90.3 – Sri Sankara Charitham by Maha Periyava – Greatness of Govindar


Jaya Jaya Sankara Hara Hara Sankara – The greatness of our Purvacharya Pujyasri Govinda Bhagawathpadhar could not be explained any better than our Periyava as mentioned below in the third part of this chapter below.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for another classy drawing and audio. Rama Rama.


கோவிந்தரின் சிறப்பு

‘பதஞ்ஜலி சரித’ப்படி கோவிந்தரின் விதேஹமுக்திக்கு அப்புறம்தான் ஆசார்யாள் நிஜமாகவே ஆசார்யராகப் பணி ஆரம்பித்தது. “தஸ்மின் ஸ்திதே நிஜ மஹிம்னி விதேஹ முக்த்யா” — ‘கோவிந்தர் விதேஹ முக்தியடைந்து நிஜ (ஆத்ம) மஹிமையில் நிலைத்தபின்’ — பின் ஆசார்யாள் என்ன செய்தாரென்று பின்பாதி ச்லோகத்தில் ‘கன்டென்ஸ்’ பண்ணிச் சொல்லிக் கதையை முடித்திருக்கிறது.

என்ன செய்தாரென்றால், அத்வைதபரமான பாஷ்யங்களையெல்லாம் அழகாக இயற்றினார். “அத்வைத பாஷ்யம் உபகல்ப்ய.”

அந்த ஸித்தாந்தத்தை வெற்றிகரமாகப் பரப்புவதற்காக தேசம் பூராவும் ஸஞ்சாரம் செய்தார். திக்விஜயம் செய்தார்: “திசோ விஜித்ய” — திசைகளை ஜயித்தார். அதாவது நாலு திசையிலும் இருந்த மாற்று ஸித்தாந்தக்காரர்களை வாதத்தால் ஜயித்தார். ஸர்வ ஜனங்களின் ஹ்ருதயத்தையும் அன்பினால் ஜயித்தார்.

இப்படி ஜயித்து — ‘விஜித்ய’ — முடிவாக “காஞ்சீபுரே ஸ்திதிம் அவாப”: காஞ்சியில் ஸ்திரவாஸம் வைத்துக் கொண்டு விட்டார்.

‘ஸ்திதி’ என்றால் முடிந்து போவது என்றும் அர்த்தம் உண்டு. கடைசி காலத்தில் ஆசார்யாள் காஞ்சியில் வஸித்து விட்டு அங்கேயே அவதார வாழ்க்கையின் முடிவை அடைந்தார் என்று அர்த்தம்.

‘குருரத்னமாலா’விலுள்ள கோவிந்த பகவத்பாத ஸ்துதியில் அவருடைய பூர்வாவதாரங்கள் அவ்வளவையும் அடுக்கிக் கொண்டு போயிருக்கிறது:

ஹரிதல்ப ஹராங்க்ரிநூபுர க்ஷ்மாதர

ஸெளமித்ரி பலாத்ரிபுத்ர லக்ஷ்மா |

ஜயதாத் உபரேவம் ஆத்ததாமா

ஜய கோவிந்த முநி: ஸ சந்த்ரநாமா ||

‘சந்த்ரநாமா’-அதுதான் பூர்வாச்ரமப் பேர். ‘ஜய கோவிந்தமுநி’ — அது உத்தராச்ரம (பிற்கால ஆச்ரம)ப் பேர். ‘ஜய’ என்பது இங்கே பேரோடேயே சேர்ந்திருப்பது. ‘ஜயராமன்’ என்பது போல ‘ஜய கோவிந்தர்’ என்பதையே அவருடைய பெயராகச் சொல்லியிருக்கிறது. ‘இப்படி ஏன் சொல்லணும்? “வெல்க, வெல்க” என்று போற்றி கூறும் அர்த்தத்தில் ‘ஜய’ என்பதைத் தனி வினைச் சொல்லாகப் பிரித்து, “கோவிந்த முனியே, வெல்க!” என்று ஏன் சொல்லக்கூடாது?’ என்றால், ச்லோகத்தின் பின்பாதி ஆரம்பத்திலேயே ஒரு “போற்றி” சொல்லியாகிவிட்டது. “ஜயதாத்” என்று பின்பாதி ஆரம்பிப்பதற்கு “வெல்க” என்றுதான் அர்த்தம். ஆகையால் மறுபடி ‘ஜய கோவிந்த முனி’ என்று வரும்போது அதையே அவருடைய முழுப் பெயராக எடுத்துக் கொள்வதுதான் ஸரியானது. ஜய ராமன், ஜயலக்ஷ்மி — வடக்கே ஜெய்கிஷன் (ஜயக்ருஷ்ணன்), ஜெய் ஷங்கர் (ஜய சங்கரன்) என்றெல்லாம் கூடப் பேர் வைத்துக் கொள்கிறார்கள்- இவை மாதிரி ஜயகோவிந்தர் என்றே பேரைச் சொல்லியிருக்கிறது.

ஒருவர் உயிரோடிருக்கும்போது அவருக்கு ஜய கோஷம் செய்தால் அவர் கார்யமெல்லாம் வெற்றிகரமாகட்டும் என்று அர்த்தம். “ஜேய், ஜேய்” என்று இப்படிப் பல பேருக்கு கோஷம் போடுகிறோம். மறைந்து போனவர்களுக்குப் ‘ஜேய்’ போட்டால் என்ன அர்த்தம்? யசஃகாயம் (புகழுடம்பு) என்று சொல்வதில் அந்த ஆத்மா இருந்து கொண்டு ஆசீர்வாத கார்யத்தை வெற்றியோடு பண்ணிக் கொண்டிருக்கட்டும், உயிரோடிருந்தபோது பண்ணியவற்றுக்கே ஸூக்ஷ்மமாக இப்போதும் சக்தியைக் கொடுத்து அந்த லக்ஷ்யங்களில் தொடர்ந்து வெற்றி காணட்டும் என்று அர்த்தம்.

வெற்றியைத் குறிப்பது மட்டுமின்றி ஜய சப்தமே மிகவும் மங்களமானது. ‘கடபயாதி ஸங்கியை’ என்பதன்படி* ஜ-ய என்ற எழுத்துக்கள் 18 என்ற எண்ணிக்கையைக் குறிக்கும். 18 விசேஷமான மங்கள சக்தி வாய்ந்த எண்.

இதனாலெல்லாம்தான் ‘ஜய’ என்று ஒருத்தர் பேரோடேயே சேர்ப்பது.

மநுஷக் குழந்தை மாதிரி இருந்த ஆசார்யாளை ஸந்நியாஸியாக்கி, நிஜமான ஆசார்யாளாக ஆக்கியவரின் பேருக்கு ‘ஜய’ சேர்க்காவிட்டால் யாருக்குத்தான் சேர்ப்பது? (சிரித்து) சிஷ்யர் ‘ஜய ஜய சங்கர’ராக இருந்தால் குரு ‘ஜய கோவிந்த’ராகவாவது இருக்க வேண்டாமா?

ஜய கோவிந்த முநிஸ சந்த்ரநாமா

‘ஜய கோவிந்தமுனி’யாக ஆவதற்கு முன் அவர் சந்த்ர நாமா’க்காரராக இருந்தார். அதுவும் இதே பிறவியில்தான்.

அதற்கு முந்தி?

ஆதிசேஷனாயிருந்தார். இதைத்தான் ‘ஹரிதல்ப’. ‘ஹராங்க்ரிநூபுர’, ‘க்ஷ்மாதர’ என்று அவர் செய்யும் மூன்று விதக் கார்யங்களால் தெரிவித்திருக்கிறது. ஆதிசேஷன் விஷ்ணுவுக்குப் படுக்கையல்லவா? அதுதான் ‘ஹரிதல்பம்’. அவரே சிவன் நர்த்தனம் பண்ணும்போது அவருடைய பாதத்தில் சிலம்பாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார் என்றேனல்லவா? அதுதான் ‘ஹராங்க்ரி நூபுரம்’. அவர் செய்யும் இன்னொரு பெரிய கார்யம் இந்த பூமி முழுதையும் தம்முடைய ஆயிரம் சிரஸினால் தாங்கிக் கொண்டிருப்பது. ‘க்ஷ்மா-தர’ என்று இதைத்தான் சொல்லியிருக்கிறது. பூமாதேவி எல்லாவற்றையும் பொறுமையுடன் தாங்கிக் கொள்கிறாளென்றால் அவளையும் ஆதிசேஷன் தாங்கிக் கொண்டிருக்கிறார். ‘க்ஷ்மா’என்றால் பூமி. அதிலிருந்துதான் க்ஷமா (பொறுமை) என்பது வந்தது. ‘பொறுமைக்கு பூமாதேவி’. தன்னை வெட்டுகிறவர்களையும் தாங்குகிறது பூமி. க்ஷ்மாவையும் தாங்குவதால் ஆதிசேஷன் ‘க்ஷ்மாதரர்’.

இந்த ஆதிசேஷ ஸ்வரூபம்தான் கோவிந்த பகவத் பாதாளின் ஆதி ரூபம். ஆதி ரூபத்திற்கும் இந்த (கோவிந்த) ரூபத்திற்கும் நடுவே இன்னும் சில அவதார ரூபங்களும் அவருக்கு உண்டு. என்னென்ன?

ஸெளமித்ரி, பலாத்ரிபுத்ர — ஸெளமித்ரி, பல, அத்ரி புத்ர. ஸெளமித்ரி என்றால் ஸுமித்ரா புத்ரனான லக்ஷ்மணர். விஷ்ணு ராமராக வந்தபோது ஆதிசேஷன் லக்ஷ்மணராகக் கூட வந்தார்.

அரச மரத்தின் மேலே நாள் கணக்காக ஆஹாரமில்லாமல், தூக்கமில்லாமல் சந்த்ர சர்மா பாடம் கற்றுக் கொண்டாரே, அது எப்படி முடிந்தது என்பதற்கு இங்கே ஆன்ஸர் கிடைக்கிறது. லக்ஷ்மணராக இருந்தபோது இதை விட பஹுகாலம் — பதிநாலு வருஷம் — வனவாஸத்தின் போது அவர் ஆஹாரமும் நித்ரையும் இல்லாமல்தானே அண்ணாவுக்குப் பணிவிடை பண்ணிக் கொண்டு, காவல் காத்துக் கொண்டு இருந்திருக்கிறார்? அந்த எக்ஸ்பீரியன்ஸ் தான் இப்பவும் கைகொடுத்திருக்கிறது! இப்போது இப்படிப் பண்ணவே, அப்போது ‘ட்ரெய்னிங்’ நடந்திருக்கிறது!

ஸெளமித்ரியாக வந்தவரே அப்புறம் பலராமராக க்ருஷ்ணாவதாரத்தில் வந்தார். தம்பியாக இருந்தவர் அண்ணாவாக வந்து அண்ணாவின் பெயரையும் வைத்துக் கொண்டார், பலராமர் என்று. பல பத்ரர் என்றும் சொல்வதுண்டு. இங்கே “ஸெளமித்ரி பலாத்ரிபுத்ர” என்னுமிடத்தில் ‘பல’என்பது பலராமரைத்தான். அவரும் சேஷாவதாரம்.

அப்புறம் ‘அத்ரி புத்ரர்’. அதுதான் ஆத்ரேயர் என்னும் பதஞ்ஜலி.

ஹரியின் படுக்கையாக, ஹரனின் பாதஸரமாக, பூமியை தரிப்பவராக, லக்ஷ்மணராக, பலராமராக, பதஞ்ஜலியாக வந்தவர்தான் சந்த்ர சர்மாவாகப் பிறந்து கோவிந்த முனியானவர். இப்போது அவர் நர்மதா தீரவாஸியாக ஆனார். அதைத்தான் “உபரேவம் ஆத்ததாமா” என்று சொல்லியிருக்கிறது. ‘தாமா’ என்றால் இருப்பிடம். ரேவா என்பது நர்மதைக்கு இன்னொரு பெயர். ‘உபரேவம்’ என்றால் ‘ரேவாவுக்குப் பக்கத்தில்’, அதாவது நர்மதா தீரத்தில். நர்மதா தீரத்தில் வாஸ ஸ்தானத்தை உடையவர்தான் ‘உபரேவமாத்த தாமா’. இத்தகைய பல ரூபங்களைக் கொண்டவர் விஜயம் பண்ணட்டும் — “ஜயதாத்” — அவருடைய பேரும் கீர்த்தியும் எப்போதும் வெற்றிகரமாக விளங்கிக் கொண்டிருக்கட்டும்! இப்படிச் ச்லோகம் சொல்கிறது.

__________________________________________________________________________________________________

* பிற்பாடு ‘கடபயாதி சங்க்யை’ என்றே வரும் பிரிவில் விளக்கம் காண்க.

________________________________________________________________________________________________________________________________

Greatness of Govindar

According to ‘Patanjali Charitam’, Acharya’s work as a teacher, truly started only after the Videha Mukti of Govinda Bhagavatpada.  “tasmin sthite nija mahimni vidheha muktyaa” – the latter part of the verse concludes by conveying in a condensed form, what Acharya did after Govinda Bhagavatpada attained liberation and resided permanently in the glory of Self (Atma).

What he did was, he wrote very well the commentaries – the gems of Advaita.  “advaita bhashyam upakalpya”.

To successfully spread the Advaita philosophy, he toured the entire country.  He went forth in all directions.  “disho vijitya” (दिशो विजित्य) – and conquered the directions.  That is, he won over people who held contrary views in all the four directions by his arguments.  He won over the hearts of all the people with his love.

After successfully conquering this way, in the end, he took permanent residence in Kanchipuram – “kaanchipure sthitam avaapa:”.

‘Sthiti’, has another meaning – ‘getting over’.  It means that Acharya lived his last days in Kanchipuram and reached the end of his incarnation there itself.

In the eulogy on Govinda Bhagavatpada in ‘Gururatnamala’, all his previous incarnations are listed out.

‘haritalpa – haraanghrinoopura – kshmaadhara –sowmitri – balaatriputra lakshmaa I
jayataat – uparevam – aattadhaama  jaya govinda muni: sa chandranaama’ II

हरितल्प-हराङघ्रिनूपुर- क्ष्माधर-सौमित्रि-बलात्रिपुत्र लक्ष्मा।

जयतात्-उपरेवम्-आत्तधामा जय गोविन्द मुनिः स चन्द्रनामा

‘Chandranama’ – that is the name in the previous stage of his life.  ‘Jaya Govinda Muni’ – that is the name in the later stage (Uttaraashrama). Here, ‘Jaya’ is attached to the name.  His name is mentioned as ‘Jaya Govinda’ – similar to ‘Jayaraman’.  For the question, “Why should it be mentioned this way?  Why should we not treat ‘Jaya’ as a separate verb, giving the meaning, ‘Let Govinda Muni be successful!?’ – the response comes as, a ‘wish for success’ is already added in the beginning of the second half of the verse.  The second half of the verse beginning with ‘jayataat’, means, ‘may be successful’.  Therefore, when it is mentioned once again, ‘Jaya Govinda Muni’, it would only be appropriate that it should be taken as his full name.  People keep names like Jayaraman, Jayalakshmi, and, in the north, as Jaikishan (Jayakrishnan), Jaya Shankar, etc.  Similarly his name is only mentioned as Jaya Govinda.

When slogans for success [जय घोषम्-jaya gosham] are offered to someone who is alive, it means ‘let his work be successful’.  We raise the slogan “jai jai” to many people.  What does it mean if the wishes for success are offered to someone who has already expired?  It means ‘let the atma reside in the body of fame [यशःकायम्] and continue to bless successfully; let the things done during the time when he was alive be given the strength to continue successfully’.

Apart from denoting success, the word ‘jaya’ itself is very auspicious.  According to ‘Katapayaadi Sankhya’ (कटपयादि संख्या)*, the letters ‘jaya’, indicate the number 18.  18 is a number with special auspicious powers.

Because of all these reasons, Jaya is usually added to a person’s name itself.

If ‘Jaya’ is not added to the name of the person who transformed Acharya – who was a human child – into a Sanyasi and made him the true Acharya, then, to whom else can it be suffixed?  (Laughing) When the disciple was ‘Jaya Jaya Sankara’, should not the guru be at least, ‘Jaya Govinda’?

‘jaya govinda muni: sa chandranaama’

Before he became ‘Jaya Govinda Muni’, he was as ‘Chandranama’ – that too in the same life.

What was he before that?

He was as Adisesha.  This is what is conveyed in the three names ‘haritalpa’,  ‘haraanghrinoopura’ and ‘kshmaadhara’, signifying the three types of jobs he does. Is Adisesha not the bed for Vishnu? ‘haritalpa’ denotes that.  Did I not mention that when Siva is dancing, he remains coiled on Siva’s feet as an anklet?  That is ‘haraanghrinoopura’.  Another very great job he is doing is that he is bearing the entire world on his thousand hoods.  This is what is mentioned as, ‘Kshmaa-dhara’.  While Bhooma Devi is bearing everything patiently, she is also held by Adisesha.  ‘Kshmaa’ means Bhoomi.  From this originates the word ‘kshama’    [क्षमा – patience]. Bhooma Devi is an epitome of patience.  She bears with even those who injure her.  As Adisesha is holding Kshmaa also, he is ‘Kshmaadhara’.

This Adisesha form is the original form of Govinda Bhagavatpada.   Between the original form and this form as (Govinda) Bhagavatpada, he has some more forms.  What are they?

Sowmitri, Balaatriputra – Sowmitri [सौमित्रि], Bala [बल] Atri Putra [अत्रि पुत्र].  Sowmitri means Sumitra’s son, Lakshmana.  When Vishnu came as Rama, Adisesha came along as Lakshmana.

You get the answer here, as to how it was possible for Chandra Sharma to have learnt the lessons on the peepul tree, without food and sleep, for hundreds of days.  Did he not remain for longer period – fourteen years – during the time spent in the forest as Lakshmana, without food and sleep, rendering service to his elder brother and keeping vigil?  That experience has come in handy now!  It is for this, the training was given then!

The same person who came as Sowmitri, later came as Balarama during the incarnation of Krishna.  He who was earlier the younger brother, now came as the elder brother and also had the name of the elder brother, Balarama.  He is also called as Balabhadra.  Here, when mentioning “sowmitri – balaatriputra”, Bala refers to Balarama.  He is also an incarnation of the Serpent [Adisesha].

Then comes ‘Atri Putra’.  That is Aatreya, also known as Patanjali.

He who is the bed for Hari, anklet for Hara, bears the earth, came as Lakshmana, Balarama and Patanjali, was born as Chandra Sharma and became Govinda Muni.  Now he lived on the banks of the Narmada.  That is what is mentioned as “uparevam aathadhaama”.  ‘dhaama’ [धाम] means place of residence.  ‘Reva’ is another name for Narmada.  ‘Upareva’, means ‘adjacent to Reva’, that is, on the banks of Narmada.  The person who is having his residence on the banks of Narmada is ‘Upareva maatha dhaama’.  The verse ends by saying, ‘Let the person with many such forms be successful – “jayataat” – Let his name and fame remain successful forever’!

*See explanation in the chapter, exclusively named as ‘Katapayaadi Sankhya’

___________________________________________________________________________________________________________________________

Audio

 



Categories: Deivathin Kural

2 replies

  1. Did Sowmya do voice recording?

  2. 🙏🙏🙏

Leave a Reply to Mahesh Cancel reply

%d bloggers like this: