82.1. Sri Sankara Charitham by Maha Periyava – Later part of life history of Gowda


Jaya Jaya Sankara Hara Hara Sankara – How does Gowdar undergo his curse and how did it he get relived from it? The master story teller and director continues the screen play 🙂

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the translation and Smt. Sowmya Murali for capturing the entire episode in a captivating drawing . Rama Rama

 

கௌடரின் பிற்கால சரித்திரம்

கௌடர் ப்ரம்மரக்ஷஸாக மாறினார். அப்படியே காற்றில் பறந்து போக ஆரம்பித்தார்.

கௌடர் கௌடர் என்று அவர் பிறந்த தேசத்தை வைத்துத்தான் பெயர் சொல்லத் தெரிகிறதேயொழிய அவருடைய நிஜப் பெயர் தெரியவில்லை!

‘அரியக்குடி’, ‘செம்மங்குடி’ என்று ஸங்கீத வித்வான்களில் இருப்பதுபோல ஆசார்ய புருஷர்களில் ‘கௌடர்’!

ஒரு காரணம் தோன்றுகிறது: அவ்வளவாக புத்தி ப்ரகாசமில்லாததால் இவரைக் குறிப்பிட்டுப் பேர் சொல்லிப் பேச எதுவுமிருந்திருக்காது போலிருக்கிறது. நூறோடு நூற்றியொண்ணு என்று இருந்திருக்கிறார். ‘பாவம், இந்த லக்ஷணத்தில் தூர தேசமான கௌட தேசத்திலிருந்து வந்திருக்கிறாரே!’ என்பதை நினைத்து கௌடர் என்றே குறிப்பிட்டிருப்பார்கள் போலிருக்கிறது. அதுவே நிலைத்து விட்டது.

ப்ரம்மரக்ஷஸாகிய கௌடர் காற்றில் பறந்து நர்மதை நதிக்கரைக்கு வந்து சேர்ந்தார். அங்கே ஒரு அரசமரம் இருந்தது. பழைமை வாய்ந்த அரசமரம். அந்த மரத்தில் உட்கார்ந்து கொண்டார்.

அந்த இடத்தை ஏன் தேர்ந்தெடுத்தாரென்றால், அது பஞ்ச கௌட தேசங்களுக்கும் பஞ்ச த்ராவிட தேசங்களுக்கும் மத்தியில் இருந்தது. ஆகையால் உத்தர தேசத்திலிருந்து தக்ஷிண தேசத்திற்குப் போகிறவர்களிலும் ஸரி, தக்ஷிணத்திலிருந்து வட தேசம் போகிறவர்களிலும் ஸரி, ரொம்பப் பேர் அந்த வழியாகத்தான் போவார்கள். சாஸ்த்ராப்யாஸம் செய்பவர்களும் பலபேர் வித்யையை நாடி இப்படி அந்த மார்க்கமாகத்தான் தினமும் போய்க் கொண்டிருந்தார்கள். ஆகையால், ப்ரம்ம ரக்ஷஸாக இருக்கும் வரையில் தனக்கு ஆஹாரமாவதற்கு ஏற்ற அத்யயனக்காரர்களும், அவர்களில் தன்னுடைய ப்ரம்ம ராக்ஷஸ ரூபத்தை நீங்கச் செய்யக் கூடிய உயர்ந்த படிப்பாளியும் இங்கேதான் கிடைப்பார்கள் என்பதால்தான் இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார்.

அங்கே வ்ருக்ஷத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு வழிப்போக்கர்களைக் கூப்பிட்டுக் கேள்வி கேட்பார். குரு சொல்லிக் கொடுத்த கேள்விதான் – ‘பச்’ தாதுவுடன் நிஷ்டா ப்ரத்யயம் சேர்ந்தால் என்ன என்ற கேள்வி.

ரொம்ப நாள் அந்த வழிப்போக்கர்களில் எவருக்கும் இவருடைய கேள்விக்கு ஸரியாக பதில் சொல்லத் தெரியவில்லை. இவர் அவர்களை அடித்துப் போட்டு ஆஹாரம் பண்ணி வந்தார்.

ஒரேமாதிரி ஸ்பெல்லிங் உள்ள வார்த்தைகளெல்லாம் ஒரே மாதிரி உச்சரிப்பு (ப்ரோனௌன்ஸியேஷன்) இல்லாமல் மாறுபடுவதை இங்கிலீஷில் நிறையப் பார்க்கிறோம். B-u-t என்பது ‘பட்’ என்றும், c-u-t என்பது ‘கட்’ என்றும் ஆகிறாற்போல் p-u-t என்பது ‘பட்’ என்று ஆகாமல் ‘புட்’ என்று ஆகிறது. ஒரு குழந்தையிடம் நாம் அடுத்தடுத்து ‘b-u-t-க்கு என்ன உச்சரிப்பு?’, ‘c-u-t-க்கு என்ன உச்சரிப்பு?’ என்று கேட்டுவிட்டு ‘p-u-t-க்கு என்ன?’ என்று தொடர்ந்தால், பட், கட் என்று சொல்லிவந்த அந்த வேகத்திலே அது ‘பட்’ என்றே சொல்லும். ரொம்பவும் பரிச்சயமில்லாத விஷயமானால், குழந்தைதான் என்றில்லை, பெரியவர்களுக்கும்கூட இப்படிக் குளறிப் போய்விடும்.

நல்ல அறிவாளியாகத் தேர்ந்தெடுத்தே மஹாபாஷ்ய உபதேசம் செய்ய வேண்டுமென்று ப்ரம்மரக்ஷஸுக்கு இருந்ததால், (நிஷ்டா ப்ரத்யய விஷயமாக) அவ்வளவு சிறந்த அறிவாளியாக இல்லாதவர்கள் குளறிப் போகும்படியாகக் கேள்வி கேட்பார். என்ன பண்ணுவாரென்றால், ‘புஜ்’ஜின் நிஷ்டா ரூபம், ‘ஸிச்’சின் நிஷ்டா ரூபம் முதலானவை என்ன என்று கேட்டு பதில் சொல்கிறவர் ‘புக்தம்’, ‘ஸிக்தம்’ என்றெல்லாம் சொல்லி வரும்போதே சட்டென்று ‘பச்’சின் நிஷ்டா ரூபத்தைக் கேட்பார். ஸாதாரணமாகவே ரொம்பப் பேருக்கு அதற்குள்ள விதிவிலக்கு தெரியாது. தெரிந்தவருங்கூட இவர் இப்படி அதேமாதிரியான மற்ற வார்த்தைகளைப் பற்றி கேட்ட வேகத்திலேயே இதையும் கேட்கும்போது அவஸரத்தில் குளறிப்போய் ‘பக்தம்’ என்று சொல்லிவிடுவார்கள்.

ப்ரம்மரக்ஷஸ் சிரித்து, “பக்தமா? இல்லை; பக்வம். நீயும் நம் போஜனத்துக்குப் பக்(கு)வம்தான்” என்று சொல்லி தப்புப் பதில் சொன்னவனை ஆஹாரம் செய்துவிடும்.

இப்படியே ரொம்ப காலம் போயிற்று. அநேக வருஷங்களாகிவிட்டன.

அப்புறம் ஒருநாள் ஸர்வ லக்ஷணமாக ப்ரஹ்ம தேஜஸோடுகூட ஒரு பிள்ளையாண்டான் அந்த வழியே போனான்.

அவன் காஷ்மீரத்தைச் சேர்ந்தவன்1. தேசத்தின் அந்தக் கோடியிலிருந்தவன் காதுக்கும் 2000 மைல் தாண்டிச் சிதம்பரத்தில் பதஞ்ஜலி மஹாபாஷ்ய பாடம் சொல்லும் ஸமாசாரம் எட்டியிருந்தது. தானும் கற்றுக் கொள்ள வேண்டுமென்றே இந்த மார்க்கமாகப் போய்க் கொண்டிருந்தான்.

அவனைப் பார்த்ததும் கௌட ப்ரம்மரக்ஷஸுக்கு ரொம்ப ஸந்தோஷமாயிற்று. “எத்தனை காந்தியான ரூபம்! இன்றைக்கு நமக்கு முதல் தரவிருந்து!” என்றே ஸந்தோஷம்!

வழக்கம்போல் ஒரு ப்ராம்மண வேஷம் எடுத்துக் கொண்டு போய் அந்த பிள்ளையின் முன்னால் நின்றார். வழக்கமான கேள்வியையும் கேட்டார் – நிஷ்டா ப்ரத்யயம் சேர்த்து அநேக தாதுக்களின் ரூபத்தைக் கேட்டுவிட்டு, அந்த ஸ்பீடிலேயே ‘பச்’சின் நிஷ்டா ரூபத்தையும் கேட்டார்.

ஆனால் வழக்கத்திற்கு வித்யாஸமாக அந்தப் பிள்ளை ‘பக்தம்’ என்று உளறாமல், குளறாமல் “பக்வம்” என்ற ஸரியான பதிலைச் சொன்னான்!

அப்படி அவன் சொன்னதால், ‘இவனை ஆஹாரம் பண்ண முடியாதே!’ என்று கௌட ப்ரம்மரக்ஷஸ் வருத்தப்பட்டதா என்றால், படவில்லை! ஏனென்றால் இப்போது, “இவன்தான் தக்க பாத்ரம்” என்று அவனிடம் மஹாபாஷ்யத்தை ஒப்புக் கொடுத்துவிட்டு ப்ரம்மராக்ஷஸ ஸ்திதியிலிருந்து விமோசனம் பெற்றுவிடலாமே என்பதில் மஹத்தான ஸந்தோஷமே உண்டாயிற்று!

“நீ யார்? எங்கே போகிறாய்?” என்று கேட்டார்.

“என் பேர் சந்த்ரசர்மா2. சிதம்பரத்தில் பதஞ்ஜலி வ்யாகரண பாஷ்ய பாடம் நடத்துகிறாராம். அதைக் கேட்பதற்காகப் போய்க் கொண்டிருக்கிறேன்” என்று அந்தப் பிள்ளை சொன்னான். “சிதம்பரத்து ஸமாசாரமெல்லாம் மலையேறிவிட்டது! ஆனால் மஹாபாஷ்யம் மட்டும் இங்கே என்னிடமே இருக்கிறது! அவ்வளவு தூரம் போய் நீ தெரிந்து கொள்ள வேண்டியில்லாமல் இங்கேயே நான் கற்றுக் கொடுக்கிறேன். இந்தப் பெரிய நிதியைப் பெற யோக்யதையுள்ளவன் வருவானா வருவானா என்றுதான் வருஷக்கணக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்குத்தான் ஸரியான சிஷ்யனாக நீ வந்து சேர்ந்தாய். பதஞ்ஜலி மஹர்ஷி என்னொருத்தனுக்கு மட்டும் தந்த நிதியை நான் உன்னொருத்தனுக்கு மட்டும் கொடுக்கிறேன். உன்னாலும் உனக்கப்புறமும் அது பல பேரிடம் பரவட்டும். உட்கார். உபதேசம் பண்ணுகிறேன்” என்று கௌடர் சொன்னார்.

1 உஜ்ஜயினி என்றும் சொல்வதுண்டு.

2 சந்த்ரகுப்த சர்மா என்று பதஞ்ஜலி சரிதத்தில் உள்ளது.

__________________________________________________________________________________________________________________________

Later part of life history of Gowda

Gowda got transformed into Brahmarakshas (ब्रह्मरक्षस्).  He started flying in the air.

He is known as Gowda, after the place he was born and his real name is not known!  Just like there is ‘Ariyakkudi’, ‘Semmangudy’, among musicians, ‘Gowda’ is among Acharyas!

There could be one reason.  It looks like that, as he was not so sharp, there may not have been anything worthwhile to specifically attribute quoting his name.  He must have been as a ‘one hundred and one after a hundred’ type of person. Thinking, “Lo! With such attributes, he has come from Gowda, such a far off place!”, he must have been referred to as Gowda itself. That name got established permanently.

Gowda, who had transformed into Brahmarakshas, flew in the air and reached the banks of the Narmada. A peepal tree was there.  A very old peepal tree.  He perched on that tree.

He chose that place since it was located at the centre of the five Gowda and five Dravida regions.  Therefore, most of the people who travelled from north to south and from south to north would go only by that way.  Many people who were learning the Sastras were also only going daily by that way, in their pursuit of knowledge.  He had chosen that place because students suitable to become food for him as long as he remained as a Brahmarakshas, and also the highly learned one among them who would be able to release him from the form of Brahmarakshas, would both be available only in that place.

He would climb up that tree, be seated there and would call the passers-by and ask the question –   the same question that he has been taught by the Guru – “What is the verb form when the ‘nishta pratyaya’, (निष्ठा प्रत्यय) is added to the root word ‘pach’ (पच् धातु)?”

For a long time, none of the passers-by were able to give the correct answer to his question.  He would beat them up and feed on them.

We see that there are several words in English with differing pronunciations though they have similar spellings.  Though ‘b-u-t’ and ‘c-u-t’, become ‘but’ and ‘cut’, ‘p-u-t’ does not become ‘pat’, but becomes ‘put’.  If we ask a child how the words, ‘b-u-t’ is pronounced, how c-u-t’ is pronounced and in quick succession ask the pronunciation for ‘p-u-t’, the child would only say ‘pat’.  If the subject matter is not very familiar, this happens not only with children, but also with elders; it results in a mix up like this.

Since the Brahmarakshas felt that he should choose only a very intelligent person for giving the upadesam of the Mahabhashyam [महाभाष्यम्], he would ask the question (relating to the nishta pratyaya), in a manner which would confuse the not so intellectually bright people. He would ask the nishta form of ‘bhuj’ (भुज्), nishta form of ‘sich’ [सिच्] etc., and while the person responded saying, ‘bhuktam’ [भुक्तम्], ‘siktam’ [सिक्तम्], he would in the same breath, instantly ask the nishta form of ‘pach’ [पच्].  In general, many were not even aware of the exception to that word.  Even those who may have been aware, would get confused when he asked the similar sounding words, and in a hurry would reply ‘paktam’ [पक्तम्].

Brahmarakshas, would laugh, “Is it paktam? No. It is ‘pakvam’ (पक्वम्); you are also fit enough (pakkuvam – digestible) to be my food” and would eat up the person who gave the wrong answer.

Much time passed in this manner.  Many years rolled by.

Then one day, a youth, endowed with all auspicious features and divine lustre (Brahmatejas – ब्रह्मतेजस्), passed by that way.

He belonged to Kashmir1.  The information that Patanjali was teaching Mahabhashyam in Chidambaram, which was more than 2000 miles away, had reached him, who was from the other corner of the country.  He was going in that direction with an intention that he should also learn [the Mahabhashyam].

Brahmarakshas became very happy on seeing him.  The happiness was only about, ‘What a splendorous form! I can have top class feast today!’

As usual, he put on the disguise of a Brahmin and stood in front of the lad.  He asked the usual question – the form of many root words upon joining the nishta pratyaya; he then asked the nishta form for ‘pach’ also, in the same speed.

However, contrary to the usual answer, the lad, instead of blabbering or mixing up and saying ‘paktam’, gave the correct answer – ‘pakvam’!

When the lad said this, did Gowda, the Brahmarakshas, feel bad that he would not be able to eat him?  No.  He felt extremely happy with the thought “This man alone is the eligible one”; the knowledge of Mahabhashyam can be handed over to him and ‘I can then be relieved from the form of Brahmarakshas!’

He asked him, ‘Who are you? Where are you going?”

The boy answered “My name is Chandrasharma2.  I am told that Patanjali is teaching Vyakarana Bhashya at Chidambaram and am going there to learn that”.  Gowda said: “The matter of Chidambaram is long gone over the hills!  But Mahabhashyam is with me, here!  I will teach you that here itself, without you having to go that far to learn it.  I have been waiting for so many years now, to see whether anyone would come by, who is meritorious enough to learn that great Mahabhashyam.  Today, you have come as the right student.  The wealth handed over to me alone by Patanjali Maharishi, will now be handed over to you alone, by me.  Let it spread across to many others through you.  Sit down. I shall teach you”.

1 Also called as Ujjaini

2 It is mentioned as Chandragupta Sharma in Patanjali Charitam.

_____________________________________________________________________________________________________________________________
Audio



Categories: Deivathin Kural

Tags: ,

3 replies

  1. Rare kind of details for any common BhakthA from MahaPerivaa Kanchi Kamakoti Peetarhipathy es Sannithanam,and the Art by Sowmya creates Bhakthi fervor to understand, no doubt should spread to all the Mutts as well Hindu Sanathana Dharma followers. MahaPerivaa Blessings will always flow to the team compiling catering to the society. MahaPerivaa Padarakamalam Saranam.

  2. Excellent drawing. I want to tell shankara charithram using all Sowmya’s drawings as a slide show

  3. hare raama
    hare krishna
    saraswati chandra

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading