அடியார் தம் பெருமை தன்னை அளவிடவும் ஸாத்யமாமோ

முகுந்தமாலா ஸ்தோத்திரத்தில் ஒரு அழகான ஸ்லோகம் 

वात्सल्यादभयप्रदानसमयात् आर्तार्तिनिर्वापणात्

औदार्यादगशोषनात् अगनितश्रेयपदप्रापणा त् |

सेव्य: श्रीपतिरेव एव सततं सन्त्यत्र षड्साक्षिण:

प्रह्लादश्च विभीषणश्च करिराट् पाञ्चाल्यहल्या ध्रुव: ||

வாத்ஸல்யாத் அபயப்ரதானஸமயாத் ஆர்தார்த்திநிர்வாபணாத்

ஔதார்யாத் அகஷோஷனாத் அகணிதஷ்ரேயபதப்ராபணாத் |

ஸேவ்ய: ஸ்ரீபதிரேக ஏவ ஸததம் ஸந்த்யத்ர ஷட்ஸாக்ஷிண:

ப்ரஹ்லாதஸ்ச விபீஷணஸ்ச கரிராட் பாஞ்சால்யஹல்யா த்ருவ: ||

ன்னு பகவானுடைய ஆறு குணங்கள். வாத்ஸல்யம், அபயப்ரதானம், ஆர்த்தார்த்தி நிர்வாபணம் – கஷ்டப்படறவாளோட துக்கத்தைப் போக்கறது, ஓளதார்யம் – தயாளகுணம், அகஷோஷணம் – பாபங்களைப் போக்குவது, அகணித ஸ்ரேய: பதப்ராபணம் – நினைக்க முடியாத உயர்ந்த பதவியை அருளுவது. இப்பேற்பட்ட குணங்கள் கொண்டவன் பகவான். அதற்கு ப்ரஹலாதனும், விபீஷணனும், கஜேந்திரனும், பாஞ்சாலியும், அஹல்யாவும், த்ருவனும் முறையே சாக்ஷின்னு வரும். பகவானோட குணங்கள் அப்படீன்னு, இங்க குலசேகர ஆழ்வார் சொல்றதெல்லாம் எப்படி நம்ம மஹா பெரியவா கிட்டயும் இருந்தது என்பதை ஒரு ஆறு பேரோட அனுபவத்தை சொல்லி (with video links) விளக்கி இருக்கிறேன் – பெருமாளுடைய குணங்கள் பெரியவாளிடமும்

மஹாபெரியவா பிரதோஷ மாமா, கோவிந்த தாமோதர ஸ்வாமிகள், ஜெயம் பாட்டி போன்ற பக்தர்களை எப்படி தம்மிடம் ஈர்த்து ஆட்கொண்டார் என்று ஒரு அப்பர் தேவாரத்தின் மூலம் பகிர்ந்துள்ளேன் – தன்னை மறந்தாள் தன் நாமங் கெட்டாள்

ஸெர்ஜ் டிமேட்ரியன் (Dr.Serge Demetrian) என்ற ரொமேனியா தேசத்தின் பேராசிரியருக்கு மஹாபெரியவா செய்த அனுக்ரஹத்தை கேட்டால் மிக வியப்பாகவும் பேரானந்தமாகவும் இருக்கும். அவர் பெரியவாளோடு பல வருடங்கள் பாத யாத்திரை செய்து தன் அனுபவங்களை 12,000 பக்கங்கள் எழுதி இருக்கிறார். அவருடைய முதல் தரிசனத்தைப் பற்றி அவர் எழுதியதை தமிழில் சொல்லி இருக்கறேன் – நல்ல வாக்கென்னும் நதியை பெருக்கெடுத்து ஓடச் செய்வது எது?Categories: Devotee Experiences

3 replies

  1. Blessed to read this & know about Dr. Serge Demetrian. Really a great soul ! He knows more about Periyava than us being a Sudhdhatma! I mean pure soul Gnaani! The way Ganapathi described is awesome ! While reading goose bumps & tears rolling down . Thanks for sharing.

  2. Can we get at least a glance of Dr.Serge Demetrian’s book if available and G S Mama’s book?

    • His writings are available with ramanashramam. They are publishing few pages in every issue of mountain path, their quarterly. They have talked about sharing more in coming days.

      Who is GS mama and what book are you referring to?

Leave a Reply

%d bloggers like this: