பெரியவா பக்தனான என்னை ஒரு ஆபத்தும் தீண்ட முடியாது

சுந்தர காண்டத்தில் ‘ஜய மந்த்ரம்‘ என்று ஒரு நான்கு ஸ்லோகங்கள் வரும். அவை தன்னம்பிக்கையும் வெற்றியையும் அளிப்பவை. அவற்றின் பொருளை அறிந்துகொண்டு ‘ராம தாசனான என்னை ஆயிரம் ராவணர்கள் வந்தாலும் வெல்ல முடியாது’ என்று ஹனுமார் கர்ஜிப்பதை ப்போல ‘பெரியவா பக்தனான என்னை ஒரு ஆபத்தும் தீண்ட முடியாது’ என்று தைரியம் கொள்வோம் – சுந்தர காண்டத்திலிருந்து ஜய மந்த்ரம் (5 min audio explaining jaya manthram from Sundarakandam which gives great confidence and courage)

மேலே உள்ள ஒலிப்பதிவில் ‘காமாக்ஷியின் மந்தஸ்மிதம் என்ற அம்ருத மழை எனக்கு வரும் துன்பங்கள் என்ற கொழுந்து விட்டு எரியும் நெருப்பை அணைக்கட்டும்’ என்ற பொருள் தரும் மூகபஞ்ச சதீ ஸ்லோகத்தை பற்றி பேசியுள்ளேன். மஹாபெரியவா மருத்துவமனைகளில் இந்த ஸ்லோகத்தை சொல்லி  சந்திரமௌளீஸ்வரர் பிரசாதத்தை கொடுக்க சொல்வார். அந்த ஸ்லோகத்தையும் அதன் பொருளையும் இங்கே பார்க்கலாம் – நோய்கள் அகல மஹாபெரியவா உபதேசித்த மூக பஞ்சசதீ ஸ்லோகம் (Explanation of a slokam from mooka pancha shathi that Mahaperiyava prescribed to chant when distributing Chandramouleeswara prasadam in hospitals)

जयत्यतिबलो राम: लक्ष्मणश्च महाबलः।

राजा जयति सुग्रीव: राघवेणाभिपालितः।।5.42.33।।

दासोऽहं कोसलेन्द्रस्य रामस्याक्लिष्टकर्मणः।

हनुमान्शत्रुसैन्यानां निहन्ता मारुतात्मजः।।5.42.34।।

न रावणसहस्रं मे युद्धे प्रतिबलं भवेत्।

शिलाभिस्तु प्रहरतः पादपैश्च सहस्रशः।।5.42.35।।

अर्दयित्वा पुरीं लङ्काम् अभिवाद्य च मैथिलीम्।

समृद्धार्थो गमिष्यामि मिषतां सर्वरक्षसाम्।।5.42.36।।

ஜயத்யதிப3லோ ராமோ லக்ஷ்மணஶ்ச மஹாப3ல: |

ராஜாத ஜயதி ஸுக்3ரீவ: ராக3வேணாபி4பாலித: ||

தா3ஸோஹம் கோஸலேந்த்3ரஸ்ய ராமஸ்யாக்லிஷ்ட கர்மண: |

ஹனுமான் ஶத்ருஸைன்யானாம் நிஹந்தா மாருதாத்மஜ: ||

நீ ராவண ஸஹஸ்ரம் மே யுத்3தே4 ப்ரதி ப3லம் ப4வேத் |

ஶிலாபி4ஸ்து ப்ரஹரத: பாத3பைஶ்ச ஸஹஸ்ரஶ: ||

அர்த3யித்வா புரீம் லங்காம் அபி4வாத்3ய ச மைதி2லீம் |

ஸம்ரு’த்3தா4ர்தோ2 க3மிஷ்யாமி மிஷதாம் ஸர்வரக்ஷஸாம் ||Categories: Upanyasam

Tags: , , ,

8 replies

 1. Dhanyoasmi

 2. சரியான தருணத்தில் வந்த பதிவு.எப்படி ஸ்ரீ ஆஞ்சநேயர் சமய ஸஞ்ஜீவியாக சஞ்ஜீவனி மலையையே பெயர்த்து வந்து லக்ஷ்மணனைக் காப்பாற்றி ஸ்ரீ ராமரின் கவலையுற்ற மனதை க்ஷணமாத்திரத்தில் நீக்கினாரோ…அதே கார்யத்தை செய்துள்ளார் அருமை நண்பர் ஸ்ரீ கணபதி சுப்ரமண்யன். அவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.
  நவ வ்யாகரண பண்டிதர் ஆஞ்சனேயரின் அத்தனை கல்யாண குணங்களையும் கொண்ட மஹா பெரியவா இருக்கையில் நமக்கென்ன கவலை. என்னைப் பொருத்தவரை, மஹாபெரியவா ஒரு மகத்தான கவசம்.
  அன்பில் காமதேனு.
  கருணையில் கற்பக விருட்சம். அவரின் பாதங்களை நித்தியம் பணிவோமாக. அவரருளால்.

 3. Mahaperiyava Saranam

 4. சரியான சமயத்தில் இந்த ஸ்லோகத்தை ஞாபகப்படுத்தி இருக்கேள். எல்லாம் மஹா பெரிவா கிருபை. மஹா பெரிவா ஷரணம், கிருஷ்ண கிருஷ்ண சரணாகதி

 5. An amazing post! And very well explained: when we have Maha periyava why should we worry or fear anything???
  He’s everything- Kamakshi, Vaidheeswaran, Sreeman Narayanan and Anjaneya Swamy 🙏🙏
  Best solution/remedy is to hold on to his feet!

 6. My fear has gone after I read this blog. Sri Maha Periava Padhama Charanam.

 7. தலைப்பில் உள்ள வார்த்தைகளே நம்பிக்கை தரும் போது ஸ்லோகத்தைப்பற்றி கேட்கவும் வேண்டுமோ.தக்க சமயத்தில் அருமையான விளக்கம்🙏🙏. ஜெய ஜெய சங்கரா,ஆஞ்சனேய ஸ்வாமிக்கு ஜெய்

 8. துளியும் சந்தேகமற்ற உண்மை! என் குழந்தைகள் நேற்று என்னிடம் நான் தனியாக இருப்பதைக் குறித்துக் கவலை கொண்டு பத்திரமா வீட்டுக்குள்ளேயே இரு , எங்களுக்கு பயமா irukku’ நு சொன்னபோது நான் இதே யேதான் சொன்னேன் , பெரியவா கூட இருக்கும்போது எனக்கு என்ன கவலை? மேலே சொன்ன ஸ்லோகங்கள் மனதுக்குத் தெம்பைத் தருமாபோல இந்தக் காலக் கட்டத்தில் ஏற்றவையா இருக்கு. Thanks for the timely post .

Leave a Reply

%d bloggers like this: