அண்டா, குண்டா, பாத்திரங்களை தண்ணி இழுத்து அலம்பி வைத்த மஹாபெரியவா

Thanks to Sri Viswanathan Hariharan for the FB share.

Mahaperiyava besides being a gnana guru, He is also a great management expert – we can learn so many management lessons from several of the incidents. Here is one of them.

Periyava Sharanam

ஒவ்வொரு வரியையும் கேட்டுக் கேட்டு கண்களில் கண்ணீருடன் எழுதியது.

பேச்சு – மதிற்பிற்குரிய *கணேஷ் சர்மா* அவர்கள்.
எழுத்து – பிரேம்ராஜ்.
————————————–
“மாப்பிள்ளை ராம மூரத்தி”ங்கிற பக்தர். அவர்தான் பூஜைகட்டில சந்திர மொளலீஸ்வரர் நைவேத்திய, பூஜை பாத்திரங்களை தேய்க்கிறவர்.

ரொம்ப பரிதாபமா இருக்கும். மடத்தில பார்த்தேள்னா அண்டா, அண்டாவா எல்லாத்தையும் சமைக்கணும். கரி அடுப்பு, பித்தளை பாத்திரம். பூஜை எல்லாம் முடியரத்தே 3மணி, 4மணி ஆயிடும். சாப்பிட்டு, சித்த தலையை சாச்சா போதும்ண்னு இருக்கும். அது ஆச்சோ இல்லையோ சாயந்திர பூஜைக்கு ரெடி ஆகணும். ராத்திரி பூஜை எவ்வளவு மணிக்கு முடியும்னு தெரியாது. அதுக்கப்பறம் கிளீன் பண்ணிட்டு படுத்துண்டா பொழுது விடிஞ்சுடும்.

ஒரு நாள் மத்யானம், நல்ல வெய்யில். கிணத்தடியில உக்காந்துண்டு எல்லா பாத்திரத்தையும் போட்டுண்டு தேச்சிண்டிருக்கார் ராம மூர்த்தி. இத்தனை பாத்திரங்களையும் கரி போக தேய்த்து அலம்பி வைக்கணும். இந்த காலம் போல ஸ்விட்ச் போட்டா தண்ணி வர காலம் இல்லை. கிணத்திலிருந்து தண்ணி இழுக்கணும், அலம்பி வைக்கணும்.

மாப்பிள்ளை ராம மூர்த்தி ரொம்ப சாது. வாயே திறக்க மாட்டார். அப்படி இருக்கும் போது பார்த்தா, யாரோ நடந்து வர சப்தம். பாரத்தா பெரியவா.

“ராம மூர்த்தி உன்னை பார்த்தா பாவமா இருக்குடா; இத்தனை பாத்திரம் தேச்சுண்டு இருக்கே; ஒண்ணு பண்ணுடா, நீ எல்லத்தையும் தேச்சு, தேச்சு வை; நான் கிணத்திலிருந்து தண்ணி இழுத்து அலம்பி, அலம்பி உள்ளே எடுத்துண்டு போய் கவுத்து வைக்கிறேண்டா!”

ராம மூர்த்தி நடுங்கிப் போய்விட்டார். தலையொழுத்தா பெரியவாளுக்கு! எதுக்கு நாங்க இருக்கோம்! இது பெரியவா பண்ற காரியம் இல்லை.

“ஏண்டா! நான் பண்ணக் கூடாதா? சந்திர மொளலீஸ்வரர் கைங்கர்யம்டா? பூஜை பண்ணினாதான் கைங்கர்யமா? நீ ஒண்டி கட்டையா இருக்க; இத்தனை பாத்திரத்தையும் தேய்த்து அலம்பி வைக்கணும். வெய்யிலா வேற இருக்கு. தண்ணி இழுத்து அலம்பி, அலம்பி உள்ள கொண்டு போய் கவுக்குறேண்டா!”

எந்த சங்கராசார்யராவது, எந்த மடாதிபதியாவது இப்படி சொல்வாளா? சொல்லமாட்டா, இவர் ஒருத்தர்தான் இப்படி சொல்வா! ஏன்னா, *மனிதன்*; *மாமனிதன்*,. மனுஷாளோட சிரமம் தெரிஞ்சவர். அதனால்தான். “பெரியவா”னா நமக்கு கண்ணுல தண்ணி வருது. அப்படி இருக்கச்சே, ராம மூர்திக்கு 5 ரூபாய் கொடுத்தால் என்ன 50 ரூபாய் கொடுத்தால் என்ன? சம்பளமா முக்கியம்? இந்த ஒரு வார்ததை போதாதா?

நாம்பளா இருந்தால் என்ன பண்ணுவோம். சொல்லிடுவோம். அவரும், அப்படியா பெரியவா 4-5 பக்கெட் தண்ணி இழுத்து அலம்பி உள்ளே வைங்கோன்னு சொல்ல முடியுமா?

வேண்டாம்னு சொன்னா; போய் விடுங்கிறியா?” “சரி, சரி, என்ன எங்க பண்ணவிடுவே” அப்படீன்னு போய்விடுவோம். பெரியவா போகலை. அதுதான் அங்க விசேஷம். அதுதான் பெரியவா!

இல்லைடா, நீ பண்ற அந்த கைங்கர்யம் ஒரு நாள் எனக்கு பாக்யம், நானும் பண்றேனே!

சொல்லிவிட்டு சும்மா நிற்கவில்லை. பண்றா! தண்ணி இழுத்து அலம்பி, அலம்பி பாத்திரங்களை உள்ளே எடுத்துண்டு போய் கவுத்து வைக்கிறார்.

*அதுதான் மஹா பெரியவா*!

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
காஞ்சி சங்கர காம கோடி சங்கர



Categories: Devotee Experiences

7 replies

  1. As I understand, Mahaperiyava is still in Skooshma roopam. His blessings are always on the righteous devotees. Meditating on his form / reciting his name / listening to his life history, etc. are also equivalent to praying to him.

  2. Hara hara shankara jeya jeya shankara l am very lucky because I got his blessed in my childhood please God be always with me

  3. Very true!!

    During times of physical and mental limitations… when even daily chores become a burden and when people with us are not willing to help us… Just one thought of Periyava! Please help me..he is there and we just don’t know how we complete the work.

    I have enjoyed this help from HIM several times and still do…

    PERIYAVA CHARANAM AND THANK YOU

  4. TRANSLATION

    Speech by: Shri Ganesh Sharma
    Written by: Premraj

    There was Shri “Mapillai Ramamurthy” who was involved in the kaingaryam (duty/seva) of washing the vessels used for cooking nivedyam for Chandramouleeshwara Puja. Those days in the Mutt food was cooked in big brass vessels known as Anda and using charcoal stove. By the time the puja was over it would be 3 or 4 o’clock and after taking food and after a short period of rest, he has to get things ready for evening puja. The pujas at night time would take long and by the the time he cleans everything, it would almost be the next day morning.

    One day in the scorching heat of afternoon, Shri Ramamurthy was washing the vessels near the well. Those were the days when water had to be drawn from the well and there were no motors. Brass vessels had to be washed well without charcoal stain..water had to be drawn from the well and used for washing these vessels.

    Shri Ramamurthy was a very sadhu jeevan (calm) and did not talk much. He heard footsteps of someone and turned back and he saw Mahaperiyava.

    Periyava said, “Ramamurthy I feel very sorry (pavam in Tamil) to see that you have to do so much work..you clean the vessels, I will draw water from the well and clean the vessels and take them inside.

    Shri Ramamurthy shuddered,,,this was not something which could be done by a Madathipathi and Periyava being the Guru,,there was a no need for him to get involved in all this…

    Periyava once again said, “Not just doing Puja is a kaingaryam for Chandramouleeshwara, even this is a kaingaryam for Chadramouleeshwara ..as a single person you have to clean the vessels, draw water from well in the scorching sun, and wash them…I will help you.”

    Will any Shankaracharya or Madathipathy say this!! Our GURU, the only great soul who realizes the tough life and situations of a common man would say this. Thats why anyone who hears his name (PERIYAVA) and sees him gets tears in his eyes….what if Shri Ramamurthy receives Rs.5 or Rs,50 as salary, aren’t these words of Periyava greater than all these!

    Inspite of Shri Ramamurthy refusing to take his help, Periyava did not go, he went ahead and drew water from the well and washed the vessels like he does Puja for Chandramouleeshwara…

    That is our PERIYAVA….

    Jaya Jaya Shankara
    Hara Hara Shankara

  5. English translation please….

  6. Jaya Jaya Sankara, Hara Hara Sankara, Kanchi Sankara, Kamakoti Sankara. Maha Periyava is truly God in human form. He is always with us. Let’s pray to him daily, every minute, to give us divine strength to bring our life to its logical end.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading