கண்ணனின் பெயர் கீதையில் இல்லை – Sri Jayendra Periyava


Few minutes back I posted about Kamakshi & Bagavad Gita. When I went to Facebook, I saw Smt Kala Chandramouli posted about what Sri Jayendra Saraswathi Swamigal had said about bagavad Gita in the context of Krishna. How coincidental I saw this post. All bagavan anugraham to all of us – it only reflects that both Mahaperiyava & Pudhuperiyava saying the same thing! Guru-sishya aikyam is seen here!

 

ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய “ஞான

மலர்கள் ” என்ற புத்தகத்தில் இருந்து “கண்ணனின் பெயர் கீதையில் இல்லை ”

என்ற கட்டுரையைப் பதிவு செய்திருக்கிறேன்,,,,

வசுதேவசுதம் தேவம் கம்ச சாணூர மர்த்தனம்
தேவகீ பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்,,,,

கிருஷ்ணபகவான் பகவந்கீதையில் நம் எல்லோருக்கும் உபதேசம் செய்தார்,,,அதன்
மூலமாக அவர் ஜகத்குரு ஆனார்,,,,உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் நன்மையைத்
தரக் கூடிய வழியைச் சொன்னவர் கிருஷ்ண பரமாத்மா,,,,,ஒரு தனி மனிதனுக்கு
மாத்திரம் தனி மனிதனுக்கும் சமுதாயத்துக்கும் அதாவது உலகம் அனைத்துக்கும் நல்லது
ஏற்படும்படி யார் ஒருவர் செய்து வைக்கிறார்களோ,, அவருக்கு ஜகத்குரு என்று
பெயர்,,,,அதன்படி உலகிலுள்ள அனைவருக்கும் குரு கிருஷ்ண பரமாத்மா,,,
பகவத்கீதை என்பது அர்ஜுனனுக்குச் சொல்லப்பட்டாலும் நடு நடுவே பல இடங்களில்
அவனை ஒதுக்கிவிட்டு அவனுக்குச் சம்பந்தமே இல்லாத நிலையில் உள்ளவர்களுக்கு
உபதேசம் சொல்லப்பட்டிருக்கிறது,,,, ஆகவே அர்ஜுனனை ஒரு நிமித்தமாக
வைத்துக் கொண்டு உலகத்தில் பல வகை மனிதர்களுக்கும் ஏற்றவாறு சாதகங்கள்
சொல்லப்பட்டிருக்கின்றன,,,

அது போல் கிருஷ்ண பரமாத்மாவின் பெயர் கிருஷ்ணன் என்று கீதையில்
வருவதில்லை,,,, அவர்தான் கீதையைச் சொன்னார்,,,,, ஆனால் ஓரிடத்தில் கூட
கிருஷ்ணன் சொன்னான் என்ற வார்த்தையே இருக்காது,,, “பகவானுவாச ”
என்ற வார்த்தைதான் இருக்கும் மற்ற அனைவரது பெயர்களும் “சஞ்சயன் ” “திருதராஷ்ட்ரன் என்றுதான் இருக்கும்,,,

சாக்ஷாத் கண்ணபிரானானவர் பிறந்தது முதல் அவதாரம் எடுத்தது முதல் தன்னுடைய
ஸ்வரூபத்தை பகவத் ஸ்வருபமாகவே காண்பிக்கிறார் அதனால்தான் “பகவத்கீதை ”
என்ற பெயர் பகவானால் சொல்லப்பட்டதை,,,மற்ற நூல்களை எழுதியவர்களுக்கெல்லாம் வேறு வேறு பெயர்கள் இருக்கும்,,,

திருக்குறளை இயற்றிபவர் திருவள்ளுவர்,,,தேவாரம் பாடியவர் மூவர் என்று தனித்
தனியாக அவர்கள் பெயரை குறிப்பிட முடியும் ! ஆனால் கிருஷ்ணன் மட்டும்
தன்னுடைய பெயரைக் குறிப்பிட்டுக் கொள்ளாமல் கிருஷ்ணனுக்கும்மேலே உள்ள
அந்த பரம்பொருளின் பெயர்தான் உள்ளது,,,

அப்படிப்பட்ட பகவத்கீதையை நாம் அனைவரும் படித்து பயன் பெற்று அதன்படி
வாழ்க்கையை நடத்தி சிறந்து விளங்க வேண்டுமாய்பகவானைப் பிரார்த்திக்கிறேன்….Categories: Announcements, Upanyasam

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: