Sanctify our ISHAANA KONa
& enable us to install the Kuladevata
Praanic energy bodies’… the very Backbone of any 🏠 hold …..
& The Pyramid YANTRA…. the VIIITH CHAKRA ancestral preservatives ….
to bestow upon the inheritance for a better EVOLVED WAARIS… progeny for
wisdomful wholesome living..
So that in this New age of Evolution.,
All of us can have a balanced LOKIK & Alokik lives…. thereby contributing
to Ecological balancing…..
Tysm
Jaya Jaya Shankara Hara Hara Shankara
I feel blessed to have had Maha Periyavaa’s darshan plenty of times and now meditate on him.
I believe he is my (Our) Guru, Parasakthi and Parameshwara.
What more do I (We) need.
Maha Periyavaa Saranam.