Thanks to Sri Suryanarayanan for the FB share. I think I have shared this already but not too sure.
முன்னாள் முதல்வர் எம்.ஜி . ராமசந்திரன் அவர்கள் பெரியவா ஆசியுடன் அமெரிக்கா சென்று, ஆபரேஷன் செய்துகொண்டு திரும்பியதும் ஒரு முறை காஞ்சி வந்து, பெரியவாளை தரிசனம் செய்தார்.
‘நான் மடத்துக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன். உத்தரவிடவேண்டும் ‘ என்று அடக்கமாக வேண்டிக்கொண்டார்.
சுவாமிகள், ‘இங்கே வார தீர்த்தம் என்று ஸ்நானம் செய்ய குளங்கள் இருக்கின்றன . அவற்றைச் சுத்தப்படுத்தி எப்போதும் பராமரிக்க வேண்டும். அது போதும் ‘ என்றார்.
சோம வாரத்தில் ஏகாம்பரேசுவரர் குளம், செவ்வாய்க் கிழமைகளில் எதிரே இருக்கும் மங்கள தீர்த்தம்; புதன் கிழமை சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள காளிகா மேட்டில் இருக்கும் சத்ய வ்ரத தீர்த்தம், வியாழன் காயாரோகண தீர்த்தம், வெள்ளிக்கிழமை காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள சுக்ரவார தீர்த்தம், சனிக்கிழமை சர்வ தீர்த்தம் இப்படி ஜனங்கள் சென்று நீராடுவார்கள் .
“எனக்கு எல்லாக் குளத்துக்கும் போக முடியாது; இந்த மடத்துக்கு எதிரில் உள்ள குளத்தை அதன் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்து கொடுக்கச் சொன்னால் மங்கள வாரம் அந்த தீர்த்தத்தில் நான் நிம்மதியாக நீராடுவேன்” என்றார்.
அவ்வாறே செய்து கொடுக்கப்பட்டது. ஆனாலும் அதில் ஸ்னானம் செய்யப் போவது, திரும்புவது எல்லாமே மிகவும் கடினமாக இருந்தது. கிட்டத்தட்ட இரண்டுமாடி இறங்கி ஏறுவது போல் அவை அமைந்திருந்தன. அதிலும் கடும் வெயில் அல்லது மழைக்காலங்களில் சிரமமாக இருந்தது. . இப்படி உடலை வருத்திப் போய் ஸ்நானம் செய்ய வேண்டாமே என்று மடத்திலிருந்தவர்கள் தடுத்துப் பார்த்தார்கள். கேட்கவில்லை. இதைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெரியவருக்கு பொறுக்கவில்லை. வெயிலின் கொடுமையால் தவித்துக் கொண்டே படியேறி வந்தவர் பெரியவா காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தார். அழுதார்.
“பெரியவா பெருமைக்கும், வயதுக்கும் இப்படி சிரமப்பட்டு ஸ்நானம் செய்து விட்டு வருவது தேவையா? அவா மடத்திலேயே வேளா வேளைக்கு ஸ்நானம் பண்ணிண்டு சௌக்கியமா இருக்கணும். உடம்பை வருத்திக்கக் கூடாது. பெரியவாளுக்கு உடம்பு ;லட்சியமில்லாமல் இருக்கலாம். தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாம். அனால், எங்களுக்கெல்லாம் பெரியவா ரொம்ப முக்கியம். இந்த சரீரத்துடன், ஆரோக்கியமாக நீண்ட நாள் இருக்கணும். பெரியவா இப்படியெல்லாம் பண்ணப்படாது” என்று பொழிந்து தள்ளினார்.
மேலும் ” இப்படி நாள் பார்த்து அந்தந்த குளங்களில் குளிப்பது என்பதெல்லாம் எங்களை போன்ற சாதாரண மக்களுக்கு; பெரியவாளுக்கு புதிதாக என்ன புண்ணியம் வர வேண்டும்? அவாளோ சாட்சாத் ஈஸ்வரன் ஆச்சே!” என்று கூறினார்.
பெரியவா அமைதியாக பக்கத்திலிருந்தவரிடம் , “அவரிடம் சொல்லு; இது மாதிரி தீர்த்த ஸ்நானம், பூஜை,ஜபம், தபம் ஒண்ணும் வேண்டாம் – எப்போ தெரியுமா? வேளா வேளைக்கு பசிக்கக் கூடாது, வீதியில் நடக்கும்போது காலில் ஏதும் குத்தினாலும் வலி தெரியக்கூடாது. நம்மை யாராவது வைதால் முகம் மட்டுமல்ல மனசு கூட வாடக் கூடாது. இப்படிப்பட்ட நிலை வந்து விட்டா, இந்த கர்மானுஷ்டங்கள் தேவையே இல்லை. எனக்கு இன்னும் அந்த நிலைமை வரவில்லை. வந்தால் விட்டுடறேன்” என்று பதில் சொன்னார்.
ஒன்று கவனிக்க வேண்டும் . வேளா வேளைக்கு சாப்பிடக்கூடாதுன்னு சொல்லவில்லை. வீம்பு பிடித்துக் கொண்டு சாப்பிடாமல் கூட இருந்துவிட முடியும். ஆனால், பசிக்கக் கூடாது என்கிறார். அது சாத்தியம் இல்லை. ஜிதேந்திரியனால் தான் அது முடியும்.
பெரியவா என்றைக்காவது பசிக்கிறது என்று சொல்லியிருக்காரா ? மடத்தில் கைங்கர்யம் பண்ணுபவர் அதிகமாகக் கஷ்டப்பட்ட சமாசாரமே பெரியவாளை பிட்சை பண்ண வைப்பதுதான். “சுவாமிகளே..சாப்பிட வாங்கோ, வாங்கோ ..” என்று கதற வைப்பார் அவர்.
-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர் – எஸ். கணேச சர்மா
(இது நாம் எந்த நிலையில் இருக்கிறோம், எந்த நிலைக்கு போகவேண்டும் என்று நமக்கு சொல்லிக் கொடுப்பதற்காகவோ?)
Categories: Devotee Experiences
Periva’s message is well received, however impossible to apply! Isn’t it?
Translation
The former TN CM MGR, with the blessings of Periyava went to American for an operation. He returned to India after surgery and went to have darshan of Periyava again. He requested Periyava and wanted to know if he could do anything for the mutt.
Periyava said there were Theertha Kulas (temple ponds) where people bath each day of the week. Monday, Ekambareshwara, Tuesday Mangala Theertha (which was in the opposite),Wednesday Satya Vratha Teertha in Kalikamba Medu, Thursday Kayarohana Teertham, Friday, Kamakshi temple Shukravara Teertham, Saturday Sarva theertham, Periyava said he visits the Mangala Teertham which was opposite to his abode and asked if he could clean that Teertha and its surroundings. It was done.
Periyava used to go there for snanam climbing up and down the long stairs and even on hot days. There was an old devotee who saw this.. He could not tolerate to see how Periyava climbed up and down even at his old age. He prostrated in tears in front of the Lord and said “Taking bath in such temple ponds to gain punya was only for we common people.,.What was the necessity for Sarveshwaran to do this! We need Periyava in good health for a long time to be with us.”
Peryava responded to this and told one of his shishyas, “Tell him, such snana, pooja, japa and thapa is not needed – you know when, only when one does not feel hunger, when one walks on the street and anything pricks his sole he should not be able to feel the pain and when cursed or scolded by others one should not be able to feel the pain…when one attains such a state of mind, karma anushtanams are not needed, when I (Periyava) attain such a state of mind, I (Periyava) will leave all this.”
Point to be noted is He did not say “do not eat” but says one should not feel hunger, this is possible only when we have conquered our senses…(Jitendriya).
The greatest task for his shishyas in mutt had been to make Sarveshwaran (Periyava) take his food. They had to plead with him to take his food. HE has never said he has ever felt hungry!!
Periyava Charanam
Karunai Deivam Kanchi Mamuni- by Shri Ganesha Sharma.
(This incident will help us analyze in which stage of life we are in).
Periyava Charanam Periyava Charanam
English translation please
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கரா .ஜானகிராமன் .நாகப்பட்டிணம்
I was blessed and fortunate to erect a temperory asbestos sheet shed in 3 days with the guidance of Sri.Kannan ( Mahaswamy close asst ,later Kasi Kannan Swamigal) for HHMahaswamy to stand under shadow and pray after Snanam in front of Mangala Thirtham temple , first time after cleaning and encroachment removal was done . Our family was fortunate to witness and happy when Periava recognised ,called them by name before snanam .
இதை படிக்கும் போது பெரும்பாலான பக்தர்கள் முதல் படிக்கட்டில் இருப்பதை உணர்வர். மகாபெரியவா சொல்லி இருப்பது குறிக்கோளும் பாதை ஆகவும் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். Sarvapriananda சொல்வார் , dont worry.. you have always another birth.