87.1 Sri Sankara Charitham by Maha Periyava – Final liberation

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Who else can explain (Brahma) Nirvana better than our Periyava drawing parallels with other religions and what Bhagawan has said in Bhagawad Gita on the subject.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for the opportune sketch and audio. Rama Rama

 

(நிர்வாணம்)

(ஜைன மதத்தையும் பௌத்த மதத்தையும் ஒன்று மாதிரியே இணைத்துப் பேசுவது வழக்கம். ஜைனர்களில் வஸ்த்ரமில்லாமலிருக்கும் பிரிவினரே ஜாஸ்தி. ‘ச்ரமணர்’ எனப்படும் அவர்களைத் தமிழில் சமணர் என்றும் அமணர் என்றும் சொல்வார்கள். அதனாலேயே நிர்வஸ்திரமாயிருப்பது ‘அ(ம்)மணம்’ எனப்படுகிறது. அமணர்களுடைய லக்ஷ்யத்தை பௌத்தர்களின் நிர்வாணத்தோடு ஒன்றுபடுத்தியே, அம்மணமாயிருப்பதை நிர்வாணம் என்றும் சொல்வதாயிற்றோ என்னவோ?

நிர்வாணம் என்பதற்கு நேர் அர்த்தம், ‘தீபத்தை ஊதி அணைப்பது’. ஒரே சூடாக தஹித்துக் கொண்டு, ப்ரகாசித்துக் கொண்டிருந்த சுடர் அடியோடு இல்லாமலே போய்விடுவது தான் நிர்வாணம். இப்படி அக்னியை க்ஷணத்தில் அடியோடு இல்லாமல் பண்ணிவிடுகிற மாதிரி வேறே எதையும் பண்ண முடியாது. ஜலத்தைக் காய்ச்சி, கீய்ச்சிப் பொங்க வைத்துத்தான் வற்றடித்து இல்லாமல் பண்ணனும். இப்படியே மற்ற பூதங்களையும். அப்போதுங்கூட அவையெல்லாம் அணுக்களினால் ஆனதால், நாம் அழிந்துவிட்டதாக நினைத்த பிறகும், நம் கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் வேறே ரூபத்தில் இருந்து கொண்டுதானிருக்கும். Matter-ஐ destroy பண்ணவே முடியாது என்று சொல்கிறார்கள். அக்னி அணுகளாலானது அல்ல. (அக்னி எரிவதற்குத்தான் ஆக்ஸிஜன் வேண்டுமே தவிர, அக்னியே ஆக்ஸிஜன் அணுக்கள்தான் என்று நினைத்து விடக்கூடாது). அணுக்களால் உண்டாகாததால் அக்னியைத்தான் அடியோடு ரூபமே இல்லாமல் பண்ணி அழிக்க முடிகிறது. அம்மாதிரி அணைந்து போவதுதான் நிர்வாணம். பூதங்களிலேயே ரொம்ப வீர்யத்துடன் இருப்பது அக்னி. அக்னியின் சின்னப் பொறி மேலே பட்டால்கூடத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த சின்னப் பொறியே பெரிய ஜ்வாலையாகி ஊரையெல்லாம் கொளுத்திவிட முடியும். காற்று, ஜலம் முதலான எந்த பூதத்துக்கும் இத்தனை வீர்யம் இல்லை. ஆனாலும் இப்படியிருக்கும் அக்னியைத்தான் அடியோடு ரூபமில்லாமல் அழிக்க முடிகிறது! காற்றை அழிக்க முடியுமா?

ஜீவாத்ம பாவம் என்று ஒன்று. கண், காது, மூக்கு முதலான அநேக அவயவங்களைக் கொண்ட சரீரத்தின் நூறு லக்ஷம் அநுபவங்களைப் பெற்றுக் கொண்டு ரொம்பவும் ஸ்ட்ராங்காக இருக்கிறது. மனஸு, சித்தம், புத்தி, அஹங்காரம் என்ற நாலைக் கொண்ட அந்தஃகரணம் என்பதால் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகத் தான் ஒரு ஜீவன் என்ற பாவம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நாலையும் கொஞ்சங்கூட அடக்கிக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்தஃகரணத்தின் ஆசைகளை சரீர அவயங்களின் மூலம் அநுபவித்துக் கொண்டே போவதாக இருக்கிறது. ‘சரீரமே நான்’ என்று நினைப்பதான ஜீவாத்ம பாவம் ஆணிவேர் விட்டுக் கொண்டு ஆழமாக ஏற்பட்டு விடுகிறது. ரொம்ப வீர்யத்துடன், அக்னியைப் போல, வறுத்தெடுப்பதாக அது இருக்கிறது. அப்படிப்பட்ட அதை அடியோடு அழித்து விடுவதும் அக்னியை அணைப்பது போலத்தான் என்பதாலேயே இதற்கும் ‘நிர்வாணம்’ என்று பேர் கொடுத்தார்கள். கொஞ்சங் கொஞ்சமாக ஸாதனா மார்க்கத்தில் முன்னேறித்தான் அந்த நிலையை அடைய முடியுமானாலும் கடைசிப் படியில் ஈச்வராநுக்ரஹம் என்பது ஒரு புயல் காற்று அடித்து தீபத்தை க்ஷணத்தில் அணைப்பது போலத்தான் ஒரே வீச்சில் ஜீவாத்ம பாவத்தை அழிக்கும். அதனால் ‘நிர்வாணம்’ என்று பெயர் கொடுப்பது ரொம்பவும் பொருத்தமாகிறது.

‘நிர்வாணம்’ என்று புத்தர்தான் முதலில் சொன்னாரென்று ஒரு தப்பபிப்ராயம் இருக்கிறது. அவருக்கு முந்தியே ‘லிபரேஷ’னை (ஆத்மாவின் முடிவான விடுதலை நிலையை) நம் சாஸ்த்ரங்களில் அப்படி (‘நிர்வாணம்’ என்று) சொல்லியிருக்கிறது. கீதையில் பகவான், ஸ்தித ப்ரஜ்ஞனை (ஞான நிலையிலேயே ஊன்றியவனை) வர்ணித்து முடிக்கிறபோது “ப்ரஹ்ம-நிர்வாணம்-ருச்சதி” (ப்ரம்ம நிர்வாணத்தை அடைகிறான்) என்றே சொல்லியிருக்கிறார்1. அப்புறம், ‘தனக்குள்ளேயே அடங்கி ஸுகித்துக் களித்துக் கொண்டு உள்ளோளியிலேயே முழுகிப்போன யோகி உயிர் வாழும்போதே ப்ரம்மமாயிருந்து ப்ரம்ம நிர்வாணம் அடைகிறான்’ என்று ‘ஸந்நியாஸ யோகம்’ என்ற அத்யாயத்தில் சொல்கிறார்:

யோ (அ)ந்த: ஸுகோ (அ)ந்தராராம-ஸ்ததாந்தர்-ஜ்யோதிரேவ ய: |
ஸ யோகீ ப்ரஹ்ம-நிர்வாணம் பரஹ்மபூதோ (அ)திகச்சதி ||2.

வித்யாஸம் என்னவென்றால் புத்தர் ‘நிர்வாணம்’ என்று மட்டும் சொல்லியிருக்க பகவான் ‘ப்ரஹ்ம நிர்வாணம்’ என்கிறார். முக்யமான வித்யாஸம். புத்தர் ‘நிர்வாணம்’ என்று மாத்திரம் சொல்வதால் ஜீவாத்ம பாவம் அடிபட்டு, அழிவுபட்டு, ஒரே சூன்யமாய் விடுவதை மட்டுமே குறிப்பிடுகிறார். இப்படி ஜீவாத்மா அழிந்து போய் ஒரே சூன்யமாகிவிடாமல், ஜீவாத்ம பாவம் அழிந்தாலும் பரமாத்மாவான ப்ரம்மமாகவே ஆகிவிடுகிறான் என்ற பரிபூர்ண நிலையைக் குறிக்கத்தான் பகவான் ‘ப்ரஹ்ம நிர்வாணம்’, ‘ப்ரஹ்ம நிர்வாணம்’ என்று ஒவ்வொரு தடவையும் சொல்கிறார்.)

சுகர் ஸந்நியாஸி என்பவனுக்கு ஏற்பட்ட காவி வஸ்த்ரமும் போட்டுக் கொள்ளாமல் திகம்பரராக இருந்தவர் என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

விசேஷம் என்னவென்றால், அவர் தம்மளவில் ஸ்த்ரீ-புருஷ பேதம் தெரியாத பரிசுத்த நிலையில் நிர்வஸ்திரமாயிருந்தது மட்டுமில்லை. இந்த பேத உணர்ச்சி நிறையவுள்ள இதர ஜனங்களுங்கூட அவருடைய ஸாந்நித்ய விசேஷத்தினால் தாங்களும் அந்த தோஷம் இல்லாதவர்களாகி விடுவார்கள்.

ஒரு கதை உண்டு. அவர் பூணூல் போடுவதற்கு முந்தியே பரிவ்ராட்டாக ஓடினார், பின்னாலேயே வ்யாஸர், “புத்ரா, புத்ரா!” என்று ஓடினார் – என்று சொன்னேனல்லவா? பால்யத்திலேயே அப்படி அவர் (சுகர்) ஓடியிருக்கக்கூடும் என்று நான் சொன்னாலும், இந்தக் கதைப்படி அவர் நல்ல யௌவன ப்ராயம் வந்தபின்தான் அப்படிப் போனது…… வ்யாஸர் தனக்கு ஸத்புத்ரன் வாய்க்க வேண்டுமென்ற தாபத்தோடு, பிரார்த்தனையோடு யாகாக்னிக்காக அரணிக் கட்டையைக் கடைந்து கொண்டிருந்தார்; அந்த அக்னியிலேயே சுகர் ஜ்யோதி ஸ்வரூபமாக உத்பவித்தார்; உத்பவிக்கும்போதே யுவாவாக இருந்தார் – என்றும் அபிப்ராயமுண்டு. ஆக, கட்டிளம் காளை உருவத்தில் அவர் பாட்டுக்கு வஸ்த்ரமில்லாமல் போய்க் கொண்டிருந்தார்.

வழியில் ஒரு இடத்தில் ஸ்திரீகள் ஸ்நானம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நடுவில் சுகர் நிர்வஸ்திரமாக வருகிறார். அவர்களும் அந்த மாதிரியே இருக்கிறார்கள். ஆனால் அவர் அப்படி இருப்பதும் ஸரி, தாங்கள் அப்படி இருப்பதும் ஸரி, இரண்டுமே அந்தப் பெண்டுகளுக்கு கொஞ்சங்கூட விகல்பமாகத் தெரியவில்லையாம்! லஜ்ஜையே உண்டாகவில்லையாம்!

சுகர் மேலே போய்விட்டார்.

ஒரு நிமிஷம் கழித்து வ்யாஸாசார்யாளும் அந்த வழியிலேயே ஓடி வந்தார். இவர் நல்ல வ்ருத்தர். மரவுரி, மான் தோல் எல்லாம் போட்டுக் கொண்டு உடம்பை நன்றாக மூடிக் கொண்டிருப்பவர்.

இவரைப் பார்த்தவுடன் அந்த ஸ்திரீகளுக்கு ரொம்பவும் வெட்கமேற்பட்டு, துணிகளை வாரிப் போட்டுக் கொண்டார்களாம்!

“அதென்ன? என் குமாரன், காளைப் பருவத்துக்காரன் போனபோது நீங்கள் பாட்டுக்கு ஸ்நானம் பண்ணிக் கொண்டிருந்தீர்கள்! நான், கிழவன், வருகிறபோது வெட்கம் தாங்க முடியாமல் அவதிப்படுகிறீர்கள்?” என்று வ்யாஸர் கேட்டாராம்.

“வயஸு என்னவாயிருந்தாலென்ன? அவருடைய நிர்மலம் தான் எங்களையும் தொட்டுடுத்து. அவர் ஸந்நிதியிலே எங்களுக்கும் பேத உணர்ச்சி தெரியலை” என்று அவர்கள் பதில் சொன்னார்களாம்!
__________________________________________________

1 II. 72
2 V. 24 இதற்கடுத்த 25-வது, 26-வது ச்லோகங்களிலும் ‘ப்ரம்ம நிர்வாணம்’ என்று சொற்றொடர் வருகிறது.

____________________________________________________________________________________________________________________________

Final liberation

(It is common to refer to Jainism and Buddism as though they are similar to each other.  Among Jains, the category of people who are unclad is more.  They, the ‘Sramanas’ [श्रमणाः], are called ‘Samanar’ [சமணர்] and ‘Amanar’ [அமணர்] in Tamizh.  That is why, being unclothed is called, ‘A(m)manam’ [அம்மணம்].  Could it be perhaps, that being unclothed, came to be called Nirvana (निर्वाण), owing to the link drawn between the objectives of Amanas with that of the Nirvana of Buddhists?

The direct meaning of Nirvana is, ‘to extinguish a lamp by blowing’.  The flame which was burning bright and was scathing hot, getting eliminated is Nirvana.  It is not possible to eliminate anything else in a second, as can be done to fire.  Water can be removed by only heating, boiling and drying it up.  So is the case with other elements too.  Since they are all made up of atoms, even if we think they have been destroyed and are not visible to our eyes, they will continue to be in some form or other.  It is said that matter cannot be destroyed.  Fire is not made up of atoms.  (Fire does need oxygen to burn, but it should not be construed that fire is made up of oxygen atoms).  Because it is not made up of atoms, it is possible to eliminate fire completely.  Nirvana is such an extinguishment.  Among all the elements, fire has the greatest energy.  It is not easy to bear even a small spark of fire if it falls on the body.  The same small spark can turn into a huge fire and burn down the entire town.  None of the other elements, like air or water, have so much power.  However, it is possible to totally extinguish fire alone, making it formless!  Can air be so destroyed?

There is this sense jeevatma [जीवात्मा] in every individual, which is very strong, which receives infinite number of experiences from this body comprising of the various parts like eyes, ears, nose, etc.

The inner consciousness [अन्तःकरण-anthakarana] consisting of mind [मनः], thought [चित्तम्], intellect [बुद्धि] and ego [अहंकारम्], results in everyone individually developing the feeling that they are a separate entity.  One is unable to rein in and control these four, even a little.  All the desires of the inner consciousness get satisfied through the sensory organs of the body.  The impression that the body is the jeevatma, gets deeply entrenched like the taproot [of a tree]. This sense that the body is the ‘I’, is scorching like the heat of fire, with great energy.  Since extinguishing such a thing completely is similar to extinguishing a fire, it has been given the name ‘Nirvana’. Although that state can be attained only by progressing gradually on the path of diligent practice, in the last stage, the grace of Eswara will shower and extinguish the notion of Jeevatma, like the winds of a storm extinguishing the flame of a lamp in a single blow.  Hence, giving the name ‘Nirvana’ is quite apt.

There is a wrong opinion that Buddha was the first one to speak about ‘Nirvana’. Much before him, our Sastras have described liberation (the final free state of the atma) as this (as ‘Nirvana’). In the Gita, while concluding his description of a ‘Stitaprajna’ [स्थितप्रज्ञ-one who is ever immersed in the state of supreme knowledge], He says that the person, “brahma-nirvanam rucchati’ (attains Brahma Nirvana)1!  In the chapter on Sanyasa Yoga, He says a Yogi, immersed within himself, blissful and joyful, remains a Brahmam, while still living, and attains Brahma Nirvana’.

yo (a)ntha: suko (a)ntaraaraama-stathaantar-jyothireva ya: I
sa yogi brahma nirvanam brahmabhooto (a)dhigachati II2

योऽन्त:सुखोऽन्तरारामस्तथान्तज्र्योतिरेव य: ।
स योगी ब्रह्मनिर्वाणं ब्रह्मभूतोऽधिगच्छति ।I2

The difference is, while Buddha only said Nirvana, Bhagavan says ‘Brahma Nirvana’. A significant difference. Since Buddha only mentions Nirvana, he is pointing to the notion of jeevatma getting demolished, destroyed and becoming nothing.  To show that this jeevatma consciousness, though destroyed, does not becoming nothing, but becomes Brahmam, the Paramatma himself, it is to indicate this complete state that Bhagavan says, ‘Brahma Nirvana’, ‘Brahma Nirvana’ every time!)

I was mentioning that Suka was a Digambara [दिगम्बरः], without even wearing the ochre robes meant for ascetics.

The beauty is that, he, as an individual, was of course in such a pure state of mind, unaware of the male-female distinction, and remained unclothed. But others also, who had this distinction in large measure, became rid of this shortcoming in his presence, on account of his spiritual power.

There is a story.  Did I not tell you that he ran away as a recluse, even before getting initiated with the sacred thread and Vyasa ran behind him, calling out, “Putra, Putra!”?  Although I had said that he could have run like that when he was a child, as per this present story, he ran like that only after attaining a youthful age….. There is another opinion that Vyasa was churning a piece of wood for initiating sacred fire for a yaga with great desire and devotion to beget a virtuous son; Suka appeared out of that fire, brilliant and dazzling; Even as he appeared from the fire, he was a youth. Thus, he was going about without clothes as a young adult.

On the way, in one place, some women were taking bath.  Suka was coming that way, naked.  They were also like that. However, it seems that the women did not feel embarrassed even a little, both at he being so and they also being so.  It seems they did not feel any shame at all.

Suka went ahead.

After a minute, Vyasa came running that way.  He was quite old.  He had covered himself well with tree bark and deer skin.

On seeing him, the women felt very shy and covered themselves hurriedly with their clothes!

Vyasa asked, “What is this?  When my son, a young lad, went this way, you people were taking bath unmindfully.  I am an old man; When I come along, why are you struggling, unable to bear the shame?”.

They replied, “Whatever may be the age.  His purity touched us and we also did not feel the difference in his presence”.  _____________________________________________________________

1 II.72
2 V.24 The sentence, ‘Brahma Nirvana’ is mentioned in the subsequent 25th and 26th slokas also.

____________________________________________________________________________________________________________________________
Audio



Categories: Deivathin Kural

Tags: ,

1 reply

  1. Shri Shri AdhiShankaracharYa Moolamnaya Shri Kanchi Kamakoti Peetam Sawatham Saranam.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading