விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் பகவானுக்கு ‘பயக்ருத்’ ‘பயநாசன’ என்று இரண்டு பெயர்கள் வரும். “பயத்தை கொடுக்கறதும், பயத்தைப் போக்கறதும், பகவான்தான். அம்மா, குழந்தை எங்கயாவது அடுப்பை போயி தொட்டுறப் போறதுன்னு, பூனை மாதிரி கத்துவா. அந்த குழந்தை, ஓடி வந்து, உடனே, அம்மா காலை கட்டிண்டுடும். அந்த மாதிரி பகவான், தன்கிட்ட தன்னுடைய குழந்தைகளை வர வைக்கறதுக்காகத் தான், பயத்தை கொடுக்கறார்” என்று ஸ்வாமிகள் சொல்வார். ஆபத்து வந்த காலத்தில், வீணே சஞ்சலப் படாமல் இருக்க, மகான்கள், இதிஹாச புராணங்களில் இருந்து சில பகுதிகளை படிக்கச் சொல்வார்கள். வால்மீகி ராமாயணத்தில் இருந்து அது போன்ற சில பகுதிகளை பார்ப்போம்.
இந்திரஜித் பிரம்மாஸ்த்ரம் பிரயோகித்து கோடிக்கணக்கான வானரர்களையும் ராம லக்ஷ்மணரையும் வீழ்த்தி விடுகிறான். அப்போது ஹனுமார் மூலிகை மலையை கொண்டு வந்து அவர்களை உயிர்பிக்கிறார். அந்த ஸர்கத்தின் பிரதிபதார்த்தம், (பதவுரை) கீழே கொடுக்கப் பட்டுள்ளது. நமக்கு பொதுவாக கதை தெரியுமானாலும், இது போல ஆழ்ந்து படிக்கும்போது / கேட்கும் போது, அவற்றில் உள்ள ஆச்சர்யமான, ஆக்கபூர்வமான பல விஷயங்களும், அதோடு அந்த ரிஷி வாக்யத்தின் மூலம் பகவதனுக்ரஹமும் கிடைத்து, நாம் ஆபத்தில் இருந்து மீண்டு விடுவோம்.
அடுத்தாக விபீஷண சரணாகதி
सकृदेव प्रपन्नाय तवास्मीति च याचते । अभयं सर्वभूतेभ्यो ददाम्येतद् व्रतं मम ॥
‘ஸக்ருதேவா பிரபன்னாய’, ஒரு தடவை என்னை வணங்கி, ‘தவாஸ்மி’, உன்னை சேர்ந்தவனா நினைத்து என்னைக் காப்பாற்று, ‘இதியாசதே’ என்று யார் யாசிக்கறார்களோ, ‘அபயம் ஸர்வபூதேப்ய: ததாமி’ அவர்களுக்கு எந்த கோணத்துல இருந்தும், எந்த நேரத்துலயும், யாரிடத்திலருந்தும் எந்த ஆபத்தும் வராமல் காப்பாற்றுவேன், ‘ஏதத் வ்ரதம் மம’இது என் பொறுப்பு அப்டீன்னு ராமர் சொல்லும் காட்சி
ஸ்ரீராமர் தர்மத்தின் வடிவம். அவருடைய பட்டாபிஷேக வைபவம் என்பது அதர்மத்தை தர்மம் வென்றதை கொண்டாடும் மஹோத்வஸம். முதலில் தசரதர் ராமரை யுவராஜாவாக பட்டாபிஷேகம் செய்து பார்க்க ஆசைப்பட்டார். அது தடைப்பட்டாலும், முடிவில் ஸ்ரீராமர், ஸீதாதேவியும், ஹனுமாரும், சகோதரர்களும், வானர ராஜனான சுக்ரீவனும், ராக்ஷஸ ராஜனான விபீஷணனும் புடை சூழ பதினான்கு உலகங்களுக்கும் சக்ரவர்த்தியாக பட்டாபிஷேகம் செய்து கொண்டார். நம் போன்ற ராம பக்தர்களுக்கு என்றென்றும் ராஜா ராமபிரான் ஒருவரே அன்றோ!
Categories: Upanyasam
அஞ்சனேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வருங்கால் மூன்று சூரியர்கள் என்ற வர்ணனை அற்புதம்! அவரை நினைத்தாலே சகல காரியங்களும் கைகூடும் என்பது நமக்குத் தெரிந்தாலும், இங்கு வர்ணனை மிக அருமை! எளிய தமிழில் இனிமையான சொற்பொழிவு! இந்த சமயத்தில் தேவையான பதிவு! ஜெய ஸ்ரீராம்
ஆம் இதுதான் சரியான தலைப்பு! ராமனை துதித்தால் சகல நோய்களும் அகலும், மனக்லேசம் மறையும் ! ராம நாமத்தின்.மஹிமை உலகே அறிந்த விஷயமாகும் ! பக்த ராமதாசர் , த்யாக பிரம்மம்.ராம நாமம் ஒன்றையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்தார்கள். மடி, ஆச்சாரம் எதுவும் அனுஷ்டிக்க தேவையில்லை .எந்த நேரம் இடம் பார்க்காமல் செய்யக் கூடிய ஒரே நாம ஜபம் இது ஒன்றுதான் ! பெரியவா காலத்தில் துக்கிரி பாட்டி அழைக்கப் பெற்ற ஒரு பாட்டி ஸதா ராம ஜபம் செய்து வந்தாள். அவள் கையால் விபூதி இட்டால் ஜுரம் போன்ற கோளாறு நீங்கும் என்று பெரியவா சொல்லியிருக்கார். அது சத்யம் என பல முறை நிரூபணம் ஆகியிருக்கு. தன் ஜெபத்தின்.பலனை கஷ்டம் என்று வந்தால் தானம் செய்வாளாம் பாட்டி! அத்தகைய சக்தி ராம நாமத்துக்கு!
ஜய ஸ்ரீ ராம்
Please correct title
Actually this is the correct lyrics of the song by Sri Papanasm Shivan
https://karnatik.com/c6475.shtml