2nd anniversary of Sri Jayendra Saraswathi Swamigal’s siddhi

On this day Feb 28th our Pudhu Periyava left the mortal coil two years back and merged with Kamakshi.  On behalf of all the blog readers, I pray Him to bless us with guru bakthi and gnanam.

Recollecting Feb 28, 2018.

மாசி 16 – பிப் 28 – 2018:

காலை 5:30 மணி: வழக்கம் போல் விடிந்தது காலை. காஞ்சி மடம் இயல்பான பரபரப்புடன் செயல்பட துவங்கியது. அவர்களுக்கு தெரியவில்லை அன்று ஒரு இடி இறங்கப்போகிறது என்று! முதல் நாள் இரவு ப்ருஹ்மோத்சவத்தில் குதிரை வாகனத்தில் வந்த காமாட்சியை ஊர்வலத்தில் வந்து சேவித்துவிட்டு, வழக்கம் போல் நித்திய கடமையாய் தான் செய்யும் குரு வந்தனத்திற்கு ஸ்ரீ மஹாபெரியவாளின் சமாதிக்கு வந்தார் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். வந்தனத்தை முடித்த்துவிட்டு தன் ஸ்நானத்திற்கு சென்றார்.

காலை 7:30 மணி: பெரியவாளின் உடலில் கொஞ்சம் தளர்ச்சியாக இருந்ததால் அது பற்றி பால பெரியவாள், டாக்டர் ராமச்சந்திர ஐயர் மற்றும் மடத்து ஊழியர்கள் பேசிக்கொண்டிருந்தனர். ஸ்நானம் முடித்து மீண்டும் பிருந்தாவன ப்ரதக்ஷிணத்திற்கு வெளிய வரும் சமயத்தில் திடீரென உடலில் அசௌகரியத்தை உணர்கிறார் பெரியவர்.

காலை 7:45 மணி: விவரம் தெரிந்ததும் பால பெரியவரும், பெரியவாளின் மருத்துவரும் அவரை அருகில் இருந்து கவனிக்கிறார்கள். பால பெரியவர் உத்தரணியால் துளசி தீர்த்தம் அளிக்கிறார். அதனை மட்டும் பருகிய பெரியவரை, காமாக்ஷி கோவில் அருகில் உள்ள ABCD மருத்துவமனைக்கு கூட்டிசெல்கின்றனர்.

காலை 9:00 மணி: மருத்துவர்கள் இதய துடிப்பை சீராக்க கடும் முயற்சி எடுக்கின்றனர். கடும் மூச்சு திணறலால் நினைவிழந்த பெரியவருக்கு இதயத்துடிப்பு குறைகிறது. உடனடியாக ECG எடுத்தமருத்துவர்கள், காலை 9:05 மணிக்கு, ஹேவிளம்பி (2018) ஆண்டு, மாசி 16, சுக்ல பக்ஷ திரயோதசி திதியில், ஸ்ரீ மஹாபெரியவாளின் கரகமலர், பூஜ்ய ஸ்ரீ காஞ்சி பெரியவர் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நம்மை விட்டு ஹிரண்யகர்பத்தில் கலந்ததாக அறிவிக்கின்றனர்.

ஒரு நிமிடம் கூட நிற்காமல் ஓடும் கங்கை போன்ற பெரியவர், கடைசி நிமிடமும் ஒரு வியாதியால் கிடக்காமல் தன் குருவிடம் சேர்ந்தார்.

கடைசி பூஜை – தன் குருவிற்கு
கடைசி பயணம் – தன் குருவின் சமாதிக்கு
கடைசி உணவு – தன் சிஷ்யரின் கையிலிருந்து துளசி தீர்த்தம்
கடைசியாக அருளியது – எல்லோரும் க்ஷேமமா இருங்கோ!
கடைசியாக இருக்கப்போவது – தன் குருவின் சமாதி அருகிலேயே, காமாக்ஷி அம்மனை நோக்கியபடி நித்திய வாசம்.

Hara Hara Sankara Jaya Jaya Sankara!

Last Kamakshi darshan a day before He reacher Her feet.

 



Categories: Announcements, Periyava TV

5 replies

  1. On February 1st 2018 at 3.30 pm I was the only person that time. Ii did namaskaram and came out and sat before him for more than 15 minutes with nonstop tears on eyes.
    Periyava was looking at me.
    My tears did not stop.But I had to leave as we had to go to Thammanur my mother’s native place.
    I always feel that I should have sit in front of our great Periyava for some more time.

  2. Sri Gurubhyo Namaha! Hara Hara Sankara Jaya Jaya Sankara!!
    We were fortunate to have had Periyava Darshan and blessings in January 2018 and performed Bikshabivandanam at Kanchipuram Sankara mutt. Periyava blissfull smiles and ‘krupangaveekshana’ when we recited Sri Vishnu Sahasranamama parayanam in his presence, remains ever fresh in our memories. Jaya Jaya Sankara Hara Hara Sankara!

  3. காணக்கண்கொள்ளாத காட்சி குருவே சரணம் விரைவில் எங்களை ஆட்கொள்ளுங்கள்

  4. Jaya Jaya Sankara Hara Hara Sankara

  5. The world’s best smile. I have never known anyone smile like this. The radiance and the joy are indescribable.

Leave a Reply to Rajesh Kumar CCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading