I believe this was posted in the blog long back – not sure.
Thanks to Sri Varagooran mama for the share…
I am not sure about how things are in India. Here in US, except for very very few brands, 99% of the brands (even organic products) feed meat to cows in their dairy farm. I buy a product called Kalona which is supposed to be unadulterated in anyway. There are few places in TX where pure milk is available….We need to take extra care in avoiding such milk for our consumption and also for puja related purposes.
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-183
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
கிரீஸ் தேசத்து அரசியும்,இளவரசி ஐரீனும் மகா
பெரியவாளிடம் எல்லையில்லாத பக்தி கொண்டவர்கள். ஆண்டுதோறும் (விளம்பரம் இல்லாமல்) தரிசனத்துக்கு வந்து விட்டு, மிகவும் பரவசத்துடன் திரும்பிப் போவார்கள்.
ஒரு முறை, நம் நாட்டிலுள்ள குழந்தைகள், முதியவர்கள், ஏழைகளுக்கு விநியோகிப்பதற்காக ஐ.நா.சபையின் ஏதோ ஒரு துறையின் மூலம் ஏராளமான பால் பவுடர் டின்கள் அனுப்பினார்கள்.ஸ்ரீ மடத்துக்கும் சில நூறு டின்கள் வந்தன.
“ஐரீன்,பால் பவுடர் ஒரு கிலோ டின் நிறைய அனுப்பியிருக்கார்” என்று பெரியவாளிடம் விண்ணப்பிக்கப்பட்டது.”பாடசாலை
வித்யார்த்திகள் உபயோகத்துக்காக-ன்னு எழுதியிருக்கார்.”
சிறிது நேரத்துக்குப் பின், மேல் நாடுகளிலெல்லாம் மெஷின் வைத்துத்தானே பால் கறக்கிறார்கள்? என்று கேட்டார்கள் பெரியவாள்.
“ஆமாம்..”
“பசுவுக்கு வலிக்காதோ?” என்றார்கள்,சிந்தனை தோய்ந்த முகத்துடன்.பின்னர் தொடர்ந்து, “கோனார் கை வைத்துப் பீய்ச்சினால், பசுவுக்கு வலிக்காது. கோனாருக்கு நெளிவு-சுளிவு தெரியும்.மாட்டுக்குக் கஷ்டம்னு தெரிஞ்சா, உடனே கறப்பதை
நிறுத்திடுவான்..” என்று சொன்னார்கள்.
“அந்த ஊர்ப் பசு மாடுகளுக்கு மெஷின் கறவைப் பழகிப் போயிருக்கும்…”-தொண்டர்
“ஆமா! அந்த ஹிம்ஸையைப் பொறுத்துக் கொள்ளைப் பழகிப் போயிருக்கும்….”-பெரியவா.
“அங்கேயெல்லாம் மாட்டு எலும்பைப்பொடி செய்து
தீவனத்தோட கலந்து, பசு மாட்டுக்குக் கொடுக்கிறார்களாம். அதனால்தான் அங்கே பசுக்கள் புஷ்டியா இருக்கு. நிறையப் பால் கொடுக்கிறது” என்றார் ஒரு தொண்டர்.
பெரியவாள் அதிர்ச்சி அடைந்தார்கள். ‘பசுக்களுக்கு எலும்புப் பவுடர்? அசைவ உணவு?’ என்று நெஞ்சுக்குள் சிந்தனையோட்டம்
“அங்கேயெல்லாம் பால் உற்பத்தி என்பது வியாபாரப்
பெருக்கத்துக்காகத்தான். பல நாள் வரை கெட்டுப் போகாதபடி, கருங்கல் மாதிரி, வெண்ணெய் செய்கிறார்கள். பால் பவுடர்,சீஸ் என்று என்னென்னமோ தயாரித்து வெளிநாட்டுக்கு
அனுப்புகிறார்கள். சுவாமிக்கு அபிஷேகம் செய்ய பஞ்சகவ்யமா செய்யப் போகிறார்கள்?”
பெரியவாள் மனம் வருந்துகிறார்கள் என்பது முகக்
குறியிலேயே தெரிந்தது.
“அசைவத் தீனி சாப்பிடுகிற பசுமாட்டின் பாலும் அசைவம்தான். அது நமக்கு வேண்டாம்.பாடசாலைப் பையன்களுக்கும் வேண்டாம் இந்த மாதிரி உணவுகளைச் சாப்பிடுகிற மாணவர்
ஹாஸ்டல் இருக்குமே? மானேஜரைக் கேட்டுண்டு தகுந்த இடத்துக்கு அனுப்பி வை…”
தொண்டர் மானேஜரைக் கண்டு பேச நகர்ந்தார்.
“இதப் பாருடா…பால் பவுடர் டின் கிடைச்சுது. சரியானபடி விநியோகிக்கப்பட்டது.இனிமேல் பால் பவுடர் வேண்டாம்’ன்னு ஐரீனுக்கு எழுதச் சொல்லு…” -பெரியவா.
பெரியவாள் யார் மனத்தையும் புண்படுத்த மாட்டார்கள். பால் போன்ற – சைவத் தீனி உண்ணும் பசுவின் பால் போன்ற–தூய, தெய்வீக உள்ளம்!
Categories: Devotee Experiences
Thankfully it is not as bad in Bharatham as it is in western countries. Since I have close contacts with a few dairy companies I got it confirmed they are not indulging in these practices. It may sporadically happen in a few places though but it will be pretty sparse. As Sri Periyava mentions in Deivathin Kural, all the more reasons for Gosalas & Pinjarapoles to prosper and flourish so these kind of mal practices don’t happen, atleast in our motherland. Rama Rama
இப்படியில்லாமல், பரஸ்பரம் பாவயந்த: என்று பகவான் கீதையில் சொன்ன மாதிரி1 பரஸ்பரம் நாமும் கோவும் ஒருவரையொருவர் போஷித்துக் கொள்ள வேண்டும். கறவைக் காலத்தில் கோவுக்கு நாம் தருகிற போஷாக்கை விட கோவினால் நாம் பெறுகிற போஷிப்பு அதிகமாகும். கறவை நின்ற பிறகும் அந்த நன்றி நமக்கு மறக்கவே கூடாது. அதனால் கோவுக்கு ஆயுள் உள்ளவரையில் அதை ரக்ஷிக்க வேண்டும். கறவை மாடுகளுக்கு மட்டுமில்லாமல் மறுத்துப் போனவற்றுக்கும் பாதுகாப்புத் தர இப்போது எங்கேயோ சில இடங்களில் மட்டுமுள்ள கோசாலைகளும், பசு மடங்களும், பிஞ்ஜராபோல்களும் பலமடங்கு விருத்தியாக வேண்டும். இதற்காகச் செய்கிற செலவு முழுதும் புண்ய வரவேயாகுமாதலால் அனைவரும் தயங்காமல் தங்கள் பொருளையும், பொருளோடு உழைப்பு, கவனிப்பு ஆகியவற்றையும் இதற்காகத் தாராளமாகக் கொடுக்க முன்வரவேண்டும்.
இந்த தேசத்தின் புராதனமான கலாசாரத்தில் ஊறி வந்துள்ள கோரக்ஷண தர்மம் நம் ரத்தத்தில் பேச வேண்டும். அப்படிப் பேசி, ஒரு பசு கன்றுக்கு ஊட்டுக் கொடுப்பதற்கு எப்படித் துடித்துக் கொண்டு போகிறதோ அந்தத் துடிப்புடன் நாம் கோஸம்ரக்ஷணையில் முனைய வேண்டும். – Pujyasri Kanchi Maha Periyava
normal human beings will sure shed a tear or two.
இந்த விஷயம் சில வருஷங்களுக்குமுன் தீவிரமாக செய்தியில் அடிபட்டது. ஐரோப்பாவில், குறிப்பாக இங்கிலாந்தில் பசுமாடுகளுக்கு மாமிசம் கலந்த தீவனம் (meat and bone meal-MBM) கொடுத்து, Mad Cow Disease என்ற வியாதி பரவியது.. இரண்டு லக்ஷம் பசுக்கள் அங்கு பாதிக்கப்பட்டன, உலகம் முழுவதிலும் பல லக்ஷக்கணக்கான பசுக்கள் பாதிக்கப்படன. அவற்றின் மாமிசத்தை மக்கள் தின்றார்கள். இந்த வியாதி மக்களுக்கும் பரவலாம்.
அமெரிக்காவிலும் மாடுகளுக்கு MBM தீவனம் தருவது வழக்கமாக இருந்தது. பூரண சாக பக்ஷிணியான பசுக்களுக்கு இத்தகைய தீவனத்தைத் தருவது அறிவீனம் மட்டும் அல்ல, அயோக்யத்தனமுமாகும். இதெல்லாம் விஞ்ஞானி என்ற பெயரில் உலாவரும் கயவர்களும், லாபம் ஒன்றையே கருதிச் செயல்படுபவர்களும் கலந்து செய்யும் கொடுமை.
இன்று மாடுகளுக்கு இயற்கையான உணவு அளிப்பதில்லை. சுதந்திரமாக மேய விடுவதில்லை. மேய்ச்சல் நிலங்களும் ஊர்களின் வளர்ச்சியினால் குறைந்து, மறைந்துவிட்டன. ரியல் எஸ்டேட் காரத் திமிங்கிலங்கள் அவற்றை வளைத்துப் போட்டு விட்டார்கள். மாட்டுத் தீவனம் என்றபெயரில் ஏதோ தருகிறார்கள். இதில் என்ன ரசாயனப் பொருள்கள் இருக்கின்றன, அவற்றின் மூலம் என்ன என்பதையெல்லாம் யார் கவனிக்கிறார்கள்?
பால் என்ற பெயரில் ஏதோ ஒரு வெள்ளைத் திரவத்தை பாக்கெட்டில் விற்கிறார்கள். ஏதேதோ ஊசி போட்டு பாலைச் சுரக்க வைக்கிறார்கள்; அதனால் வெளியில் கிடைக்கும் பாலின் தரமும் சொல்வதற்கில்லை! பாலை அதிகம் சாப்பிடாதீர்கள் என்பதே பல ஆயுர்வேத டாக்டர்களின் அறிவுரையாக இருக்கிறது.
Yenna seivadhu kali Kaalam. Padika, kaetkavae migavum kashtamagha irukkiradhu.