தை ஹஸ்தம் – ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகளின் 150வது பிறந்த நாள்

 

Article courtesy: Kannan.

இன்று தை ஹஸ்தம்

காமாக்ஷியின் அவதாரம் என போற்றப்படும் மகான் ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகளின் 150வது பிறந்த நாள்

ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள், ஒரு பெரிய சித்த புருஷர். அவர் காஞ்சீபுரத்தில் பிறந்தவர். அவருக்கு பரமேஸ்வரனே ஸ்ரீ பாலாஜி ஸ்வாமிகள் என்ற பேரில் நாலு சிஷ்யர்களோடு வந்து தக்ஷிணாமூர்த்தியாக தரிசனம் தந்து ஸன்யாசம் தந்தார்.

ஸ்ரீசேஷாத்ரி ஸ்வாமிகள் பிறந்த க்ரஹத்தை மஹா பெரியவா எழுத்தாளர் ஸ்ரீபரணிதரனை கொண்டு கண்டு பிடித்து அதை மடத்தில் வாங்கி அதுக்கு *“ஸ்ரீ காமகோடி சேஷாத்ரி விலாஸம்”* னு பேர் வைத்து அங்க போயி மூகபஞ்சசதி படீன்னு சொல்லி இருக்கார்.

அந்த இடத்தை வாங்கின ட்ரஸ்ட் காரா, அந்த காரியங்கள் பண்ற எல்லாரையும் வச்சுண்டு மஹா பெரியவா, சேஷாத்ரி ஸ்வாமிகள் மாதிரி யோகாசனத்துல்ல ஒரு போஸ் ல உட்காருவாராம்.

அப்படி உட்கார்ந்து காண்பித்து *”இப்படித்தான் அவர் உட்காருவார். அவர் மாதிரி உட்காரமுடியும். ஆனா அவர் மாதிரி நிலை எனக்கு எப்ப வருமோ? எத்தனை ஜன்மாக்கு அப்புறம் வருமோ”னு சேஷாத்ரி ஸ்வாமிகளை கொண்டாடி இருக்கார்.*

சேஷாத்ரி ஸ்வாமிகளுக்கும் “மூகபஞ்சசதி” க்கும் என்ன தொடர்புன்னா, அவர் காஞ்சிபுரத்துல பிறந்து *மூகபஞ்சசதி யை படிச்சு, காமகோட்டத்தை இராத்திரி 12 மணிக்கு மூகபஞ்சசதி சொல்லி கணக்கில்லாம ப்ரதக்ஷணம் பண்ணுவார், கணக்கில்லாம நமஸ்காரம் பண்ணுவார்,* அப்படின்னு மஹா பெரியவா சொல்லியிருக்கா.

அப்படி மஹா பெரியவாளே தன்னைக் காட்டிலும் ஒரு பெரியவர் அப்படின்னு சொன்னால் ஸ்வாமிகளுக்கு அவரிடம் எவ்வளவு பக்தியும் ஸ்ரத்தையும் அது மூலமா ஞான வைராக்கியமும் ஏற்பட்டிருக்கும்!…🙏

*ஜய ஜய ஜய ஜய காமாக்ஷி*
*ஜய ஜய ஜய ஜய காமகோடி*
*ஜய ஜய ஜய ஜய சேஷாத்ரி*

என்று காஞ்சி மகா ஸ்வாமிகள் நாம ஜபம் அருளி இருக்கிறார்…



Categories: Announcements, Devotee Experiences

7 replies


  1. . ஸ்ரீ சேஷாஷ்டகம்!
    —————-

    தொடராகிய வாழ்வு பெருந்துயரம்
    துணையாகநீ வந்தால் அதுமறையும்.
    இடரே களைய இதுவே தருணம்
    இனிசேஷகுரு திருவடி சரணம்!

    அறியேன் எதுவும் அகிலம் தனிலே
    அவமாய்ப் பிறவி அழிதல் அழகோ?
    சிறியேன் புரியும் செயல்கள் பிழையே
    திருசேஷகுரு மலரடி சரணம்!

    அதுவும் இதுவும் எதுவும் வருமோ
    அறுந்தால் உடம்போ டுயிரின் தொடர்பே?
    மதியாய் விதியாய்க் கதியாய் எனக்கே
    வருசேஷகுரு திருவடி சரணம்!

    மனமே தினமே மரமேல் குரங்காய்
    மதமே மிகவே கிளைகள் குதிக்கும்.
    இனிமேல் இதைநீ பொறுத்தல் தகுமோ?
    எழில்சேஷகுரு திருவடி சரணம்!

    நிழலும் தருமே மரமே அதைப்போல்
    நெடிதே வளரென் உடல்தான் தருமோ?
    உழலும் உயிர்கட் குதவப் பணிப்பாய்
    ஒளிர்சேஷகுரு திருவடி சரணம்!

    அறிவும் திருவும் அழகும் இணைந்தே
    அமைந்தே விடினும் வருமோ அமைதி?
    பொறிகள் அடங்கும் வழிதான் புகல்வாய்
    புகழ்சேஷகுரு திருவடி சரணம்!

    பதறிக் கதறிப் பலநாள் கழியப்
    பயணம் முடிந்தால் பயன்தான் உளதோ?
    உதவிபுரிய உடனே வருவாய்
    உறுசேஷகுரு திருவடி சரணம்!

    அருணை ஒளியே கருணை வடிவே
    அகத்தின் இருளை அடியோடு டழிப்பாய்
    ஒருமை உணர்ந்தேன் உண்மை அறிந்தேன்
    உயர்சேஷகுரு திருவடி சரணம்!

    *மகான் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் பாதார விந்தங்கள் போற்றி போற்றி!*

  2. THE OTHER DAY IT WAS INDICATED. BY ME AS COMMENT. ON A NOTHER. ARTICLE ABOUT MAHAPERIYAVA TELLING THE GREATNESS OF SESATHRI SWAMIGAL. NOW THIS IS INDEED

  3. கருணா சாகரம் சாந்தம் ஸ்ரீ அருணாசல நிவாஸினம்
    ஸ்ரீ சேஷாத்ரி குரும் வந்தே ப்ரஹமே பூதம் தபோநிதிம்
    ஓம் ஸ்ரீ சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே சரணம்
    ஜானகிராமன் .நாகப்பட்டிணம்

  4. It is a great privilege to remember Sri Seshadri Swamigal on this auspicious occasion. After intense tapas devoted to Mother Kamakshi, he came to Arunachala which he did not leave till the end. He was instrumental in recognising the great state of realisation of the young Ramana, and in protecting the young Maharshi from vandals, when he was siting absorbed in the Patala Linga Srhrine, without consciousness of the outer world. In fact , Sri Ramana was known as Chinna Seshadri in local circles in those days. Once Sri Seshadri Swamigal told a devotee: ‘my younger brother on the hill gets a slary of thousand rupees, I get a salary of a hundred rupees, why don’t you try to get at least ten?’ Sri Seshadri Swamigal used to say that there were three Lingams in Tiruvannamalai: one was Arunachala, second was Ramana Maharshi, third was himself!

    Over the years many legends have grown around Sri Seshadri Swamigal. Sri B.V.Narasimha Swamy who wrote the first biography of Sri Ramana Maharshi in English, also intended to write a biography of Sri Seshadri Swamigal. He collected lot of authentic material. He was meticulous in his methods: he met and interviewed the peple who had known the Swamigal, he visited the places associated with him and gathered whatever material evidence he could get. Somehow he could not write the book. The collected material was handed over to Sri Kuzhmani Narayana Sastrigal who completed the biography. Thus this remains the only authentic book. on the life of Sri Swamigal. The edition I have was published by some devotees from Coimbatore in the early 70s. I do not know whether any subsequent edition has been published.

    We are beholden to Mahaperiyava for letting us know the greatness of these Sages who continue the tradition of Brahmavidya.
    Om Namo Brahmadibhyo
    Brahmavidya Sampradaya kartrubhyo
    Vamsha rishibhyo mahatbhyo Namo nama:

  5. Both Kanchi Perivaa & Sheshadri Swamigal are not only praise-worthy but are worthy of Prayer. Jaya Jaya Shankara, Hara Hara Shankara.

  6. Guruve saranam. Jaya Jaya sankara hara hara sankara. Mahaperiyava padhame saranam. Mahaperiyava thiruvadigale saranam. Kanchi sankara Kamakashi sankara Kamakoti sankara

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading