பத்து பைசா ஆஸ்பத்திரி

Thank you Professor for the share.

1976ல் காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தாம்பரத்திற்கு விஜயம் செய்திருந்தார். அவர் ஒரு ஸ்கூலில் தங்கியிருந்தார். ஒருநாள் மாலை நேரம். அவர் தங்கியிருந்த இடத்திற்குப் பக்கத்தில் ஓரிடத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. அது என்ன என்று பெரியவர் விசாரித்தார். அங்கே வசிக்கும் ஏழை மக்களுக்காக 10 பைசா வாங்கிக் கொண்டு நடத்தப்படும் ஒரு ஆஸ்பத்திரி. டாக்டர். ஷர்மா என்பவருடன் இணைந்து அதை நடத்தினோம். ஞாயிற்றுக்கிழமை மட்டும் செயல்படும் ஆஸ்பத்திரி அது. கையில் இருக்கும் மருந்துகள் தீரும்வரை நோயாளிகளுக்குக் கொடுப்போம். தீர்ந்துவிட்டால் தேவைப்படும் மருந்துகளை வாங்கிக்கொள்ளச் சொல்லி பிரிஸ்க்ரிப்ஷன் எழுதிக் கொடுத்துவிடுவோம். அதற்கு வேறு பெயர் இருந்தாலும் ‘பத்து பைசா ஆஸ்பத்திரி’ என்ற பெயரில் அப்போது ரொம்பப் பிரபலம்.

ஒருநாள் பெரியவர் எங்களைக் கூப்பிட்டனுப்பினார். நானும் டாக்டர். ஷர்மாவும் சென்றோம். “நாம வெறுமனே பேசிக்கொண்டிருந்தால் போதாது. ஏழை, எளிய மக்களுக்காக நிறையத்தொண்டு செய்யவேண்டும். மருத்துவமும் கல்வியும்தான் இப்ப ரொம்ப முக்கியம். நீங்க இந்தமாதிரி ஞாயித்துக்கிழமை ஆஸ்பத்திரி நடத்தறது ரொம்ப சந்தோஷம். இதை எல்லாநாளும் நடத்தறதுக்கு என்ன செய்யணும்னு பாருங்கோ” என்றார். அது மிகுந்த உத்வேகத்தைத் தந்தது. இப்படிஅவர் குரோம்பேட்டை, நங்கநல்லூர் என்று போகுமிடத்திலெல்லாம் அங்குள்ள பொறுப்பானவர்களிடம் இதேமாதிரி விஷயங்களை வலியுறுத்தி வந்தார். பின்பு மைலாப்பூரில் தங்கியிருந்தபோது அதுவரை தான் சந்தித்த அத்தனை டாக்டர்களையும் கூப்பிட்டு அவர்களிடம் மீண்டும் அதே விஷயத்தை வலியுறுத்திச் சொன்னார். அப்படி உருவானதுதான் சங்கர நேத்ராலயா.

அதுபோலப் பல இடங்களில் பல மருத்துவமனைகள் ஆரம்பிக்கப்பட்டன. தாம்பரத்தில் தொழுநோய் மருத்துவமனை ஒன்றை நாங்கள் தொடங்கினோம். அப்போது தாம்பரம் சின்ன ஊர். இந்தியாவிலேயே பெரிய லெப்ரஸி டாக்டர் ஷர்மா. அதனால் அதைத் தொடங்கினோம். 1988க்குள் தாம்பரத்தில் லெப்ரஸி மிகவும் குறைந்து போய்விட்டது. இப்போது தமிழ்நாட்டில் லெப்ரஸி மிகவும் குறைந்துவிட்டதென்றால் அதில் டாக்டர் ஷர்மாவின் பங்களிப்பு மிக மிக அதிகம்.

பின்னர் அரசாங்கத்திற்கு எழுதிப் போட்டோம். பாபு ஜகஜீவன்ராம் பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது அரை ஏக்கர் நிலம் கொடுத்தார். சிம்ப்ஸன் க்ரூப் சிவசைலம் 25000 ரூபாய் கொடுத்தார். அதில் கட்டப்பட்டு, 1982ல் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளால் திறந்து வைக்கப்பட்டதுதான் ஹிந்து மிஷன் மருத்துவமனை

– பத்மஸ்ரீ D.K. ஸ்ரீநிவாஸன்Categories: Devotee Experiences

Tags:

5 replies

 1. மக்கள் சேவை மகேசன் சேவை என்பதன் தத்துவத்தை நிரூபித்தவர் ஸ்ரீ ஜெயேந்திர சுவாமிகள் ! எல்லா இடத்திலும் கல்வி சாலைகளும், மருத்துவமனை களும் எழும்ப காரண கர்த்தாவாக இருந்தவர் ! மதத் தொண்டு என்பது மடத்து பூஜை மட்டுமன்று நினையாது வருங்கால சந்ததியினருக்கு நிரந்தரமான ஏற்பாட்டை செய்தவர்! மற்ற மதங்களில் மத மாற்றங்கள் கொண்டு வர கொண்டு வர செய்த யுக்திகளை முறியடித்து கால் நடையாக சேரிகலு
  சென்று நம் மதத்தின் பெருமையை எடுத்து இயம்பினவர். ஜென்மம் முழ்தும் நாம் அவருக்கு வந்தனை செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம்! ஜய ஜய சங்கரா….

 2. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
  காஞ்சி சங்கர காமாக்ஷி சங்கர
  ஜெய ஜெய சங்கர ஜெயேந்திர சங்கர
  பொற்பாத கமலத்தில் எங்கள் நமஸ்கரங்கள்

 3. ஜெய ஜெய சங்கரா ஹர ஹர சங்கரா சரணம் சரணம்
  ஜானகிராமன் நாகப்பட்டினம்

 4. What Padma Sri D.K. Srinivasan mentions about Tambaram Hindu Mission Hospital is inspiring and throws light on Sri Jayendra Saraswathi Swamigal’ s deep concern about alleviating the sufferings of the less privileged and to enable them to be partners of the endeavour. On H.H. encouragement and Poorna Anugraham many socially beneficial activities like establishment of educational institutions, home for the aged and disabled,hospitals, renovation of old temples and conduct at least oru kala puja, gnavapi etc were undertaken by many volunteers irrespective of sex, religion or caste. I say this with my personal knowledge as I am one of those associated with Dr. Sharma. On H.H. guidance Pammal, suburban village in the outskirts of Chennai, could boast of class one eye hospital and a general hospital. The service at a very reasonable cost and for the poor free too. These are only samples. Social service activities with the benign grace of Acharyals of Kanchi Math are now nation wide. Tamizh pazha mozhi: Makkal sevaiye Mahesan Sevai; that is the Mantra.
  Hara Hara Sankara; Jaya Jaya Sankara.

  • HARA HARA SANKARA JEYA JEYA SANKARA PORPADHA KAMALANGALUKKU KODANA KODI NAMASKARAM! MAHA PERIVA CHARANAM! PERIAVA THIRUUVADIHAL CHARANAM!

Leave a Reply

%d bloggers like this: