பாரத பிரதமர் நேற்றைய தம் உரையில் வால்மீகி ராமாயணத்திலிருந்து ஒரு ஸ்லோகத்தை மேற்கோள் காட்டினார். இவை, சீதையை இழந்து மனம் தளர்ந்த ஸ்ரீராமருக்கு லக்ஷ்மணன் சொல்லும் வார்த்தைகள். இந்த இக்கட்டான வேளையில் எவ்வளவு பொருத்தமான மேற்கோள்!
उत्साहो बलवानार्य नास्त्युत्साहात्परं बलम् ।
सोत्साहस्यास्ति लोकेऽस्मिन् न किञ्चिदपि दुर्लभम् ।।
உத்ஸாஹோ பலவான் ஆர்ய!
நாஸ்த்யுத்ஸாஹாத்பரம் ப3லம் |
ஸோத்ஸாஹஸ்யாஸ்தி லோகேஸ்மின்
ந கிஞ்சிதபி துர்லப4ம் ||
‘அண்ணா! உத்சாகமே பெரும் பலம். உத்சாகத்திற்கு மேலான பலம் இல்லை. ஊக்கத்தோடு செயல்பட்டால் இந்த உலகில் எதையும் சாதிக்கலாம்.’ (அதனால் உத்சாகத்தை கைவிடார்தீகள். முயற்சி திருவினையாக்கும். முயற்சி ஒன்றினாலேயே ராவணனை வென்று சீதையை மீண்டும் அடைவீர்கள்.)
மஹாபெரியவா தீபத்தை ஏற்றும் போது ஒரு ச்லோகம் சொல்ல வேண்டும் என்று சொல்வார்கள்.
कीटा: पतङ्गा: मशका: च वृक्षाः. जले स्थले ये निवसन्ति जीवाः|
दृष्ट्वा प्रदीपं न च जन्म भाजा: सुखिनः भवन्तु श्वपचाः हि विप्रा:||
கீடா: பதங்கா: மச’காச்ச வ்ருக்ஷா:
ஜலே ஸ்த2லே யே நிவஸந்தி ஜீவா: |
த்ருஷ்ட்வா ப்ரதீ3பம் ந ச ஜன்ம பா4ஜா:
ஸுகின: பவந்து ச்வபசா ஹி விப்ரா: ||
”புழுக்களோ, பக்ஷிகளோ, அல்லது ஒரு கொசுவாகத்தான் இருக்கட்டும், அந்தக் கொசுவோ, நம்மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற வ்ருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும், பூமியிலும் எத்தனை தினுஸான ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மநுஷ்யங்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் பிராம்மணனோ பஞ்சமனோ எவனானாலும் ஸரி, எதுவானாலும் ஸரி, இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய ஸகல பாபங்களும் நிவ்ருத்தியாகி, இன்னொரு ஜன்மா எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்” என்று இந்த ச்லோகத்துக்கு அர்த்தம்.
வால்மீகி ராமாயணத்தை மேற்கோள் காட்டும் ஒரு தலைவர், நெற்றியில், விபூதி சந்தனம் இட்டுக்கொண்டு, சிவராத்திரி அன்று கங்கா மாதாவையும், காசி விச்வநாதரையும் வழிபடும் ஒரு தலைவர், உலகில் நம் தேசத்திற்கும் மதத்திற்கும் மீண்டும் பெருமதிப்பை ஏற்படுத்திய ஒரு தலைவர் ‘எல்லோர் உள்ளங்களிலும் இருள் அகன்று நம்பிக்கை பிறக்க ஒரு தீபம் ஏற்றுங்கள்’ என்று சொல்லும் போது அதை கேட்பதில் என்ன குறைந்து விடப்போகிறது? மேலான நன்மையே ஏற்படும். இன்று (ஏப்ரல் 5 2020) இந்திய மணிப்படி இரவு 9 மணிக்கு வாசலில் விளக்கேற்றி 9 நிமிடங்களுக்கு பகவன் நாம ஜபம் செய்து, வந்துள்ள இந்த பேரிடர் களைய பெரியவாளை பிரார்த்திப்போம்.
மூக பஞ்ச சதீ ஸ்தோத்ரத்தில் காமாக்ஷி தேவியின் மந்தஸ்மிதத்தை மோக்ஷ மார்கத்துக்கு வழி காட்டும் தீபமாக ஒரு ஸ்லோகத்தில் மூககவி பாடுகிறார்.
क्षुण्णं केनचिदेव धीरमनसा कुत्रापि नानाजनैः
कर्मग्रन्थिनियन्त्रितैरसुगमं कामाक्षि सामान्यतः ।
मुग्धैर्द्रुष्टुमशक्यमेव मनसा मूढस्य मे मौक्तिकं
मार्गं दर्शयतु प्रदीप इव ते मन्दस्मितश्रीरियम् ॥
க்ஷுண்ணம் கேனசிதேவ தீ4ரமனஸா குத்ராபி நானாஜனை:
கர்மக்3ரன்தி2நியன்த்ரிதைரஸுக3மம் காமாக்ஷி ஸாமான்யத: |
முக்3தை4ர்த்ருஷ்டுமஶக்யமேவ மனஸா மூட4ஸ்ய மே மௌக்திகம்
மார்க3ம் தர்ஶயது ப்ரதீப இவ தே மந்த3ஸ்மிதஶ்ரீரியம் ||
சில வருடங்களுக்கு முன், மஹாபெரியவா ஆராதனை அன்று, இந்த ஸ்லோகத்தின் பொருளையும், அதன் மூலம் பெரியவா ஸ்வாமிகளுக்கு பண்ணின அனுக்ரஹத்தையும் பகிர்ந்தேன். அந்த சுவையான நிகழ்ச்சியை, இங்கே படிக்கலாம் – க்ஷுண்ணம் கேனசிதேவ தீ4ரமனஸா
Categories: Upanyasam
Saraswathi Thyagarajan கூறியது முற்றிலும் உண்மை. ஸ்வாமிகள் கடாஷம் பரிபூரணமாக இருப்பதால்தான் இவ்வளவு அருமையாக அமைகின்றன விளக்கங்கள்🙏🙏🙏🙏ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
அருமை! Explanation with proper slokas shows how you have deep knowledge in various Grantham’s! All because of your association with Swamigal more than 20 years! Bow to your knowledge Ganapathy! Whenever you write about any subject you bring all proper slokas of different Mahan’s !
Outstanding! I didn’t watch PM’s speech but from this message I understand that he quoted Ramayana. How profound his knowledge is! Thank you Ganapathy for the meaning and also additional reference to the power of lighting deepam. Like you said, we are not going to lose anything by doing what the PM says.
Jai Hind!
Thank you Mahesh.
Thank you for giving very nice explanation for Ramayanam slokam, also slokam to be recited when lighting Deepam.
Excellent Explanation for the Deepam. Periava Padam Sharanam.