Anusham Special Poem by Sri Anand Vasudevan and drawing by Sudhan

ராகம் – கல்யாணி

பல்லவி
ஒரு துளி கண்ணீர் வரவேணும் மஹாபெரியவா
 
அனுபல்லவி
காஞ்சியிலே நின் சன்னிதி முன்பாகவே நின்று
நெக்குருகி மனம் கரைந்து அனுக்ஷணமும் உனை நினைத்து

(ஒரு துளி கண்ணீர்)
 
சரணம்

விளையாடும் பருவத்தில் காமகோடி
பீடமதில் ஜகத்குருவாய் அமர்ந்து
நாடிவரும் பக்தர்களின் மனக்குறை
போக்க அருள் மழை பொழிந்ததைக் கேட்டு
 
(ஒரு துளி கண்ணீர்)

நான்மறை வேதங்கள் நாற்திசையும் முழங்க
நாடெங்கிலும் நடந்த நடமாடும் தெய்வமே
ஆலயங்கள் கோபுரங்கள் நிர்மாணப் பணியென
பற்பல கார்யங்கள் பாங்குற செய்ததை எண்ணி

(ஒரு துளி கண்ணீர்)

எண்ணம் / எழுத்து – ஸ்ரீ ஆனந்த் வாசுதேவன்

இசையமைத்து பாடியவர் – ஸ்ரீமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா

Please click on the following link to hear the song

 



Categories: Audio Content, Bookshelf, Photos

Tags:

1 reply

  1. Brilliant Sudhan👌👌🙏🙏

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading