காஞ்சி மாநகர் போக வேண்டும், எங்கள் காருண்யமூர்த்தியை காண வேண்டும்

இன்னிக்கு அனுஷம். ‘காஞ்சி மாநகர் போக வேண்டும், எங்கள் காருண்யமூர்த்தியை காண வேண்டும்’ என்று புதுப்பெரியவா பாடுவது காதில் ஒலிக்கிறது. மூக பஞ்ச சதியில் ‘என் கண்களுக்கு முன்னால் காமாக்ஷி தேவியை எப்போது காண்பேன்’ என்று வரும் ஒரு ஸ்லோகத்தில், ஒவ்வொரு பாதமுமே மஹாபெரியவாளுக்கு பொருந்தும்.

कवीन्द्रहृदयेचरी परिगृहीतकाञ्चीपुरी निरूढकरुणाझरी निखिललोकरक्षाकरी ।
मनःपथदवीयसी मदनशासनप्रेयसी महागुणगरीयसी मम दृशो‌sस्तु नेदीयसी ॥

கவீந்த்³ரஹ்ருʼத³யேசரீ பரிக்³ருʼஹீதகாஞ்சீபுரீ
நிரூட⁴கருணாஜ²ரீ நிகி²லலோகரக்ஷாகரீ ।
மன:பத²த³வீயஸீ மத³னஶாஸனப்ரேயஸீ
மஹாகு³ணக³ரீயஸீ மம த்³ருʼஶோऽஸ்து நேதீ³யஸீ ॥

‘நிரூட⁴கருணாஜ²ரீ’ என்கிறார். கருணை அருவி, என்கிறார். அப்படி அருவி போல அருள் பொழியும் பெரியவாளின் குணங்களை பாடினால், பேசினால், ‘கவீந்த்³ரஹ்ருʼத³யேசரீ’ – பெரியவா நம் மனத்தில் வந்துவிடுவார். முழு ஸ்லோகத்தின் பொருளைக் கேட்க – ஸ்துதி சதகம் 84வது ஸ்லோகம் பொருளுரை

நாம் பெரியவா மஹிமையை பேசி ஆனந்தப் படுகிறோம். பெரியவா ராமருடைய மஹிமையையும், கிருஷ்ணருடைய பெருமையையும் பேசி, கேட்டு ஆனந்தப் படுவா. ஒரு முறை பெரியவா “ராஸ பஞ்சாத்யாயியை படன – சிரவண – மனனம் செய்த பிறகுதான், சந்யாஸம் ஸித்தித்தது என்று நான் தீர்மானம் செய்து கொண்டேன்!….” ன்னு சொல்லி இருக்கா.

மஹாபெரியவா, கோவிந்த தாமோதர ஸ்வாமிகளிடம் 19 வருடங்கள், ஒவ்வொரு வருடமும் கோகுலாஷ்டமி அன்று பூர்த்தி ஆகுமாறு ‘ஸ்ரீமத் பாகவத சப்தாஹம்’ செய்யச் சொல்லி மூல பாராயணமும், ப்ரவசனமும் நிறைய கேட்டு அனுக்ரஹம் பண்ணி இருக்கா. நாராயணீயத்தை ஏக தின பாராயணமாக பண்ணச் சொல்லிக் கேட்டு இருக்கா. ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தை, நவாஹமாக ஒரு முறை  கேட்டு  இருக்கா.

ராஸ கேளியை அதிஅற்புதமாக வர்ணிக்கும் ஸ்ரீமந்நாராயணீயம் ‘கேசபாசதிருத பிஞ்சிகா விததி’ என்று தொடங்கும் 69வது தசகத்தை என் மழலையில் (-:) கேட்க – நாராயணீயம் அறுபத்தி ஒன்பதாவது தசகம் ஒலிப்பதிவு; Narayaneeyam 69th Dashakam audio mp3



Categories: Devotee Experiences

3 replies

  1. Periyava Tiruvadi Saranam

  2. சிறந்த ஞானிகளின் மனதில் ஸதா நடமாடும் அன்னை காமாட்சி கருணாவாரிதி! உலகத்தை ரக்ஷணம் செய் வாள், உத்தாரணமும் செய்பவள்! பரமேஸ்வரனின் அன்புக்குப் பாத்திரமானவள்!
    பெரியவா வேறு காமாக்ஷி வேறு இல்லையே! சகல அன்னையின் குணங்களும்
    அப்பனான பெரியவாளிடம் இருக்க ஏது பேதம்? சொல் விளக்கம் பல உதாரணங்கள் மேற்கோள்களுடன் அற்புதம்!

  3. JaiGuruDev.

    Can someone kindly translate this into English?

Leave a Reply

%d bloggers like this: