தீபாவளி ஸ்பெஷல் – Thenambakkam Special!


Thanks to FB share by ummachithatha handle!

மேலும் 3 முக்கிய ஸ்வாரஸ்ய சம்பங்கள்-!

சொன்னவர் ஸ்ரீமடம் பாலு &சங்கர பக்த ஜன சபாவின் செயலர் வைத்தியநாதன்

‘அதுவொரு தீபாவளி சமயம்!

எல்லோரும் புடவை, வேஷ்டி எல்லாம் கொண்டு வந்து தேனம்பாக்கத்தில் அவரிடம் கொடுப்பார்கள். அங்கே கிணற்றுக்குப் பக்கத்தில் ஒரு தொட்டி உண்டு. அதில் ஜவுளி வகையறா எல்லாவற்றையும் போட்டு மூடி வைத்துவிடுவோம்…”- மீண்டும் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தில் துவங்கியது பாலுவின் உரையாடல்

.”குண்டு-ன்னு ஒரு பையன்… 18, 19 வயசு இருக்கும். இங்கே எடுபிடி வேலைகள் பார்த்துக்கொண்டிருந்தான் பெரியவாளுக்கு அவன் மேல ரொம்பப் பிரியம். ஒரு நாள் காலம்பர எங்களையெல்லாம் கூப்பிட்டுத் தொட்டியைக் காட்டினார். தொட்டி காலியாக இருந்தது; உள்ளே ஜவுளி எதுவும் இல்லை. எப்படி அத்தனையும் மாயமா மறைஞ்சு போச்சுன்னு எங்களுக்குத் தெரியலை.

மகா பெரியவா எங்களைக் கூப்பிட்டு, நிறைய பட்சணம்லாம் வாங்கிட்டு வரச் சொன்னார். தீபாவளி அன்னிக்கு எண்ணெய் ஸ்நானம் பண்ண எண்ணெய் வேணுமே… அதையும் வாங்கிட்டு வரச் சொன்னார். எங்களுக்கு ஒண்ணுமே புரியலை. பட்சணம், நல்லெண்ணெய் வந்து சேர்ந்தது. பட்டாசு வேணும்னு சொன்னார் பெரியவா. அதுவும் வந்தாச்சு!

எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டு, ‘இங்கே வேலை செய்றானே ஒரு பையன் குண்டுன்னு… அவனுக்கு வெறுமனே வேட்டியும் புடவையும் இருந்தா போறுமா, தீபாவளி கொண்டாட?! அதை மட்டும் வெச்சுண்டு, பாவம் அவன் என்ன செய்வான்? நல்லெண்ணெய், பட்சணம், பட்டாசு எல்லாம் கொண்டு போய்க் கொடுத்துட்டு வாங்கோ… சட்டுனு போங்கோ!’ என்றார் பெரியவா.

அப்புறம்தான் எங்களுக்கு, புடவை- வேஷ்டிகளை எல்லாம் எடுத்துண்டு போனது குண்டுதான்னு தெரிஞ்சுது. ஆனா, பெரியவாளுக்குத் துளிக்கூட அவன் மேல கோபம் வரலை!” என்ற பாலு, சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்…

“பெரியவாளுக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை… முக்குறுணிக் கொழுக்கட்டை செய்து பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணனும்னு…” என்றவர், அது பற்றி சொல்ல தொடங்கினார். பாலு

.”மதுரை, திருச்சி, ராமேஸ்வரம்னு சில தலங்களில் முக்குறுணிப் பிள்ளையார் உண்டு. முக்குறுணின்னா… ஆறு படி அளவு. பெரியவா அரிசி அரைச்சுட்டு வரச் சொன்னார். பிரம்மசாரி ராமகிருஷ்ணன்கிட்ட ஐம்பது தேங்காயை உடைச்சு துருவிக் கொண்டுவரும்படி சொன்னார். பூரணம் பண்ணி ஒரே கொழுக் கட்டையா செய்யணும். பெரியவா ஆலோசனைப்படி எட்டு முழ வேட்டியில் கட்டி, வரதராஜ பெருமாள் கோயில்ல இருந்து பெரிய அண்டா கொண்டு வந்தோம். அன்னிக்கு காலைலேர்ந்து சாயங்கால வரைக்கும் கொழுக்கட்டை வெந்தது.சரி… பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணணுமே. கொழுக்கட்டையை பெரியவா முன்னாடி வைத்ததும்..

. ‘தேனம்பாக்கத்துல ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு. அங்க வாசல்படியில் வெச்சுட்டு வந்துடுங்கோ’ன்னார் பெரியவா.

பக்தர்களும் அப்படியே செஞ்சாங்க. அங்க என்னடான்னா… கோயில் வாசல்ல பெரிய மூட்டை கணக்கா இருந்த அண்டாவைப் பார்த்ததும், ஊர் ஜனங்க என்னவோ ஏதோன்னு பதறிட்டாங்க. அப்புறமா, அது பிள்ளையாருக்கான நைவேத்தியம்னு தெரிஞ்சதும், கட்டைப் பிரிச்சிருக்காங்க. உள்ளே பிரமாண்ட கொழுக்கட்டை!எல்லாருமா பிரிச்சு சாப்பிட்டதுக்குப் பிறகு, ‘சாமி, கொழுக்கட்டை நல்லா இருந்தது’ன்னு பெரியவாளை நமஸ்காரம் பண்ணினாங்க. பெரியவாளுக்கோ, பிள்ளையாருக்கு நைவேத்தியம் பண்ணணும்கற ஆசை நிறைவேறியதோட, ஜனங்களுக்கு அந்தக் கொழுக்கட்டையைத் தின்னக் கொடுத்த திருப்தி!” என்ற பாலு,

அடுத்து ஒரு கிரகணத்தன்று நடந்த சம்பவத்தை விவரித்தார். ”அந்த முறை பெரியவாளோட அனுஷ நட்சத்திரத்துலேயே கிரகணம் பிடிச்சது. கிரகணம் விட்டு ஸ்நானம் எல்லாம் முடிஞ்சதும், தானம் செய்ய உட்கார்ந்தார் பெரியவா. நிறைவா பசு மாடு கொடுக்கணும். திருவட்டீசுவரன்பேட்டை வெங்கட்ராமன், பசு மாட்டுக்குப் பதிலா மட்டைத் தேங்காயை எடுத்து வைத்தார். அதாவது, பசு தானம் செய்ய முடியலைன்னா அதுக்கு ப்ரீத்தியாக மட்டைத் தேங்காய் கொடுப்பார்கள். ஆனா, மகா பெரியவா கோவிச்சுக்கிட்டார். ‘என்னை ஏமாத்தப் பார்க்கறியா? மாட்டைக் கொண்டு வான்னா, நல்லதா ஒரு மாட்டைத்தான் கொண்டு வரணும்’னுட்டார்.

அப்புறம், எப்படியோ நல்லதொரு கறவை மாடாகக் கொண்டு வந்து நிறுத்தினாங்க. அதைத் தானம் கொடுத்த பிறகுதான் பெரியவாளுக்குத் திருப்தி! அதேபோன்று பூதானத்துக்கு ப்ரீத்தியா சந்தனக் கட்டை கொடுக்கலாம். ஆனால், அப்போதும் பெரியவா, கூடலூர் கல்யாண சுந்தரமய்யர் கொடுத்த ஒன்றரை ஏக்கர் நிலத்தை வேறு ஒருவருக்கு அப்படியே தானமாகக் கொடுத்துவிட்டார்!விளாப்பாக்கம் என்ற ஊரில் குமரேசன்னு ஒரு பக்தர். அவர் குடும்பத்துல யாரோ பில்லி-சூன்யம் வெச்சுட்டாங்க. குளிச்சு உலர்த்தும் ஈரத்துணியும் தீப்பிடிக்குமாம். அவர் பெண்ணுக்குக் கண்ணைத் திறக்கவே முடியாது. ஜோசியம்லாம் பார்த்தும் பலனில்லை. அவர், தன் பெண்ணை பெரியவாகிட்ட அழைச்சுட்டு வந்தார்.

‘யாரோ என் பெண்ணோட கண்ணைக் கட்டிட்டா! பெரியவாதான் அனுக்கிரகம் பண்ணணும்’னு கதறினார். பெரியவா, அந்தப் பெண்ணோட கண்ணையே கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்தார். அப்புறம், அவளை துர்கை சந்நிதிக்கு அழைச்சுட்டுப் போகச் சொன்னார். அம்பாளுக்கு முன்னாடி நிறுத்தி, கண்ணைத் திறக்கும்படி சொன்னார். என்ன ஆச்சரியம்..! அவளால் கண்ணைத் திறக்க முடிஞ்சுது. கண்ணைத் திறந்ததும், எதிரே துர்கை தரிசனம்… சிலிர்த்துப் போயிட்டா. அவளுக்குப் பார்வை சரியானதோடு, அன்னியிலேர்ந்து வீட்டில் துணிமணிகள் தீப்பற்றி எரிவதும் நின்னு போச்சு!”-

பாலு சொல்லி முடிக்க, அந்தக் கருணைக் கடாட்சங்களை எண்ணி, நம்மையும் அறியாமல் காஞ்சி தெய்வத்தை தொழுது பணிகிறது நம் உள்ளம். நம்முடைய இந்த சிலிர்ப்பை அதிகப்படுத்தியது, சங்கர பக்த ஜன சபாவின் செயலர் வைத்தியநாதன் விவரித்த விஷயங்கள்.Categories: Devotee Experiences

1 reply

  1. மகா ஸ்வாமிகளை பற்றிய அனுபவங்களை கேட்க கேட்க அவர்மீதுள்ள பக்தி அதிகரிக்கும் .சமீபத்தில் எனக்கு ஒரு அறுவை சிகிச்சை 68 வயதில் பண்ணவேண்டிய கட்டாயம் இருந்தது .மஹாபெரியவா சன்னதியில் இருக்கும் குமரேசன் மாமாவிடம் சொன்னேன் .அவர் கவலைப்படாதீங்கோ . மகா பெரியவா அனுகிரஹத்திலே எல்லாம் நல்லபடியாக நடக்கும் .கவலைப்படாதீங்கோ என சொல்லி ஸ்ரீ மஹாபெரியவா பிரசாதம் அனுப்பிவைத்து எனக்காக பெரியவா சந்நிதியில் ஒரு சிறப்பு பிரார்த்தனை செய்ய சொல்லி வேண்டினேன் .நல்ல படியாக அறுவை சிகிச்சை முடிந்து , தற்போது நலமாக உள்ளேன் .

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: