சிவன் சார் ஆராதனை; Shivan Sar Aradhanai 2020

2020 மார்ச் 11ம் தேதி, மஹாபெரியவாளின் தம்பியாக அவதரித்து, ஸ்ரீ ஸதாசிவ பிரம்மேந்த்ராளின் மறு அவதாரமோ என்னும்படியாக, பசி தாகத்தையும் வென்ற யோகியாக, தன்னையும் துறந்த துறவியாக விளங்கி, இந்த பூமியை புனிதப் படுத்திய ஸ்ரீ  சிவன் சாரோட ஆராதனை வைபவம். சார் பேர்ல அழகான ஒரு அஷ்டோத்தரம் இருக்கு. அதை படித்தால் / கேட்டால் அவருடைய மேன்மையாக குணங்களை அறிய முடியும். சம்ஸ்க்ருதத்தில் இருந்தாலும் கொஞ்சம் மனது வைத்து படித்தாலே புரிந்துகொள்ள கொள்ளலாம். (This year Sri Sivan Sar’s Aradhanai day falls on the 11th of March . Shivan Sar arrived in this world as MahaPeriyava’s younger brother. He was like a reincarnation of Sri Sadasiva Brahmendral, a yogi who transcended hunger and thirst and a sage who renounced himself. He purified the whole world by his presence. There is a beautiful Ashtotram on Sivan Sar. If you read / hear it, you can recognize his greatness. It is in Sanskrit, but I think it can still be understood if you try a little.) – ஸ்ரீ சிவன் ஸார் அஷ்டோத்தரம் ஒலிப்பதிவு (Sri Shivan Sar ashtotharam audio mp3)

சார் தன் பக்தர்களை, ஏணிப்படிகளில் மாந்தர்கள் என்ற அவர் எழுதிய புத்தகத் ரத்னத்தைப் அடிக்கடி படிக்கச் சொல்வார். பலர் அது புரியவில்லை என்று வைத்து விடுவார்கள். அதில் இரண்டாம் பகுதியில் உள்ளது போல மகான்கள் சரித்ரம் வேறே எங்கும் படிக்க முடியாது. அவ்வளவு இனிமையாக இருக்கும். அதிலிருந்து ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் சரித்ரத்தை படித்து ஒலிப்பதிவு செய்துள்ளேன். கேட்டுப் பாருங்கள். முழு புத்தகத்தையும் படிக்க வேண்டும் என்று ஆசை வரும். (Sar often tells his devotees to read ‘Yenippadihalil maandarhal’, a gem of a book written by Him. Many people say that they find it difficult to understand and keep it aside. In the second half of the book Sar narrates the life of saints in a unique style that you cannot find anywhere else. It is verily nectar to the ears. I have recorded a chapter – ‘Sri Sridara Iyyaavaal’ from the book. You hear it and you will want to read the whole book.) – சிவன் சார் புத்தகத்திலிருந்து ஸ்ரீ ஸ்ரீதர ஐயாவாள் சரித்ரம்

சிவன் சாரோட ‘ஏணிப்படிகளில் மாந்தர்கள்’ புத்தகத்தில், முதல் பகுதியை படிச்சா, “நான் ரொம்ப உத்தமன், பக்திமான், விவேகி” என்று நம்மைப் பற்றி நமக்கு எண்ணங்கள் இருந்தால் அது அடியோட போயிடும். எதோ ஒரு கோவிலுக்கு போறோம், தான தர்மம் பண்றோம், வேதாந்தம் படிக்கறோம், பஜனை பண்றோம் அதனால நாம உசத்தி, English ல Holier than thou attitude னு சொல்லுவா, அது காணாமல் போயிடும். தெய்வீகம் ஆத்மீகம் போன்றவற்றில் நாம் எந்தப் படியில் இருக்கிறோம் என்று நம்ம நிலையை புரிஞ்சுப்போம். சார் புத்தகத்தில் இருந்து ஆத்மீகத்தை பற்றிய விளக்கங்களை மேற்கோள் காட்டி ஒரு மூக பஞ்ச சதீ ஸ்லோகத்திற்கு பொருள் இங்கே (If you read first part of Sivan Sar’s ‘Yennippadihalil maandarhal’ book, thoughts like “I am a holy person, a great devotee, a wise man” etc will fade away. ‘The holier than thou attitude’  usually developed by going to temples, giving donations, reading Vedanta, doing Bhajan, will disappear. We will understand where we are in the spiritual scale. Sharing the meaning of a Mooka panchashati slokam with quotes from Sar’s book on spirituality to explain this point.) – முனிவர்கள் மனப்பெட்டியில் விளங்கும் ரத்னம்

அதே நேரத்துல சார் சொல்றது போல நேர்மையாக, பணிவோடு இருந்து கொண்டு, சில நியாயமான ஆசைகள், அதோடு மஹான்கள் கிட்ட பக்தி ஏற்பட்டு அது மூலமாக பகவானை அடைய வேண்டும் என்று பிரார்த்தித்தால், சிவன் சார் போல ஆசுதோஷி, அனுக்ரஹம் பண்ற தெய்வம் கிடையாது. மகான்கள் அனுக்ரஹத்தால் நல்ல வாழ்வு கிடைத்தால் அது எப்படி இருக்கும் என்பதை சார் வார்த்தைகளால் விளக்கி இன்னொரு மூக பஞ்ச சதீ ஸ்லோகத்திற்கு பொருள் இங்கே. (At the same time, if we are honest and humble as Sar wants, have some simple desires, and earnestly pray for reaching Almighty through devotion towards saints, there is no Master like Sivan Sar, who is easily gratified and showers his best blessings. How it is different, when we get a good life through a saint’s blessings is explained, again with Sar’s words using another Mooka panchashati sloka.- தவங்கள் செய்வார், மண் அளிக்கும் செல்வமோ பெறுவார்?

இன்று பௌர்ணமி. மூக பஞ்சசதீ மூலமாக அம்பாள் த்யானமும் தானாக அமைந்து விட்டது. Today is Full Moon Day (Poornima). By chance, we ended up meditating on Goddess Kamakshi also through Mooka panchashati.Categories: Upanyasam

Tags: , , ,

1 reply

  1. Thanks for the audio and Ashtotram links. Very helpful.

    JAI SRI RAM

Leave a Reply

%d