Two days back i posted an incident and mentioned that I have not read that before. Someone replied that it was an incident narrated by Sri Gopala Ganapadigal and apparently I interviewed him part of my kailash trip. Clearly these are signs of aging!!! So, in that sequence, this photo of Periyava “seems” new to “me” – once again – there are good chances that I have shared it here in the past too!!!
காவியுடை பூண்டிங்குக் கமண்டலமுங் குவளையொடு
பூவுலகின் மேன்மைதகு முனிவரவர் கரிசனமாய்
சீவியத்து நாதியுமாய் செகத்குருவாய் தோன்றியவர்
ஓவியத்து முன்னிலையிற் பணிந்துருகிப் போற்றுவமே!
சத்தியத்துத் திருவுருவில் சித்சுகனாய் திருச்சரணர்
சத்தியுருத் தரிசனமும் தருமருளில் தெளிவுணர்ந்து
பத்தியொடு திருப்பாதம் பணிபவர்க்கு மெந்நாளும்
சித்தியொடு சீர்பலவும் செல்வமுமாய் குமிந்திடுமே!
வந்தகமும் தூய்ப்பித்து குறைகளைந்து நிறைவூட்டும்
சந்ததமும் தந்துநமைக் காத்தருளும் வேதவேந்தனு
கந்தருளும் பூரணத்துப் பொற்பதத்தில் சரண்புகுந்து
அந்தகமும் நிறைவுபெற அனுதினமும் வாழுவமே!
பெரியவா சரணம்! பெரியவா சரணம்!! ஸ்ரீமஹாபெரியவா அபயம்!!!
என்னாளும் எப்பொழுதும் எங்கிருந்தாலும் எம்பெருமான் ஏகம்பத்தலத்தீசன், ஏற்புடை சாந்தஸ்வரூபனின் திருவருளால் எம்மதமும் எவ்வினமும் எம்மனமும் இனிதே ஆனந்தித்து அருளோடு கூடி அறநெறி வழுவாது ஒற்றுமையோடு வாழ்ந்து சிறப்படைய எல்லாம் வல்ல எம்பெருமான் திருவடிகளிலே உங்கள் அனைவருடனுமாக சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பிரார்த்தித்து இந்த குருதுதியான “மும்மணிக் கோவை”யைச் சமர்ப்பிக்கின்றேன்.
குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.
பெரியவா கடாக்ஷம்.
நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.
saanuputhran anna,sooooper poetry;krishnamurthy dasan,mumbai.
தன்யோஸ்மி. பெரியவா சரணம்.