காவ்ய கண்ட கணபதி முனிவர்

Thanks to Ganesh for FB share.

பகவான் ஸ்ரீ ரமணரின் பிரதம சீடர்.

ஸ்ரீ பகவானால் நாயனா என்று அன்புடன் அழைக்கப் பட்டவர். ஆந்திராவில் ஸ்ரீ காகுளம் மாவட்டத்தில் பிறந்தவர். சமஸ்கிருத மொழியின் 20 ஆம் நூற்றாண்டின் பெரிய மேதையாக விளங்கியவர்.

10 வயதுக்குள் சமஸ்கிருத காவியங்களையும், கணக்கியலையும், வானவியலையும் கற்றுத் தேர்ந்தார்.

கோள்களின் சஞ்சாரத்தையும், பலன்களையும் துல்லியமாகக் கணக்கிட்டார். ஜோதிடக் கலையில் பெரிய பண்டிதர் ஆனார்.

காஞ்சி பரமாச்சாரியாரை அவர் சந்தித்து ஆசி பெற விரும்பினார். பரமாச்சாரியார் இந்த சந்திப்புக்கு ஒப்புக் கொள்வாரா என்பதற்கு அவர் தயங்கினார். ஆனால் பரமாச்சாரியார் அவருக்கு அழைப்பு விடுத்தார். கரக்பூரில் பரமாச்சாரியார் கணபதி முனிவரிடம் சுமார் 50 நிமிடங்கள் சமஸ்கிருதத்தில் பேசினார்.

அவருடன் பேசி மகிழ்ந்த பரமாச்சாரியார் விலை மதிப்பு மிக்க தங்க ஜரிகைகளால் மின்னிய பொன்னாடையால் அவரை கௌரவித்தார்.

கணபதி முனிவர் ஸ்ரீ அரவிந்தர் எழுதிய ஜனனி என்ற நூலுக்கு முன்னுரை எழுதினார்.
அதைப் பாராட்டிய ஸ்ரீ அரவிந்தர் அது மூலத்தை மிஞ்சி விட்டது என்று கருத்து தெரிவித்து மகிழ்ந்தார்.

ஹரிஹரசுப்பிரமணியன்
வெங்கடசுப்பிரமணியன்Categories: Devotee Experiences

7 replies

 1. His book, “Uma Sahasram” covers 1000 slokas of which the last 300 are said to be inspired by Ramana maharishi just through his eyes.

 2. Namaste,

  English translation please..

 3. இந்தக் கட்டுரையை கவனமாக வாசிக்கவேண்டும்.
  ஸ்ரீ காவ்யகண்ட கணபதி சாஸ்திரிகள் மிகப்பெரிய வேத சாஸ்திர விற்பன்னர். பல சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவர். பல அபூர்வ ஆற்றல்களைக் கொண்டிருந்தவர். வேதம் சொல்லும் தெய்வங்களின் காட்சியைப் பெற்றவர். மந்திர சாஸ்திரத்தில் கரைகண்டவர். மந்திர சாஸ்திரத்தின் மூலம் தேசம் சுதந்திரம் பெறவைக்கலாம் என்று நம்பி அதற்காக முயற்சிசெய்தவர். ஒரு சமயம் திருவண்ணாமலை நகரின் காங்கிரஸ் தலைவராக இருந்தவர். தீண்டாமை வேதத்தில் சொல்லப்படவில்லை என்று ஆணித்தரமாக நிறுவியவர்.
  சிறுவயதிலேயே அனாயாசமாக சம்ஸ்க்ருதத்தில் ஆசுகவி பாடும் வல்லமை பெற்றிருந்தார். அதனால் பண்டிதர்கள் சபை இவருக்கு “காவ்ய கண்டர்” என்று பட்டம் தந்தனர். (1900)
  ஸ்ரீ ரமணருக்கு “ரமணர் ” என்ற பெயர் வைத்தவர் அவர்தான்! இவர் திருவண்ணாமலைக்கு வந்தபோது இவ்வளவு கற்றிருந்தும் மன நிறைவு, நிம்மதி இல்லாமல் இருந்தார், அதுவரை தாம் மேற்கொண்டிருந்த ஜபதபம் போன்றவை சரிதானா என்றுகூட சந்தேகம் வந்துவிட்டதுஅப்போது ஸ்ரீ ரமணருக்கு ஒரு பெயர் இல்லை, அவர் பேசுவாரா என்பது கூட பொதுவாகத் தெரியாது. அவர் மகிமையை உணர்ந்த காவ்யகண்டர் அவர் காலைப் பிடித்துக்கொண்டு “வேண்டிய அளவு சாஸ்திரங்களைப் படித்துவிட்டேன்; வேண்டிய வரை மந்திர ஜபங்களும் செய்துவிட்டேன், ஆனால் தபஸ் என்பது என்ன என்று தெரியவில்லை” என்று முறையிட்டார். சுமார் பதினைந்து நிமிஷங்கள் அவரைப் பார்த்துக்கொண்டிருந்த ரமணர் அவருக்கு இரண்டு வாக்கியம் உபதேசம் செய்தார்:
  – நான் நான் என்பது எங்கேயிருந்து புறப்படுகிறதோ அதை கவனித்தால் மனம் அங்கே லீனமாகும் அதுவே தபஸ்’
  – ” ஒரு மந்திரத்தை ஜபம் பண்ணினால் அந்த மந்திரத்வனி சப்தம் எங்கிருந்து புறப்படுகிறது என்று கவனித்தால் மனம் அங்கே லீனமாகிறது அதுதான் தபஸ்.”

  இதைக்கேட்ட காவ்யகண்டர் ஆனந்தம் பொங்கியவரானார். இந்த சாமியின் பெயர் என்ன என்று கேட்டார். அப்போது அங்கிருந்த பழனிச்சாமி என்ற (அப்போதைய ) பக்தர் அவர்பெயர் ‘வெங்கட் ராம ஐயர்” என்று சொன்னார். உடனே காவ்யகண்டர் “இவரை இனிமேல் “பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகள்” என்றுதான் அழைக்கவேண்டும் என்று சொன்னார். எத்தனையோ கோடிக்கணக்கான மந்திர ஜபங்கள் செய்த அரிய நிஷ்டரின் வாயிலிருந்து வந்த அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.
  காவ்யகண்டருக்கு ஒரு சீடர் குழாம் இருந்தது, அவர்கள் அவரை நாயனா என்ற தெலுங்குப் பதத்தால் மரியாதையாக அழைத்தனர். அவர் தகுதியைக் கருதி ஸ்ரீ பகவானும் அவரை நாயனா என்றே அழைக்கத் தொடங்கினார்.நாயனா ஸ்ரீ ரமணரின் மீது பாடிய துதிப்பாடல்களை இன்றளவும் ஆஸ்ரமத்தில் வேத பாராயணத்துடன் சேர்ந்து
  ஓதுகின்றானர்.
  இவ்வளவு இருந்தும் காவ்யகண்டரை ஸ்ரீ ரமணரின் முதன்மைச் சீடர் என்று சொல்லலாமா? இது சந்தேகம் தான்.
  காவ்யகண்டர் ஸ்ரீ ரமணர் காட்டிய வழியான “நான் யார் ” என்ற ‘விசார” முறையை மேற்கொள்ளவே இல்லை! தன் வழியிலேயே போய்க்கொண்டிருந்தார். பின் அவரை எப்படி ஸ்ரீ ரமணரின் ‘பிரதம சீடர் ” எனச் சொல்ல முடியும்?
  ஸ்ரீ ரமணர் செய்த உபதேசங்கள் எல்லாம் தமிழில் தான், இவற்றைச் சந்தேகத்துக் கிடமில்லாமல் ஸ்ரீ அருணாசல துதி பஞ்சகம், உபதேச உந்தியார், உள்ளது நாற்பது, உள்ளது நாற்பது-அனுபந்தம், ‘நான் யார்’ என்ற சிறு வெளியீடு ஆகியவற்றில் காணலாம். இந்த விஷயத்தில் சிலர் ஒரு சர்ச்சை கிளப்பினர். ‘மஹரிஷிகளின் வாக்கு உபனிஷதத்திற்கு ஒப்பானது, உபனிஷதம் சம்ஸ்க்ருதத்தில் இருக்கிறது; ஸ்ரீ ரமண மஹர்ஷிகளின் உபதேசங்கள் தமிழில் இருக்கின்றனவே- இவற்றை சம்ஸ்க்ருத்த்தில் செய்யவேண்டாமா’ என்று சிலர் நினைத்தனர். அவ்வாறு சம்ஸ்க்ருதத்தில் எழுதவும் செய்தனர். சிலர் அதற்கு வியாக்யானம் எழுதினர், சிலர் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தனர் இந்த முயற்சியில் ஸ்ரீ பகவானின் கருத்துக்கள் திரிந்துவிட்டன. தமிழ் மூலம் தெரியாதவர்களிடையே இந்த திரிந்த கருத்துக்கள் பரவும் நிலை தோன்றியது. இந்த விஷயத்தை புதுக்கோடை கே.லக்ஷ்மண சர்மா பகவானின் கவனத்திற்குக் கொண்டுவந்தார். எப்போதுமே யாரையுமே குறைசொல்லாத ஸ்ரீ ரமணர் ‘ அவர்கள் எழுதியது சரியாக இல்லை என்றால் நீதான் சரியாக எழுதேன்” என்று சொன்னார். அதன்படியே ஸ்ரீ லக்ஷ்மண சர்மா எழுதி அதை ஸ்ரீ பகவானிடம் காட்டி அங்கீகாரமும்பெற்றார். இங்கு முக்கிய விஷயம், லக்ஷ்மண சர்மாவுக்கு வேதாந்தம் தெரியாது. அவர் பகவானிடமே சென்று, ‘எனக்கு ஒன்றும் தெரியாது, உங்கள் உபதேசம் புரியவில்லை நீங்கள் தான் விளக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அதன்படியே ஸ்ரீ பகவானே அவருக்கு தன் நூல்களை விளக்கினார். அவர் எழுதியதன் பெருமை புரிகிறதல்லவா?
  காவ்யகண்டர் ஸ்ரீ ரமண கீதை என்று பெயரிட்ட ஒரு சிறு புத்தகம் எழுதினார். ஸ்ரீ பகவானிடம் சில கேள்விகள் கேட்டு அதற்கு பதில் பெற்று அதை கீதை என்ற பெயரில் எழுதினார். இதிலும் ஸ்ரீ ரமணரின் உபதேசம் சரியாக விளக்கப்படவில்லை. இந்த விஷயத்தை சிலர் பகவானிடமே கேட்டனர். ” அந்தக் கேள்விகள் சில உள் நோக்கத்துடன் கேட்கப்பட்டன, பதிலும் அதற்குத்தகுந்தமாதிரியே அமைந்தது” என்று சொன்னார். எனவே இந்த ‘ரமண கீதையும்’ சரியான வழிகாட்டியல்ல.
  ஸ்ரீ ரமணரிடம் நேரடியாகவே அவர் உபதேசங்களைக் கேட்டறிந்த மற்றொருவர் சி.கே சுப்ரமண்ய ஐயர் என்ற தமிழ்ப் பண்டிதர். இவர் மு. ராகவையங்கார், ரா.ராகவையங்கார் ஆகிய வர்களுக்கு நிகராகமதிக்கப்பட்டவர்.இவர் தமிழில் பெரும் அறிஞராகவும் புலவராகவும் இருந்தும் வேதாந்த விஷயங்கள் எதுவும் தெரியாது. அதனால் பகவானிடமே பாடம் கேட்டார். 1923ல் தொழில் குடும்பம் எல்லாவற்றையும் விட்டு பகவானிடமே வந்துவிட்டார். 1973ல் தேக வியோகம் வரை திருவண்ணாமலையிலேயே இருந்தார். தமிழ்ப்பற்றால் பெயரை முகவை கண்ண முருகனார் என்று எழுதினார். பகவானின் அருட் கருணையால் கவிதை ஊற்றெனப் பெருக , பக்வானின் உபதேசங்களை அவர் சொல்லும் பொழுதே தமிழிலேயே எழுதி அவற்றைச் செய்யுளாக யாத்து அவற்றைப் பகவானிடமே காட்டி ஒப்புதலும் திருத்தமும் பெற்று “குருவாசகக் கோவை” என்ற மகத்தான செய்யுள் நூலை எழுதினார். ஸ்ரீ ரமணரின் அசல் உபதேசங்களை உள்ளபடி அறிய இதுவே ஆதாரமாக இருக்கிறது. அதேபோல் ஸ்ரீ ரமணரின் ஸ்துதி நூலாக “ஸ்ரீ ரமண சந்நிதிமுறை” என்ற பக்தி இலக்கியத்தையும் எழுதினார்.”திருவாசக நிகரே” என இதைப்பற்றி பகவானே குறிப்பிட்டார்.
  இப்படி எல்லாவற்ரையும் விட்டு, தாங்கள் முன்பு பின்பற்றிய மார்க்கங்களையும் விட்டு ஸ்ரீ ரமண பகவானின் உபதேசத்தின்படி அவர் வழியையே பின்பற்றி நடந்த வேறுசிலர் சிவப்ரகாசம் பிள்ளை, சாது நடனானந்தர், மேஜர் சாட்விக், எஸ்.ஏஸ். கோஹன், ஆர்தர் ஆஸ்போர்ன் ஆகியோர். இவர்களே ஸ்ரீ ரமணரின் முதன்மைச் சீடர்கள் என்று கருதப்படவேண்டியவர்கள்.
  ஸ்ரீ காவ்யகண்டர் மரணமடைந்த செய்தி வந்ததும் சிலர் ஸ்ரீ ரமணரிடம் ஸ்ரீ காவ்ய கண்டர் மோக்ஷபதவியை அடைந்திருப்பாரா என்று கேட்டனர். அதற்கு பகவான், “அதெப்படி, அவருக்குத்தான் தேசத்தைப் பற்றிய திடமான பெருத்த சங்கல்பம் இருந்ததே” என்று சொன்னார்! சிவப்ரகாசம் பிள்ளை பகவானது அறிவுரைப்படி தன் சொந்த கிராமத்திற்கே சென்று தங்கி அங்கேயே மரணமடைந்தார். இந்தச் செய்தி கேட்ட பகவான் “சிவப்ரகாசம் சிவப்ரகாசமானார் ” என்று சொன்னார். அன்பர்கள் இதனை ஊன்றிக் கவனிக்கவேண்டும்.

  இங்கு நான் எழுதியதன் நோக்கம் ஸ்ரீ காவ்யகண்டரின் தகுதியையும் ஆற்றல்களையும் விமர்சிப்பது அல்ல. அவர் ஸ்ரீ ரமண பகவானின் மீது மிக்க மதிப்பு வைத்திருந்தாலும் அவர் ஸ்ரீ பகவானின் வழியைப் பின்பற்ற வில்லை, அதனால் அவரை ஸ்ரீ பகவானின் பிரதம சீடராகக் கருத முடியாது என்று சொல்வதுதான். ஸ்ரீ காவ்ய கண்டர் பெரியவர், ஆனால் அவர் ஸ்ரீ ரமண வழியைப் பின்பற்றவில்லை. இதற்கு ஆதாரம் ஸ்ரீ ரமணாஸ்ரமம் வெளியிட்ட நூல்களே தவிர வெளியார் புத்தகம் எதுவும் இல்லை.

 4. Endaro Mahanubhavulu….. Andariki Vandanamulu!

 5. Bhagwan Ramana Maharishi after hearing about the demise of KK Ganapathi Ji seemed to have told…”Will we ever get people like Nayana & remained quiet for sometime”

Leave a Reply

%d bloggers like this: