தோசை!

 

Thanks Sri RVS for sharing this in FB.

அருணாசலமே அசந்து போகும்படி சலனமேயில்லாமல் அமர்ந்திருப்பார் பகவான். நீண்ட நேரம் அப்படி இருந்தவர் சாப்பிடுவதற்காக டைனிங் ஹாலை நோக்கிச் செல்வதற்காக எழுந்திருக்கிறார். நிறைய பக்தர்கள் கண்ணில் தென்படுகிறார்கள். அன்று ரமணாஸ்ரமத்தில் தோசை இரவு உணவு. தோசை என்றால் அது ஸ்பெஷல் உணவு. எல்லோரும் பகவான் சாப்பிட வேண்டும் என்று ஆசையோடு காத்திருக்கிறார்கள்.

மெல்ல அடியெடுத்து நடந்து வரும் பகவான் கண்ணில் அவன் சிக்கினான்.

“அடடே! குப்பா…. நீயா… எப்ப வந்தே?” ஆதூரத்துடன் விசாரித்துக்கொண்டே அவனருகில் வந்தார்.

அங்கே ஆசாரத்துடன் இருந்தவர்களின் மேல் படாதபடி கூசிக்கொண்டே ஒதுங்கி ஓரத்தில் குப்பன் நின்றுகொண்டிருந்தான். பகவான் எல்லோரையும் ஒதுக்கிக்கொண்டு குப்பனிடம் சென்றுவிட்டார்.

“என்ன குப்பா? சௌக்கியமா? அதென்ன கையிலே?” என்று கேட்கிறார்.

“கூழு சாமி” சங்கோஜத்துடன் பின்னால் நகர்கிறான் குப்பன். கூடி இருந்தவர்களுக்கு இப்போது மனதில் நடுக்கம். அவர்கள் நினைத்தது போலவே அங்கே நடந்தது.

“குப்பா… குடு…. குடு… அந்தக் கூழைக் குடு…” என்று கையில் ஏந்திக் குடிக்கிறார் பகவான். ஆஹா… எவ்வளவு ஆசையா இன்னிக்கு பகவானுக்கு தோசை பண்ணி வெச்சிருந்தோம். இப்போ குப்பன்கிட்டே கூழ் வாங்கிக் குடிச்சுட்டாரே என்று சில பக்தர்களுக்கு வருத்தம். பின்னால் பகவானே சொல்கிறார்

“நான் விரூபாக்ஷிலயும் மலையிலெல்லாமும் திரிஞ்சிண்டிருந்தபோது இதுதானே என் சாப்பாடு… இவாதானே வாஞ்சையோட இதைக் கொடுத்தா..”

பகவான் ஸ்ரீரமண மஹரிஷி கிரிவலம் வரும்போது பாதையெங்கும் அமர்ந்திருக்கும் கிராம மக்கள் இதுபோல கூழைக் காய்ச்சி வந்து கொடுப்பார்கள். பகவான் அதைக் கையில் ஏந்திக் குடித்துக்கொண்டே பிரதக்ஷிணம் வருவார்.

பகவானின் சௌலப்யத்துக்கு இதைவிட உதாரணம் வேண்டுமோ?

**

மேற்கண்ட நிகழ்ச்சி நொச்சூர் சொல்ல என் பாணியில் எழுதியது.Categories: Devotee Experiences

10 replies

  1. Indeed a wonderful episode and thanks for offering it Sri Maheshl

  2. Have not heard this..I have read a lot on Ramanar..so many books.first time,reading this incident..ummm

  3. All are same, if we realize this then we won’t feel differently be it koozh or dosai or who is giving it.

  4. Ramana Maharishi or Mahaperiyava.or Pudu Periyava…they are all one and the same.

  5. Thanks in million…..English translation please

  6. i thinks this is Mahaperiyava forum. Though I have very high regard for sri Bhagwan ramanar, I feel this forum is to speak about Periyava only. My humble view please. Also the photo appears to be morphed or photoshopped. To my knowledge during those period, there was no such tiffin plates made like that. I would be glad if I am wrong.

  7. Om Sri Ramana Maharishy swamuney namaha. Saranam Saranam Janakiraman Nagapattinam

  8. saubhagyam

Leave a Reply

%d bloggers like this: