Periyava Golden Quotes-1123

ஹிந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுவுக்காவது ஒரு பிடி புல் கொடுக்க வேண்டும்; தோட்டம் உள்ள எல்லோரும் அதில் கொஞ்சமாவது மாட்டுக்கேற்ற அகத்திக்கீரை போடவேண்டும் என்றெல்லாம் ஏற்பாடு செய்து அதன்படியே ரொம்பப் பேர் நடத்தி வந்தார்கள். மாட்டுக்கு ஒரு பிடி என்பதை “கோ க்ராஸம்” என்று சொல்லியிருக்கிறது. இதிலிருந்துதான் இங்கிலீஷில் புல்லுக்கு “க்ராஸ்” என்று பேர் வந்ததோ என்னவோ? மேய்ச்சல் நிலமெல்லாம் குடியமைப்பாயும், தார் ரோடாயும் மாறி வருவதால் நம் கொல்லையிலேயே துண்டு இடமிருந்தால் அதில் ஆத்தி, அறுகு வைத்துக் கால்நடைகளுக்குக் கொடுக்க வேண்டும்.

இதற்கெல்லாமாவது கொஞ்சம் செலவு, த்யாகம் பண்ண வேண்டியிருக்கிறது. இதுகூட இல்லாமல், நம் அகத்தில் கறிகாய் முதலியவற்றை நறுக்கும் போது தோலை வீணாகத்தானே போடுகிறோம்? அப்படிப் போடாமல், சிலர் வீடுவீடாகப்போய் இந்தத் தோலை எல்லாம் ‘கலெக்ட்’ பண்ணி மாடுகளுக்குப் போட ஏற்பாடு பண்ணினோம். நான் திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லி அநேக இடங்களில் இந்தக் கார்யம் நடந்தது. இப்போதும்கூடப் பல இடங்களில் தொடர்ந்து நடக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Every person born as a Hindu ought to offer a cow atleast a handful of grass everyday; arrangements were made to make sure that all those who own a garden should grow atleast a small quantity of Agathi Keerai for the sake of the cows and many indeed had been following it regularly. Offering a handful of grass to the cow has been mentioned as “Gho Grasam”. The word ‘grass’ in English might have been derived only from this. As grazing grounds have been turning into housing colonies and highways, if there is a little space available in our backward, we should grow Agathi and Arugu and offer them to cattle.

Atleast for these activities there is an amount of expenditure and sacrifices to be made on our part. Even avoiding these discomforts, aren’t we wasting away the discarded peels of vegetables cut for cooking at homes? Instead of letting them go useless, we made arrangements to collect them from every household by a few people and get them delivered to feed the cows. With my insistence on it repeatedly, this endeavour was implemented in many places; it is still going on in many places too. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading