பாதுகா மஹிமை – Sri Bindu Sadhagan

Thanks to Sri Saraswathi Thyagarajan for the share

பாதுகா ப்ரவேசம் ….

எங்கப்பா மோஹந்தாஸ் காளி ப்ராண்ட் கம்பெனி மேனேஜிங்க் டைரக்டர், தாத்தா கோபாலையர். மஹாபெரியவாளோட நிறைய யாத்ரை பண்ணியிருக்கார் .1920 வருஷத்திலேர்ந்து கல்கத்தா காசிலே யாத்திரை பண்றப்போல்லாம் தாத்தா பெரியவாளோட இருந்திருக்கா.

நான் கும்பகோணத்திலேதான் பொறந்தேன். நான் பொறந்த கொஞ்சமாசத்துக்கெல்லாம் தாத்தா என்னைக் கொண்டுபோய் காஞ்சிலே பெரியவாகிட்டே காண்பிசிருக்கார். நாலு வயசிலேர்ந்தே மடத்திலே பெரியவா கூடவே இருந்திருக்கேன். தாத்தா தாத்தான்னு ரொம்ப உரிமையா பேசுவேன், சண்டையெல்லாம் போடுவேன். நான் அவரோட அனுபவிச்சதெல்லாம் சொல்ல வேணுமானால் நூத்துக்கணக்கா சொல்லணும்.நினைவுஇருக்கிறதை மட்டும்சொல்றேன்..

சதாராவில்பெரியவா தங்கியிருந்த போது அந்த ஊர் ப்ராம்மணால்லாம் சட்டை
போட்டிண்டிருப்பா. முண்டா பனியன்போட்டின்டிருப்பா, முண்டாசு கட்டிண்டிருப்பா,

அவாள்ளாம் பெரியவா பாதத்தைத் தொட்டு நமஸ்காரம் பண்ணிட்டுப்போவா .
எனக்கு அப்போ 13 வயசு. எனக்கும் பெரியவாளைத் தொடணும்ன்னு ஆசை,
பெரியவாளைக் கேட்டேன். ஆனால் அதெல்லாம் பண்ணக்க்கூடாதுன்னு
கோச்சுண்டார். நான் அவர் கிட்டே வாதம் பண்ணினேன் ‘ஏன் நான்
ப்ராம்மனந்தானே ஏன் பண்ணக்கூடாதுன்னு கேட்டேன்; அதெல்லாம்கூடாது
போடன்னுட்டு உள்ளே போய்ட்டார்.

ஆனால்பெரியவா சித்தியாறத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி தரிசனத்துக்குப்
போயிருந்தேன்.பெரியவா என்னைக்கூப்பிட்டு வேச்சு ரொம்ப நாழி பேசிண்டிருந்தா.

பெரியவா யார் கிட்டேயும் பேசல்லை ந்னு எல்லாரும் சொல்லிண்டிருந்தா,
ஆனால் என்னை அன்று முதல்முறையாக பிந்து என்று கூப்பிட்டது எனக்கு
அதிர்ச்சியா இருந்தது. கோபலையர் பேரன்ன்னு தான் சொல்வார். திடீர்ன்னு தன்
பாதத்தை என் வலது தோளில் வைத்து ஆசிர்வாதம் பண்ணினார்.

‘உன் சிரமத்தப்போ நான் இருக்கமாட்டேன் ஆனாலுன்னைப் பார்த்துப்பேன்’ என்றார்

அப்போ எனக்கு 27 வயசு. எனக்கு நான் இருக்க மாட்டேன் ஆனா பார்த்துப்பேன்ன்னு சொன்னது புரியல்லை..

பாலு மாமாகிட்டே ‘ என் கடைசி வஸ்த்ரம்,பாதுகை, ருத்ராக்ஷம் எல்லாத்தையும் இவனிடம் குடுத்துடுந்னு ‘ சொல்ல்லியிருக்கா.

இது நடந்தது எனக்குத் தெரியாது 2010 வருஷம் என் அம்மாவுக்கு சர்ஜரி இல்லாம
உடம்பு குணமானா பெரியவா தரிசனம் பண்றதா வேண்டிண்டு இருந்தேன்.
அம்மாவையும் கூட்டிண்டு நேரா ஆஸ்பத்திரிலேர்ந்து அதிஷ்டான தரிசனத்துக்குப் போயிட்டேன். பாலு மாமா சன்னிதிலே நின்னுண்டு இருக்கா! பெரியவா வஸ்த்ரம், பாதுகை எல்லாம் குடுத்தா பாலு மாமா! 1980லே கட்டிருக்கேன் அப்போ பேசாம சிரிசுண்டு போயிட்டார் நானும் விட்டுட்டேன்.

ஆனா பாருங்கோ 1994 லே பாதுகை வஸ்த்ரம் ருத்ராக்ஷமெல்லாம் எங்கிட்டே குடுக்கச் சொல்லிருக்கார். சிவராமன் சிவன் ஸாரோட வஸ்தரம் கொடுத்திருக்கார். கண்னன் பெரியவாளோட ம்ருத்யு கொடுத்தார். பெய்யவா அனுஷம் சிவன் சார் பூசம் இரண்டும் நடக்கிறது. என்மனைவி மடி ஆசாரத்தோட பண்ணுவா. பெரியவா என் குடும்பத்திலே ஒருத்தரா இருக்கார்.. இந்த வெள்ளிக்காப்பு எல்லாம்போட எனக்கு சம்மதமில்லை. வெள்ளித் தட்டிலே அப்படியே வெசுருக்கோம் , பூஜை அலங்காரம், நேவெத்யம்தான். வஸ்த்ரம் கண்ணாடிப் பெட்டிலே வெசுருக்கோம்’.ஆத்மார்த்தமா பூஜைபண்றோம்

இப்படிப்பகிர்ந்தது பிந்து ஸாதகன்

kali groupof companies
Mount road chennai

நன்றி ஸ்ரீ காஞ்சி மஹானின் பாதுகா மஹிமை
டாக்டர் .ஷ்யாமளா ஸ்வாமினாதன்

ஜய ஜய சங்கரா……



Categories: Devotee Experiences

Tags:

4 replies

  1. ஜெய ஜெய சங்கரா ஜெய ஜெய சங்கரா சரணம் சரணம் . ஜானகிராமன் .நாகப்பட்டிணம்

  2. Blessed to even read the experience. Can i have his contact details.

  3. Kindly translate into english.

Leave a Reply

%d bloggers like this: